புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

பிறர் குறை மறப்போம் நம் குறை! நினைப்போம்

பிறர் குறை மறப்போம் நம் குறை! நினைப்போம்

நம்மிடம் காணப்படும் தீய வழக்கங்களில் முக்கியமானதொரு பழக்கம் தான் பிறர் குறைகளை அலசி ஆராய்வதாகும்.

எம்மிடையே பல குறைகளை வைத்துக் கொண்டே பிறரைப் பற்றி விமர்சிப்பது எவ்வகையில் முறையாகும்? குறைகளற்ற மனிதர்களை காண்பதென்பது அரிதான விடயமாகும்.

எல்லா மனிதர்களும் எந்த வகையிலோ குறைகளுடனே நடமாடுகிறார்கள். நூறு வீதம் சரியான ஒருவரை மனிதராக இவ்வுலகில் காண்பது அபூர்வம்.

அப்படியென்றால், நாம் பிறரது குறைகளை கண்ட இடத்திலும், நின்ற இடத்திலும் பேசிக் கொண்டிருப்பது தவறான விடயமாகும்.

எம் குறைகளை சற்றும் சீர் தூக்கிப் பார்க்காது பிறரைக் குறை கூறித் திரிவதில் என்ன நியாயம்? முதலில் எம்மிடமுள்ள குறைகளை இனங்கண்டு எம்மை நாம் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அடுத்தே பிறரைப் பற்றி எண்ண வேண்டும். எம்மிலே பல குறைகளை வைத்துக் கொண்டு எங்ஙனம் பிறரை நாம் திருத்துவது? ஆகவே, முதலில் நாம் எம் குறைகளை அறிந்து எம்மை சரி செய்வோம்.

பிறர் குறைகளை மறைத்து அவர்களோடு அன்பாக பழகுவோம். நாம் பிறரது குறைகளை மறைத்தால், மறந்தால் எம் குறைகள் தாமாக மறைந்து விடும். பலர் கூடி பிறர் பற்றி பாடும் பல்லவியை முடித்திடுவோம். பொன்னான நேரத்தை நல்ல முறையில் செலவிடுவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.