புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

கழுத்து வெட்டப்பட்டு கொ^ரமாக கொலை செய்யப்பட்ட இளம் தாய்

கழுத்து வெட்டப்பட்டு கொ^ரமாக கொலை செய்யப்பட்ட இளம் தாய்

ghடசாலை செல்லும் சிறுவர்கள் பாடசாலை அல்லாத நாட்களில் வழமைக்கு மாற்றமாக நித்திரை விட்டு எழும்புவது வழக்கம். அதிலும் மழை நாட்கள் என்றால் இன்னும் கேட்கவா வேண்டும். ஆறு வயது சிறுவனான இந்திக ஸ்ரீ சுரேந்திர அன்று பாடசாலை விடுமுறை என்பதை மறந்து விட்டதனாலோ என்னவோ வழமையாக பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாவதைப் போன்று காலையிலேயே நித்திரை விட்டு எழுந்து விட்டான். அன்று தீபாவளி விடுமுறை (26.10.2011) தினமாகும். இரவு கடுமையான மழை பெய்ததனால் அமைதியான சூழ்நிலையே எங்கும் காணப்பட்டது. இந்திக சிறுவனின் வீட்டின் கூரையிலிருந்து விழும் நீர்த்துளிகளின் ஓசை தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருந்தது.

இந்திக ஸ்ரீ சுரேந்திர சிறுவனுக்கு தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சகல உறவுக்கும் இருந்த ஒரே ஜீவன் அவனுடைய தாய் மாத்திரமே. இதனால் எப்போதும் தாயுடனே சுற்றிச் சுற்றி இந்திக வளர்ந்தான். அவர்களுக்கென உள்ள ஒரே சிறிய வீடு. (புளோக் கல்லினால்) சிறிதாக அமைக்கப்பட்டிருந்த அந்த வீட்டில் அவர்களுக்கென இருந்த ஒரே கட்டிலில் தான் தாயும் மகனும் நித்திரை கொள்வது வழக்கம்.

தம்புள்ள நகரத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் கண்டலம வீதியில் செல்லும் போது குடா மகயாய எனும் கிராமத்தை அடையலாம். இங்கு அதிகமாக உழவர்கள் தான் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் தான் சிறுவன் இந்திக தனது தாயுடன் இச்சிறிய வீட்டில் வசித்தான். அன்று நித்திரை விட்டு எழுந்ததும் தாயை கட்டிலில் காணாத இந்திக, தாயார் அடுப்பங்கரையில் உணவு சமைக்க சென்றிருப்பார் என நினைத்து கட்டிலில் இருந்து இறங்கி அடுப்பங்கரைக்கு செல்ல முற்பட்டான். தனது காலை தரையில் வைத்தவுடன் ஏதோ கசிவான பொருள் காலில் மிதிபட்டதும் அச்சத்தோடு உற்று நோக்கினான். என்ன ஆச்சரியம்! எங்கும் இரத்தம், அதன் மத்தியில் தாய் படுத்திருந்தாள். அதிசயத்துக்கு உள்ளாகின்றான். தனக்கு அருகில் உறங்கிய தாய் எப்படி நிலத்திற்கு வந்தாள்? இவ்வளவு இரத்தம் எங்கிருந்து வந்தது?

அம்மா............ அம்மா...........

இந்திக

ரசிகா

எழுந்திருங்கோ அம்மா............... சிறுவன் ஆத்திரத்துடன் எழுப்ப முற்படுகிறான். தாயிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததினால் பதற்றத்திற்கு உள்ளாகும் அவன் தாயின் மேனியை தாண்டி வந்து வாசல் கதவை திறந்து வெளியே வந்து “எனது அம்மா பேசுகிறார் இல்லை, அம்மா இரத்த வெள்ளத்தின் மத்தியில் வீழ்ந்து காணப்படுகிறார். நான் பேசப்பேச பேசுகிறார் இல்லை.” என்று அவலக்குரலிட்டு அயலவர்களின் உதவியை கோருகிறான். இப்பரிதாபம் கேட்ட அயலவர்கள் அங்கு கூடி இந்திகவுடன் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த இரண்டு அறைகள் மாத்திரம் கொண்ட அந்த சிறிய வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்கிறார்கள்.

சூரியனின் கதிர்கள் இலேசாக நிலத்தில் பட ஆரம்பித்திருந்தன. இதனால் சிறுவன் இந்திகவின் வீட்டிலும் வெளிச்சம் இலேசாக பரவி இருந்ததால் இரத்த வெள்ளத்தில் சிறுவனின் தாய் வீழ்ந்திருந்தது தெளிவாகவும் அதிலும்கோரமாகவே காட்சியளித்தது. இதனை சிறுவன் தனது கைகளால் காட்டி “பாருங்கள் மாமி, எனது அம்மா பேசுகிறார் இல்லை” என்றவுடன் சிறுவன் காட்டிய திசையை பார்த்து அயலவர்கள் அனைவரும் வாயில் கையை வைத்தனர். அதிலிருந்து ஒரு வயோதிபத் தாய்.

“ஆமாண்டி, பெதசினா தங்கச்சியை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இதனை உடனே பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்” காலை 6.35 மணிக்கு தம்புள்ள பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடன் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைகின்றனர். ரசிகாவின் கழுத்தில் பாரிய வெட்டுக்காயம் அதிலிருந்து பீறிட்ட இரத்தம் அவளது மேனியையும் உடைகளையும் சிவப்பாக மாற்றியிருந்தது மட்டுமல்லாமல் அவள் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் போன்று அது எங்கும் பரவி இருந்தது. அந்த இளம் தாயை உடனடியாக ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். கழுத்தில் ஏற்பட்டிருந்த பாரிய வெட்டுக்காயத்தினால் அதிக இரத்தம் பீறிட்டதன் காரணமாக ரசிகா மரணமடைந்திருந்தாள். கொலையுண்ட ரசிகா பற்றி பொலிஸார் முழுமையாக விசாரணை மேற்கொண்டனர்.

ரசிகா அல்லது பெதசினா தாய் தந்தை இல்லாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்தவள். அவளுக்கு பெயர் வைத்தவர்களைக் கூட அவள் அறிந்திருக்கவில்லை. பிறந்தது முதல் துயருடனே வாழ்ந்தவள் அவள்.

இளம் வயதை அடைந்ததும் யெளவன வாழ்வில் இன்பம் காணலாம் என எண்ணி இளைஞர் ஒருவருடன் இரகசியமாக தலைமறைவானாள். அந்த வாழ்க்கையிலும் அவளுக்கு கிடைத்தது இரட்டிப்பான துயரமே கடைசியில் அநாதை இல்லத்தில் கிடைத்த நிம்மதி கூட கைநழுவி விட்டது. இதனால் ரசிகா வீதிக்கு இறங்கினாள். விபச்சாரத்தில் ஈடுபட்ட அவளை திருமணம் செய்து கொள்வதாக பலர் பொய் வாக்குறுதிகளை வழங்கி இன்பம் கண்டனர்.

வசந்தகுமார

மாத்தளை அரச ஆஸ்பத்திரியில் ரசிகா ஒரு பிள்ளைக்கு தாயாக மாறினாள். குழந்தையை கையிலெடுத்து கொஞ்சும் ரசிகா அதை அன்பு காட்டி வளர்த்தாள். எனது அன்பு மகனே உனக்கு தந்தை இல்லாத குறை மாத்திரமே. நான் ஒரு போதும் உன்னை பிரிய மாட்டேன். உன் கூடவே நான் எப்போதும் இருப்பேன் என்று கூறி அன்பு காட்டினாள்.

அவளுக்கு சிறு வயதில் கிடைக்காத அன்பை அவள் பிள்ளைக்கு அவள் வழங்கி மகிழ்ச்சி கண்டாள். இவ்வாறு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய அவள் முன்னைய தொழிலுக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தாள். இதன் போது தம்புள்ள குடமகயாய என்ற இடத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர் அறிமுகம் ஆனார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகன் இராணுவத்தில் பணியாற்றி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருந்தான். அவனது மனைவியும் ஏனைய பிள்ளைகளிருவருடனும் இந்த 55 வயது நபர் மேசன் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தான். இடையில் அறிமுகமான இந்த அழகான ஒரு பிள்ளையின் தாயான ரசிகாவிற்கு உதவி செய்ய அவன் முன்வந்தான்.

அதன்படி பொலிஸாரின் உதவியை வேண்டி தனக்கும் பிள்ளைக்கும் போதுமான வீட்டையும் அமைத்துக்கொண்டாள். இதற்கு பொலிஸாரின் வேண்டுதலில் வர்த்தகர் ஒருவர் உதவி செய்கிறார். மாத்தளையில் இடத்துக்கு இடம் மாறி திரிந்த ரசிகா தம்புள்ளயில் குடியேறிய வரலாறு இதுவாகும். ரசிகாவுக்கு காணியை அன்பளிப்பு செய்து வீடு கட்ட யோசனை வழங்கிய அந்த 55 வயதையுடைய திடகாத்திரமான நபரையும், ரசிகாவையும் பற்றி ஊரார் பலவாறு கதைகளை கட்டினர்.

ரசிகா எனது இரத்தம். அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. நான் மேசன் தொழிலுக்கு செல்லும் போது எனது கண்ணில் அழகான பெண்ணாக காட்சி தந்த ஒரு யுவதியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த யுவதிக்கும் எனக்கும் பிறந்த பிள்ளை தான் இந்த ரசிகா. ஆகவே ரசிகா எனது சொந்த மகள் இது எனக்கு நன்றாகத் தெரியும்.

மகனை நன்றாக படிக்க வைத்து சமூகம் மதிக்கக் கூடிய ஒரு நல்ல பிரஜையாக உருவாக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு செயல்பட்டாள்.

இவ்வாறு நல்ல இலட்சியத்தை அடைய வேண்டும் என எண்ணம் கொண்டு தனக்னெ ஒரு தொழிலையும் தேடிக்கொண்டு மகனுக்கு அன்பு காட்டி மகிழ்ச்சியாக வாழும் இந்நாட்களில் ரசிகாவுக்கு அவசரமாக கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை மீண்டும் ஏற்பட்டது. அது அவளை மீண்டும் பழைய தொழிலுக்கு கொண்டு சேர்க்கிறது. தனது உடலை விற்று ஆடவர்களை திருப்திப்படுத்தி பணம் சம்பாதிக்கலானாள். அவளது வீட்டுக்கு பக்கத்தில் இருந்து மலைகளில் இருந்த கருங்கற்கள் உடைத்து எடுத்துச் செல்ல லொறிகள் தொடராக வந்தன. அதில் வருபவர்கள் (வரிசை) “ஹிurn” வரும் வரை காத்திருந்தனர்.

பகல் வந்தவர்கள் இரவில் போவார்கள், இரவில் வந்தவர்கள் பகலில் போவார்கள். இதன் சாரதி, நடத்துனர்கள் ரசிகாவின் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தனர். இவ்வாறு இரவு பகல் என பாராமல் ஆண்கள் வீட்டுக்கு வந்து போவது ரசிகாவின் தந்தை என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த மேசன் தொழிலாளிக்கு பிடிக்கவில்லை. அவளை சாடினார். ரசிகாவிடம் இது பற்றி கேட்டார்,

“ஆமா! வருகிறார்கள் தான், இனி என்ன? நீங்கள் அது பற்றி கேட்கத் தேவையில்லை” என அவள் பதில் கூறினாள்.

இந்த பதில் அவரின் முகத்தில் அடித்தது போல் இருந்தது. இதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்த விபரீதத்தை ஏற்படுத்துமா? அவர்கள் இருவரும் தான் அறிவார்கள். இதில் ரசிகா கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சம்பந்தப்பட்ட அடுத்தவர் மாத்திரம் எஞ்சியிருக்கிறார். அவர் அப்படி நடந்தாலும் நேரடியாக வந்து நான் இதைச் செய்தேன் என ஏற்றுக் கொள்வாரா? அல்லது அவரது மனைவி யாரையும் வைத்து இதைச் செய்திருப்பாளா? அல்லது லொறியில் வந்து தமது தேவையை பூர்த்தி செய்து கொண்டு செல்பவர்கள் தகறாறு ஏற்பட்டு செய்திருப்பார்களோ? அதுவும் இல்லாவிட்டால் ஏற்கனவே தொடர்பு வைத்தவர்கள் வந்த போது நான் இப்போது எனக்கொன்று ஒரு வீடு ஒரு மகன் இருக்கிறான் என்று மறுத்ததினால் இப்படி நடந்திருக்குமோ? ரசிகாவின் வாழ்க்கையை விரும்பாத அயலவர்கள் யாராவது இவ்வாறு செய்திருப்பார்களோ? பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தீபாவளி தினம் (26.10.11) இக்கொடூரம் நடைபெற்றதால் அன்றைய தினம் அந்த பகுதியில் நடமாடிய பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அக்கிராமமே சோகம். எங்கும் பரபரப்பு. யார் செய்தாலும் ஒரு நல்ல காரியத்தைப் பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை.

ரசிகாவுடன் தொடர்பு வைத்திருந்தவரிடமும் (வீடு கட்ட காணி கொடுத்த 55 வயது நபர்) பொலிஸார் விசாரித்தனர். அவரது வாக்கு மூலப்படி அவர் இதைச் செய்திருக்கவே முடியாது. என தாம் தீர்மானித்ததாக தம்புள்ள பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி வசந்த குமார கூறினார்.

25 ஆம் திகதி மாலையிலிருந்து கணவனின் செயற்பாடுகளைப் பற்றி அந்நபரின் மனைவியிடம் விசாரித்தார்கள். கணவன் மனைவி இருவரையும் நாம் தனித்தனியாக வெவ்வேறு விதத்தில் விசாரித்தோம். அதன் போது ஒன்றுக்கு ஒன்று முரணாக இருவரதும் வாக்கு மூலங்களும் இருந்தது என இன்ஸ்பெக்டர் வசந்த குமார கூறினார்.

மீண்டும் இருவரையும் ஒன்றாக வைத்து விசாரித்த போது கணவன் (அந்த 55 வயதுடைய மேசன் தொழிலாளி) இக்கொலையுடன் தொடர்புபட்டிருந்தது தெளிவாகியது. அந்நபர் இக்கொலை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலத்தை பொலிஸாருக்கு வழங்கினார்.

நான் 25 ஆம் திகதி ரசிகாவின் வீட்டுக்குப் போனேன். எனக்கும் அவளுக்கும் இடையில் வழமைபோல் தகராறு ஏற்பட்டது.

அவள் திடீரென கையை நீட்டி எனது கன்னத்தில் அறைந்தாள். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்னால் இதை மறக்கவே முடியவில்லை. நான் பொறுமையாக திரும்பி வந்தேன். வரும் போது ஓடி வந்து என்னை அழைப்பாள் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை. என்னை அடித்தது மாறி மாறி எனக்கு நினைவுக்கு வந்தது. மீண்டும் அடுத்த நாள் (சம்பவ தினம்) அதிகாலை ரசிகாவின் வீட்டுக்குச் சென்றேன். நான் அங்கு செல்லும் போது அவள் உணவு சமைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். அடுப்பங்கரை பக்கம் வெளிச்சம் தெரிந்தது.

இப்போது என்னு டன் நன்றாக கதைப்பாள். நேற்று தவறு நடந்தது என என்னிடம் மன்னிப்புக் கேட்பாள் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. மாறாக, கோபத்தோடு என்னுடன் சண்டைக்கு வந்தாள். இருவரும் வாக்குவாதப்பட்டோம். அவள் நடந்து கொள்ளும் விதம் எனது கோபத்தை பன்மடங்காக்கியது.

நான் ஆவேசத்தோடு வீட்டில் இருந்து வெளியில் வந்து, மரத்தில் சாத்திவைத்த சைக்கிளில் மறைத்து வைத்திருந்த பையில் உள்ள கத்தியை எடுத்து வந்து அவளுடைய கழுத்தில் வெட்டினேன்.

அவள் இரத்தம் பீறிட்ட நிலையில் நிலத்தில் சரிந்தாள். கடைசி மூச்சை விட்ட ரசிகாவின் அருகில் உறங்கி தாயைத் தேடிய சிறுவன் இந்திக தாயின் பிரிவு பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் “மாமா எனது அம்மா எப்போது திரும்பி வருவாள்?” என கேட்டுள்ளார். அவ்வாறு கேட்ட அந்த பிஞ்சு உள்ளம் இவ்வுலகில் தனிமைப்பட்டது. பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்தாவது அவள் திருந்தாததன் விளைவே இது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.