புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

பின்னங்கால்கள் இன்றி பிறந்த பன்றி முன்னங்கால்களால் நடக்க பயிற்சி

பின்னங்கால்கள் இன்றி பிறந்த பன்றி முன்னங்கால்களால் நடக்க பயிற்சி

பின்னங்கால்கள் இரண்டும் இன்றி பிறந்த பன்றிக்குட்டியொன்று தானாகவே முன்னங்கால்கள் இரண்டால் நடக்கப் பயிற்சி பெற்று வியக்கத்தக்க வகையில் நடக்கிறது.

இந்த வலதுகுறைந்த பன்றி கடந்த ஜுலை மாதம் கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் பிறந்தது.

இங்குள்ள பண்ணையிலுள்ள விவசாயி ஒருவர் அந்தப் பன்றி நடப்பதற்கு பயிற்சி அளித்து வருகிறார்.

தற்பொழுது இந்தப் பன்றி மிகக் கவனமாக தனது முன்னங்கால்கள் இரண்டாலும் நடக்கப்பயிற்சி பெற்றுள்ளது.

இந்தப் பன்றி குட்டியாக இருக்கையில் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டது. எனினும் வளர்ந்த பின் சாதாரணமாக நடக்கப்பழகிக் கொண்டுள்ளது.

இந்தப் பன்றியின் நிலைகண்டு இந்தக் கிராமத்தவர்கள் அதன் மீது மிகுந்த அன்பு செலுத்துவதாக பன்றியின் உரிமையாளர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.