புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 
சம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது !

சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?

சம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது !

மனோ நம்பிக்கை; கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலை

சிறைகளில் சந்தேக நபர்களாக வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகள் மட்டுமல்ல மலையக, கொழும்பு பிரதேசத்தவரும் உள்ளனர்.

தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் விவகாரம் இன்று இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும். இதன் மூலம் நீண்டகால மாக இழுபறிப்படும் இப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டி யதற்கான அவசர தேவையை அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும்.

இது தொடர்பில் ஆளுந்தரப்பில் கபினற் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் எம்.பி. அவர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும் அவமதிக்கப்பட்டுமுள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது. அனு ராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சரணடைந்த புலிகள் இயக்க உறுப் பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் பெரும் பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது.

தமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல் போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை தற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்து கொண்டிருக்கும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளாகும். தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய அனைத்துப் பிர தேசங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக் கின்றார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப் பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன் சிறைவாசம் அனுபவிக் கிறார்கள். கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள். எனவே ஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக் கின்ற அனைத்து தமிழ் எம்.பிக்களும் தங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரே குரலில் ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும்.

இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால் இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை அரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப் பயன்படுத்தி தமிழ் எம்.பிக்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.