புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

அமெரிக்காவின் பழைமைமிகு தேவாலயம் 400 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் பழைமைமிகு தேவாலயம் 400 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் மிகப் பழைமைமிக்க புரட்டஸ்தாந்து தேவாலயம் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்திலேயே அமெரிக்காவின் புராதன கதாநாயகி பொக்காஹொனடாசும் புகையிலை பயிர்ச் செய்கையாளர் ஜோன் ரால்ப்பும் 1614 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதும் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பழைமைமிக்க புரட்டஸ்தாந்து தேவாலயமான இதன் சிதைவுகள் வெர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் என்னும் இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வுக் குழுவின் இயக்குநரான வில்லியம் கெல்ஸோ இதுபற்றி தெரிவிக்கையில் இன்னும் இரண்டு புரட்டஸ்தாந்து தேவாலயங்களும் இருந்துள்ளன. ஆனால் அவற்றின் தடயங்கள் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

இந்த தேவாலயம் அமைந்திருந்த பகுதிக்கு அருகில் பல கல்லறைகளும் காணப்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.