புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

மனதை வெல்லும் மனசாட்சி

மனதை வெல்லும் மனசாட்சி

மனிதன் விடும் ஒவ்வொரு மூச்சும் ஏதாவது ஒரு சிந்த னையிலேயே போகின்றது. அது நல்லதா? கெட்டதா என்று தமது மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.

நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சிக்கு பயந்து நடந்தால் மனித நேயம் வேறூன்றி தழைத்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் நிம்மதியாக வாழ நமது மனசாட்சியை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாவிட்டாலும் மனச்சாட்சி நம்மைச் சித்திரவதை செய்து கொண்டே இருக்கும். இது இயற்கையே. நாம் ஒவ்வொரு வரும் மனசாட்சிக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் கொலை, கொள்ளை, குடும்பப் பிணக்குகள் எதுவுமே ஏற்படாது என்பது திண்ணம்.

நாம் நமது மனசாட்சியை திடப்படுத்திக் கொள்ள பொறுமை, என்னும் ஆயுதம் நம்கையில் இருந்தால் யாராலும் எந்த சக்தியாலும் மனச் சாட்சிக்கு மாறாக வாழ முடியாது.

நாம் தவரென்று அறிந்து கொண்டும், தவறு ஒன்றைச் செய்து விட்டால் இறைவன் தண்டனை தருகிறானோ இல்லையோ, நமது மனச்சாட்சி நம்மை வேதனைப்படுத்துக் கொண்டே இருக்கும். இதி லிருந்து நம்மால் தப்பவே முடியாது. எனவே நாம் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்துவாழ்ந்தால் மனிதர் களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும், ஒரு நல்ல ஜீவனாக வாழலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

திருமதி ஸமீனா தஹ்லான்

பட்டுகொடை

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.