புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

அப+ர்வ ஒற்றுமைகள்

அப+ர்வ ஒற்றுமைகள்

ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சரியாக 100 வருடங்களுக்குப்பின்னர். அதேதுறையில் இருந்த இன்னொருவருடைய வாழ்க்கையில் பல ஒற்றுமைகளுடன் நடத்திருக்கின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஆபிரகாம் லிங்கனது ஜோன் கென்னடியினதும் வாழ்க்கை யில்தான் இந்த அபூர்வ ஒற்றுமைகள் நிகழ்ந்துள்ளன.

1860ல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம்லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரியாக 100 வருடங்களுக்குப் பின் 1960ல் கென்னடி ஜனாதிபதியானார்.

லிங்கனின் உதவியாளர் பெயர் :- கென்னடி

கென்னடியின் உதவியாளர் பெயர் :- லிங்கன்

இரண்டு ஜனாதிபதிகளுமே கொலை செய்யப்பட்டனர்.

இருவர் இறக்கும் போதும் அவர்களுடைய மனைவியர் அருகிலேயே இருந்தனர். இருவர் இறந்த நாளும் வெள்ளிக்கிழமை.

இரண்டு கொலையாளிகளின் பெயர்களும் 15 எழுத்துகள் கொண்டவை. விசாரணை வரு முன்னரே இரண்டு கொலையாளிகளும் இறந்து விட்டனர்.

லிங்கனுக்குப்பிறகு ஜனாதிபதியாக இருந்தவர் அன்ட்ரூ ஜோன்சன். இவர் பிறந்தது 1808 கென்னடிக்குப் பிறகு ஜனாதிபதியாக இருந்தவர் லிண்டன் ஜோன்சன், இவர் பிறந்தது 1908. இரண்டு ஜோன்களின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 13.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.