புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

பார்வையற்ற யானைகளுக்கு இசை வழங்கும் கலைஞர்

பார்வையற்ற யானைகளுக்கு இசை வழங்கும் கலைஞர்

பார்வையற்ற யானைகளை மகிழ்விப்பதற்காக தனது பியானோ இசைக்கருவி மூலம் இசை வழங்குகிறார் கலைஞர் ஒருவர்.

இங்கிலாந்தில் உள்ள யார்க் ஷயர் பகுதியைச் சேர்ந்த பவுல் பார்டோன் என்னும் இந்த இசைக் கலைஞர் யானைகள் மீது கொண்ட பற்று காரணமாக 16 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவியுடன் தாய்லாந்து சென்று விட்டார்.

அங்குள்ள காஞ்சனபுரி மலையில் பார்வையற்ற யானைகளுக்கான சரணாலயம் இருப்பதை அறிந்து அந்த யானைகளுக்காக சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மிகச்சிறந்த பியானோ கலைஞரான அவர் இசை நிகழ்ச்சிகள் மூலமாக பார்வையற்ற யானைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்.

தற்போது அந்த யானைகளை மகிழ்விப்பதற்காக தன்னுடைய பியானோவை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று சரணாலயத்தில் அமர்ந்து பியானோ வாசிக்கிறார்.

குறிப்பாக, இசையுலக ஜாம்பவான் பீத்தோவன் எழுதிய இசை குறிப்பு களை பியானோவில் அவர் வாசிக்கும்போது யானைகள் மிகவும் ரசித்துக் கேட்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.