புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

எண்ணெய் பசை சருமத்திற்கு....!

எண்ணெய் பசை சருமத்திற்கு....!

ஒரு சிலருக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்ப வெல்லாம் ‘ஃபேடி வாஷா’ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவா மசாஜ் பண்ணணும். இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குற துவாரங்கல்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறிடும். முகமும் பார்க்கப் படு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.

இதே சிகிச்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதுதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும்.

குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்னிக்கு மட்டும் உடம்புக்கு சோப் போடாம, கடலைமாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.

அழகுல உதட்டுக்கு முக்கிய பங்கு இருக்கு. தொடர்ந்து லிப்ஸ்டிக் உபயோகிச்சா உதடு கறுத்துப் போயிடும். எபவும் லிப் கிளிசரின் அல்லது லிப் கார்ட் தடவிட்டு, அதுக்கு மேலதான் லிப்ஸ்டிக் போடணும். இதனால உதட்டோட இயல்பான நிறம் மாறாது. தினமும் தூங்கப், போறதுக்கு, முன்னாடி கை, கால்களை சுத்தமா கழுவிட்டு ஓலிவ் எண்ணெய் தடவணும். இப்படி ரெகுலரா செஞ்சா சருமம் பட்டுப்போல மிருதுவா மாறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.