புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

ளுடுவு குழுமத்தின் வரிக்கு முன்னரான இலாபம் ரூ 4.8 பில்லியனாக பதிவு

ளுடுவு குழுமத்தின் வரிக்கு முன்னரான இலாபம் ரூ 4.8 பில்லியனாக பதிவு

ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையும் ஒன்பது மாத காலப்பகுதிக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்குழுமத்தின் தாய் நிறுவனமான ஸ்ரீலங்கா ரெலிகொம் PLC யும் கையடக்க தொலைபேசி நிறுவனமான மொபிடெல் பிறைவட் லிமிடட் உள்ளடங்கலாக ஏழு துணை நிறுவனங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

2011, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாதங்கள் காலப்பகுதியில் வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ. 4.82 பில்லியன்களை குழு பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 29% வளர்ச்சியாக காணப்படுகின்றது.

கடந்த வருடத்தின் இதே காலத்தில் நிகழ்ந்த செயற்படுத்தல் மற்றும் நிதிச் செலவுகளை விட குறைவானதாகவும் SLT குழு வைத்துக்கொண்டது. செயற்படுத்தல் வினைத்திறன்களை மேம்படுத்தியமை, விவேகமாக செலவு முகாமைத்துவ பயிற்சிகளை வலுப்படுத்தியமை மற்றும் வருமானத்தின் மூலமான செலவுகளை குறைத்தமை போன்ற முயற்சிகளின் ஊடாக இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 37.47 பில்லியன் வருமானத்தை குழு பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் அகலப்பட்டை மற்றும் PEO TV என்பவற்றின் மூலம் ஆச்சரியமிகு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் நிலையான அகலப்பட்டை சந்தாதாரர்களின் எண்ணிக்கை 250,000 என்ற மைல் கல்லையும் SLT எட்டியுள்ளது.

2011 ஆம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் குழுவின் வரிக்கு பின்னரான இலாபம் (PAT) ரூ. 3.49 பில்லியன்களாக அதிகரித்து 46% வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேவேளை குழுவின் EBITDA ஆனது 4% ஆல் முன்னேற்றம் கண்டு ரூ. 13.1 பில்லியன்களாக உள்ளது. குழுவின் EBITDA மற்றும் NPAT இடைவெளிகளின் KPI  ஆனது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது குழு மட்டத்தில் முறையே 34% யிலிருந்து 35% ஆகவும், 6% யிலிருந்து 9% ஆகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.

குழுவின் செயற்படுத்தல் நடவடிக்கைகளின் மூலம் சேகரிக்கப்பட்ட மொத்த பணமானது 26% ஆக அதிகரித்து ரூ. 14.89 பில்லியனாக இந்த காலப்பகுதியில் இருந்தது. இந்த காலப்பகுதியில் தொழிற்சாலை மற்றும் கருவிகள் என்பவற்றிற்காக ரூ. 10.98 பில்லியன்களை குழு முதலீடு செய்தது. விசேடமாக இயலுமையை விஸ்தரித்தல், செயற்படும் எல்லையை விஸ்தரித்தல் மற்றும் வலையமைப்பு நவீனமயமாக்கல் என்பவற்றில் முதலீடு செய்யப்பட்டது.

இதேவேளை தாய் நிறுவனமான SLT இன் கடந்த வருடத்தின் வரிக்கு முன்னரான இலாபமான ரூ. 2.35 பில்லியகளுடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் வரிக்கு முன்னரான இலாபம் 57% வளர்ச்சியை எட்டி ரூ. 3.69 பில்லியன்களாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 1.40 பில்லியன்களாக இருந்த வரிக்கு பின்னரான இலாபமானது, இவ்வருடம் 93% வளர்ச்சியை எட்டி ரூ. 2.71 பில்லியன்களாக பதிவாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் நிறுவனத்தின் EBITDA ஆனது 8% அதிகரித்து ரூ. 8.3 பில்லியகளாக பதிவாகியுள்ளது.

நிறுவனத்தின் EBITDA இடைவெளி மற்றும் NPAT இடைவெளியின் KPI  ஆனது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது முறையே 34% யிலிருந்து 31% ஆகவும், 11% யிலிருந்து 6% ஆகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.

நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட SLT குழுமத்தின் தலைவர் நிமால் வெல்கம, இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் SLT குழுமத்தின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டார். “நாடளாவிய ரீதியில் ICT பிரவேசத்தை உறுதி செய்யும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக்குவதற்கான முயற்சிகளை SLT தொடர்கின்றது. நிறுவனத்தின் பிரதான அடையாளமாக நாட்டின் பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு ICT வலுவூட்டல் கிடைப்பதனை உறுதி செய்யும் ‘ஐ-ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருட்களை பகுத்தறிவதன் மூலம் நிறுவன மட்டத்தில் தமது செலவை உகந்ததாக்கல் முயற்சிகளை SLT தொடர்ந்தமையின் காரணமாக செலவுகள் குறிப்பிட்ட அளவில் குறைவடைந்தது. பாரம்பரிய நிலையான தொலைபேசி சேவை வருமானமானது, கடந்த சில காலாண்டுகளாக எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தியிருந்தது. நிலையான தொலைபேசி சேவையிலிருந்து கையடக்கத் தொலைபேசியை நோக்கியதாக மக்களின் சேவை தெரிவு மாறுபட்டு வருகின்றமைமே இதற்குக் காரணமாகும். எனினும் double Play மற்றும் triple play  என்பவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்ட புதிய சந்தைப்படுத்தல் முயற்சிகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் என்பவற்றினால் இந்த நிலை மூன்றாம் காலாண்டில் ஸ்திர நிலையை எட்டியுள்ளது. அது மாத்திரமின்றி தரவு மற்றும் நிறுவன வர்த்தக தீர்வுகள் போன்ற பாரம்பரியமற்ற வருமானங்கள் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

நாட்டின் சாதகமான பொருளாதார நிலைமையும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளும் இதனை சாத்தியமாக்கியுள்ளன. நிறுவனத்தின் இந்த புதிய உபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சாலை மற்றும் கருவிகள் போன்றவற்றிற்காக 2011 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிறுவனம் ரூ. 5.28 பில்லியக்களை முதலீடு செய்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 71% வளர்ச்சியாகும்.

2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாதங்களில் 9% வளர்ச்சியுடன் ரூ. 1.49 பில்லியன்கள் வரிக்கு முன்னரான இலாபத்தை மொபிடெல் பதிவு செய்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் எட்டப்பட்ட இலாப வளர்ச்சியானது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் நிறுவனத்தின் வருமானத்தில் கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களின் வருமானமான ரூ. 14.76 பில்லியங்களுடன் ஒப்பிடும் போது மொபிடெல்லின் 2011 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான வருமானம் ரூ. 15.94 பில்லியன்களாக வளர்ச்சியடைந்துள்ளது. இது ரூ. 1.17 பில்லியன்கள் அதிகரிப்பாகும். 2010 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாத இறுதியில் சந்தாதாரர்களின் தளம் 15% ஆக அதிகரித்துள்ளமையின் மூலமே இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் புதிய இயந்திரமாக வளர்ந்து வரும் அகலப்பட்டை சேவைகளின் வளர்ச்சியே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

மேலதிகமாக 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2011 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியையும் பார்க்கும் போது உட் தொடர்பு குறித்து உருவாக்கப்பட்ட எதிர்மறையான தாக்கத்தை மொபிடெல்லினால் எதிர்கொள்ளக் கூடியதாகவிருந்தது. 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே உள்ளிணைப்பு முறை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.