புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

ஆப்பிளின் அரிய குணங்கள்

ஆப்பிளின் அரிய குணங்கள்

நாள் தோறும் ஓர் ஆப்பிள்பழம் சாப்பிடுகிறவர் வைத்தியரிடம் அடிக்கடி போகத்தேவை யில்லை. இது ஆங்கிலப் பழமொழியானாலும் உண்மையே. ஆப்பிள் பழத்தில் பல்வேறு விட்டமின்களும், சத்துக்களும் காணப்படுகின்றன. அதேநேரம் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இது உள்ளது.

மூளைக்கு வலிமையையும், தெளிவையும் தரும் ஆப்பிள் மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் வலுவடையும், ஈறுகளில் ஏற் படும் புண்கள் வலி, இரத்தம் வருதல் என்பன நீங்கிவிடும். அது மட்டுமா? பேதி ஏற்பட்ட குழந்தைகளுக்கு வேக வைத்த ஆப்பிளைப் பிளிந்து கொடுப்பது நன்று. நரம்புத் தளர்ச்சி, வாய் புலம்பல், தூக்கத்தில் எழுந்து நடத்தல், உறக்கம் இல்லாமை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக ஆப்பில் விளங்குவதாக காணப்படுகிறது.

இப்பழத்தில் கல்சியம், பொசுபரஸ், இரும்பு சர்க்கரை போன்ற பல விட்டமின்கள் உண்டு. உழைப்பாளருக்கு இது மிகவும் ஏற்றது. களைப்பை நீக்கி புதுத் தெம்பையும், மன வலிமையையும் கொடுக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் இதயம், நரம்பு போன்றன நல்ல ஆற்றல் பெறுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.