புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

உடலுக்குத் தரும் பல நன்மைகள்

தன்மை மாறாமல் கிடைக்கும் கிரீன்டீ

உடலுக்குத் தரும் பல நன்மைகள்

நம்மில் அநேகர் தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விடயம் தான். தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, வைட் டீ, யெலோ டீ, ஊலாங் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான தேயிலை வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்துவிட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது கிரீன் டீ மட்டுமே.

ஜப்பானில் உள்ள டோகோஹு பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீயை பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆச்சரியப் படத்தக்க ஆராய்ச்சிகளின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்கக்கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதி படுத்தி உள்ளன.

கிரீன் டீ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடெட்கள் தான். இதனை நோய் எதிர்ப்பு சக்தி என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ¤க்கு சமம்.

சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் கெடுதல் தரும் வேதி பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழி வகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கும் தள்ளிவிடுகின்றன. கிரீன் டீ யின் உயர் தர குணம் நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ் நாட்களை நீடிக்கச் செய்கின்றது. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.