புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

பேய்த்தீவில் நடந்த கொ^ரங்கள்

பேய்த்தீவில் நடந்த கொ^ரங்கள்

ஜெர்மனியிலுள்ள பேய்க் குகை பற்றி கடந்த வாரம் பார்த் தோம். இவ்வாரம் அட்லான்டிக் பெருங் கடலில் உள்ள பேய்த்தீவில் (Davil’s Island) நடைபெற்ற கொடூரங்கள் பற்றிப் பார்ப்போம். இந்தத் தீவில் பேய்கள் இருக்கின்றனவா? அது பற்றித் தெரியவில்லை. அப்படியானால் இத்தீவுக்குப் பேய்த்தீவு என்று ஏன் பெயர் வந்தது? அது இங்கு நடைபெற்ற கொடூர சம்பவங் களால்தான். ஒரு காலத்தில் இந்தத் தீவு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங் கும் சித்திரவதை முகாமாக இருந்துள் ளது.

இந்தத் தீவு 34.6 ஏக்கரில் அமைந்துள் ளது. கரையிலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் அமைந்துள்ள இத்தீவு 1852 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை பிரெஞ்ச் தண்டனை முகாமாக இயங்கி வந்தது.

இங்கிருந்த கைதிகளைக் கொடுமைப்படுத்தியவை தண்டனைகள் மட்டுமல்ல, மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் பயங்கர தொற்றுநோய்கள் என்பனவும்தான். இங்கு அனுப்பப்பட்ட அரசியல் கைதிகளில் அநேகமானவர்களை திரும்பவும் பார்க்கக் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.

இங்கு தண்டனை அனுபவித்த கைதிகளில் மிகவும் பிரபலமானவர் பிரெஞ்ச் இராணுவத்தில் பணியாற்றிய அல்பிரட் ட்ரேபஸ் என்னும் அதிகாரியாவார். இவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அவர் குற்றவாளியல்ல என நிரூபிக்கப்பட்டு விடுதலையாகி தன் வாழ்நாளின் இறுதி வரை பிரெஞ்ச் இராணுவத்திலேயே பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கவை. தண்டனை முகாமாக இந்த தீவு இயங்கி வந்த காலத்தில் பிரான்ஸிலிருந்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் இங்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இவர்களில் நான்கில் ஒரு பங்கினரே மீண்டும் உயிருடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவர்களில் அநேகர் தப்பியோடும் போது பிடிக்கப்பட்டு காட்டு முகாம்களில் வைத்துக் கொல்லப்பட்டனர். மற்றும் சிலர் நீந்தித் தப்பிக்க முயற்சிக்கையில் ஆட்கொல்லி மீன்களால் கடியுண்டு மாண்டனர். இங்குள்ள டிம்பர் கேம்ப்ஸ் என்னும் முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான சித்திரவதைகளின் போது கைதிகள் இடுப்புவரை மூழ்கும் அளவிலான நீரில் இருந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அடித்துக் கொடுமைப்படுத்தல், மலேரியா நுளம்புக்கடி மற்றும் கடும் வெயில் போன்ற தாக்கங்களுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டி இருந்தது.

அவர்களில் தினசரி தண்டனையாக குறிப்பிட்ட அளவு மரம் அறுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் காய்ந்த பாண் துண்டு ஒன்று மட்டுமே அவர்களுக்கு அன்றைய தின உணவாக வழங்கப்பட்டது. இவர்கள் தப்பியோடுவதை தடுக்கும் வகையில் நிர்வாணமாக்கப்பட்டே வேலை செய்விக்கப்பட்டனர். இப்படி பல்வேறு கொடூரங்களுக்குப் பெயர்பெற்ற பேய்த்தீவு இன்று ஓர் அமைதித் தீவாக மாறியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.