புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?

சம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது !

மனோ நம்பிக்கை; கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலை

சிறைகளில் சந்தேக நபர்களாக வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகள் மட்டுமல்ல மலையக, கொழும்பு பிரதேசத்தவரும் உள்ளனர்.தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் விவகாரம் இன்று இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும். இதன் மூலம் நீண்டகால மாக இழுபறிப்படும் இப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டி யதற்கான அவசர தேவையை அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும்.

விவரம் »

எதிர்காலத்துக்கான ஆழமான நோக்கு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் ஆற அமர இருந்து ஆழமாக வாசிப்பதைக் காணலாம். (படம்: சுதத் சில்வா)

 

நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை

பாதுகாப்புக்கும், அபிவிருத்திக்குமான முதலீடாகவே பாதுகாப்புச் செலவு - பசில்

சட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பு, மக்களின் சொத்துப் பாதுகாப்பு இல்லாமலிருந்த ஒரு காலகட்டத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டைப் பொறுப்பேற்றார். பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையூடாகப் புதிய இலங்கை 2005 ஆண்டிலிருந்து தற்போது வரை பயணித்து வருவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விவரம் »

அரசு - TNA பேச்சைக் குழப்புவது சில தமிழ் ஊடகங்களின் நோக்கமா?

உள்நோக்கம் என்ன எனப் புத்திஜீவிகள், மக்கள் கேள்வி

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதிர்மறையான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும், பேச்சுக்களை எப்படியும் சிங்கள மக்கள் குழப்புவார்கள் என்ற விதமான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

விவரம் »

ஏ-9 வீதியில் எமனாக வரும் டிப்பர்களும் சொகுசு பஸ்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயத்துடன் பயணிக்கும் பயணிகள்!

பாதை திறப்பின் பின் மட்டும் 54 பேர் பலி; 358 பேர் காயம்

ஏ-9 வீதியின் வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையான பகுதியில் பாதை அகலிப்பு வேலைகள் இடம் பெறுவதால் அப்பகுதியில் நூற்றுக் கணக்கான டிப்பர்கள் ஓடித் திரிகின்றன. இவற்றில் பெரும்பாலான டிப்பர்களின் சாரதிகள் எந்தவிதமான வீதி விதிகளையுமே கடைப்பிடிப்பதில்லை

விவரம் »

அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு

ஆனால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நிராகரிப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது. அரசு கூட்டமைப்புடன் வியாழனன்று நடத்திய

விவரம் »

யாழ்ப்பாணத்தில் வாரமஞ்சரி வாசகர் வட்டம்

டிச. 11 இல் கோலாகல விழாவிற்கு ஏற்பாடு

தினகரன் வாரமஞ்சரியின் வாசகர் வட்டத்தின் இரண்டாவது மாபெரும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி யாழ்ப் பாணத்தில் நடைபெற யாழ். வாசகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அன்று காலை 9.30 மணிக்கு யாழ்.

விவரம் »

நெடுஞ்சாலையில் பயணிக்கும் நிவாரண காலம் முடிவு

சட்டங்கள் கடுமையாக அமுல்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இரண்டாம் திகதி தொடக்கம் போக்கு வரத்துச் சட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

    TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.