புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

பருவ பெண்கள் கவனத்திற்கு

பருவ பெண்கள் கவனத்திற்கு

டீன் ஏஜ் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவ ங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள்ளலாம். பிZச் சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சருமத் தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர், கிரீம் உபயோகிக்க வேண்டாம். கூந்தலுக்கான மிகவும் கடுமையான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம்.

தினசரி கூந்தலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது, தொப்பு ளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக முடியலாம்.

நரம்புகளில் பட்டால் ஆபத்து. நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கண் பார்வையைப் பாதிக்கும்.

டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது. நீண்ட நேரம் நீடிப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.

நகங் களை நீளமாக வளர்க்காமல் குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது. உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.