புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

கிரீன் டீ யின் நன்மைகள்

கிரீன் டீ யின் நன்மைகள்

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாது பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.

* வயதானபின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

* மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.

* மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.

* உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

* புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

* கிரீன் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.