புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

மடிக்கணினி (Laptop Computer) வாங்க சில ஆலோசனைகள்

மடிக்கணினி (Laptop Computer) வாங்க சில ஆலோசனைகள்

வளர்ந்துவரும் நவீன தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உலகிலே நுட்பங்கள் வேகமானதும், விவேகமானதாகவும் காணப்படுகின்றன.

கணினி தோன்றிய வரலாற்றை நோக்கும் போது கணினிகளை நிறுவி இயக்குவதற்கென பாரிய இடவசதிகள் ஒதுக்கும் நிலை காணப்பட்டது. தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியானது அதனை உள்ளங்கை அளவிற்கு அதனை மாற்றிவிட்டது.

இதனடிப்படையில் பார்க்கும் மனிதனானவன் எப்போதும் தொழிநுட்பத்தின் உச்சக்கட்ட பயனையே அடைய விரும்புகின்றான். தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்றாற்போல் அவனும் மாற்றிக் கொள்ளவே விரும்புகிறான். மேசைக் கணனிகளை (Desktop Computer) மட்டுமே பயன்படுத்தும் பலருக்கு எப்படியாவது ஒரு மடிக்கணினி (Laptop Computer) வாங்கிவிட வேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி ஆசைப்படும் பலருக்கு தங்களது நிதி நிலவரம் (Budjet) போதாமையாக இருக்கலாம். இதனால் லெப்டொப் வாங்கும் ஆசை கனவாகவே போகலாம். ஆனால் சிலருக்கு லெப்டொப் கம்பியூட்டர் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லெப்டொப்பை பார்த்து வாங்க முடியாது.

அப்படி வாங்க வேண்டுமெனில், நல்ல கணினி அறிவு, அனுபவமுள்ள ஒரு நண்பரின் துணை வேண்டும் அல்லது அவரின் அறிவுரை வேண்டும். இவ்வாறான ஒருவரை எங்கு தேடுவது யாரை நம்புவது என்று தெரியாமல் லெப்டொப் வாங்கும் படலம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கலாம்.

இதனால் உங்கள் ஆசையும் நிறைவேறாமல் போகலாம். இவ்வாறானதொரு கவலை இனி உங்களுக்கு வேண்டாம். நீங்களே கடைக்கு தனியாகச் சென்று தைரியமாக ஒரு தரமான லெப்டொப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லெப்டொப் பிராண்ட் எதனை வாங்குதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இன்று சந்தையில் பல லெப்டொப் பிராண்ட்கள் கிடைக்கின்றன. பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு வித்தியாசம், வித்தியாசமான தொழில்நுட்பங்களுடன் கூடிய பல லெப்டொப் பிராண்ட்கள் வெளிவந்த வண்ணம் காணப்படுகின்றன. Sony, HP, Dell, Samsung, Toshiba, Lenova, Acer இது தவிர Apple நிறுவனம் வெளியிடும் Apple பிரான்டும் காணப்படுகின்றன.

மேலும்சில லெப்டொப்கள் தொழில் சார்ந்த வல்லுநர்களுக்கான விசேட வகையும் காணப்படுகின்றன. அது மாத்திரமன்றி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய என்டடைன்மன்ட்(Entertainment) வகை லெப்டொப்பும் சந்தையில் காணப்படு கின்றன.

எனவே நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லெப்டொப் களின் எவ்வாறான விடயங்களை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Laptop Configuration (மடிக்கணினி கட்டமைப்பு) Prosessor செயலி

Prosessor என்பது அனைத்து லெப்டொப் மதர்போட்களிலும் GB முக்கியமாக பொருந்தக் கூடிய ஒரு சதுரமான சிப்ப் ஆகும். இதனை கணனியின் மூளை, இதயம் என்று கூட சொல்வார்கள். இதன் வேகத்தியிலே கணினி தங்கியுள்ளது. இதன் வேகம் அதிகரிக்கும் போது, கணினியின் வேகமும் அதிகரிக்கும்.

இது ஜிகாஹேட்சில் (Ghz) அளக்கப்படு கின்றது. Inter Core i7 புரொஸெஸ்ஸரே இன்றைய மார்க்கெட்டிலில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது. அடுத்ததாக Inter Core i5 அதற்கடுத்ததாக Inter Core i3 புரொஸெஸ்ஸர் காணப்படுகின்றது.

எனவே, நீங்கள் விலை கூடுதலான ஒரு லெப்டொப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிரான்டை தேர்ந்தெடுத்துக் கொண்டு மேற்கூறப்பட்ட Prosessor ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த மூன்று வகையான Core வரிசையில் உங்கள் Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு

விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo  அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதைவிட தரம் குறைவான நவீன தொழில்நுட்பத்திற்கு பொருத்தமானதாக இருக்காது. Intel R Core TM 17-640M Processor 2.80GHZ  அடுத்ததாக இங்கே மேலே காண்பது போல் இந்த Processor உடன் 2.80 GHZ என்று குறிப்பிட்டு இருப்பதைப் போல நீங்கள் வாங்கும் லெப்டொப்பிலும் ஒரு நம்பருடன GHZ  என்று குறிப்பிட்டு இருக்கும்.

இந்த நம்பரையும் நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டியது GB அவசியமாகும். ஏனெனில் இந்த 2/80 GHZ என்பதை விட2.00 GHZ அல்லது 1.60GHZ என்பதன் Processor வேகம் GB குறைவானதா கும். 2.00 GHZ லெப்டொப் மொடலை விட 2.80 GHZ லெப்டொப் மொடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டொக்னொலஜி இதில் இல்லை என கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

RAM - ரம்

RAM GB முக்கியமான விடயமாகும். இது ஒரு தற்காலிக நினைவ கமாகும். நீங்கள் கணனியை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும் பொழுது கணினியின் வேகம் குறைந்து விடாமல் பாதுகாப்பதில் இந்த RAM GB முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதனால் இன்றைய அட்வான்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2மிகி RAM இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். இருப்பினும் 4 GB RAM இருந்தால் சிறந்தது. இதில் இன்னொரு முக்கியமான விசயம் ளிளிஞி3 என்ற அட்வான்ஸ் டெக்னொலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லெப்டொப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள்.

(பொதுவாக விலை குறைந்த லெப்டொப் வாங்கும் பொழுது அதில் DDR2 RAM பயன்படுத்தப்படுகிறது.)

HARD DISK - வன்தட்டு

பொதுவாக கணினியைப் பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கணினியின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட்டிஸ்இன் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக எண்ணுகிறார்கள். கணினி இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட்டிஸ்கின் அளவிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட்டிஸ்கின் அளவிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரோ, போட்டோசொப் போன்ற புகைப்பட வடிவ மென்பொருள் மற்றும் வீடியோ டிசைனின்ங் செய்யும் மென்பொருள் களை இன்ஸ்டோல் செய்து பயன்படுத்துபவராக இருந்தால், மற்றும் உங்களுக்கு விருப்பமான ஓடியோ, வீடியோ பைல்களை உங்கள் லெப்டொப் பில் பிரதி பண்ணி வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட்டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பழக்கம் இல்லையெனில் 160 GB போது மானதாகும்.

இருந்த போதிலும் இன்று வருகின்ற மடிக்கணினிகளில் குறைந்தது 320 GB அளவு இடவசதி காணப்படுகிறது. இதை Terra byte அளவுகளிலும் வன்தட்டுகள் வருகின்றன. பொதுவாக இந்த ஹார்ட்டிஸ் களில் நீங்கள் பார்க்க வேண்டிய இன்னொரு விடயம் அதன் வேகம்.SPEED 7200 RPM  அல்லத SPEED 5400 RPM ஞிஜிணி போன்றவை GB சிறந்தது. எனவே கூடுதலான RPM கொண்ட வன்தட்டு கொண்ட மடிக்கணினி சிறந்ததாகும்.

DVD Drive

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் மடிக்கணினி வாங்கும் பொழுது DVD Drive ஐ பற்றி அதிக கவனம் எடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் பிராண்டட் மடிக்கணினிகள் அதற்குப் பொருத்தமான தரம்மிக்க DVD Drive பொருந்தியிருப்பார்கள். இந்த Drive இல் Super Drive 8x (DVDR DL/DVD RW/CD- RW) என் பன குறிக்கப்பட்டிருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

Graphic Card

பொதுவாக விலை குறைந்த அல்லது டிஸ்கவுன்ட் விலைகளில் கிடைக்கும் மடிக்கணினிகளில் இந்த Graphic Card இணைந்திருப்பது இல்லை. Graphic Card இணைக்கப்பட்டுள்ளது என்று லெப்டொப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற மடிக்கணினியை விட விலை அதிகமாகவே இருக்கும். நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும், போட் டோசொப், கோரல்ட்றோ டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றம் வீடியோ கேம் அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லெப்டொப்பில் இது இணைந்திருப்பது GB அவசியமான ஒன்றாகும். மேலும் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video)  படங்களை பார்க்க வேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையூடாக தெளிவான ஓடியோ பாடல்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிரபிக் காட் இணைந்துள்ள லெப்டொப் நீங்கள் வாங்குவது சிறந்தது. இதில் Dedicated Graphic அல்லது Intergrated graphics (Shared Memory) என 2 வகை காணப்படுகிறது. இதில் Dedicated Graphic Card சிறப்பானதாகும். வீடியோ எடிட்டிங் கேம்ஸ் பிரியர்களுக்கு இது பொருத்தமானதொன்றாகும். மேற்கூறப்பட்ட வேலைகளுக் காக மெமரியை இந்த Card வழங்கும் 3D Graphics, Game களை விளையாடும் இவ்வகை காட்கள் மெமரியை வழங்குவதால் கணினி எர்ரர் ஆகாமல் வேலை செய்யும்.

Operating System (05)

விலை அதிகம் உள்ள லெப்டொப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஒபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஒபரேடிங் சிஸ்டம் சரி இல்லையென்றால் லெப்டொப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும். இப்பொழு தெல்லாம் அட்வான்ஸ் லெப்டொப்களில் Windows 7 ஒபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Windows 7ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7  Ultimate

Windows 7 Pro Fessional

Windows 7 Home Premium

Windows 7 Home Basic

Windows 7 Starter Version

இப்படி விண்டோஸ் 7 வேஷனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional  இவை இரண்டும் GBச் சிறந்தது. என்றாலும் இந்த வேசன் இணைக்கப் பட்ட லெப்டாப்புகள் மற்றையவற்றைவிட விலை அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக GB சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வேஷனையாவது நாம் வாங்குவது GB சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வேஷனை தேர்ந்தெடுங்கள் Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிரபிக் மென்பொருள் பயன்படுத்துவதற்கு GB சிறந்தது. Win dows 7 Home Basic மற்றும் Windows 7 Starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்தவித மென்பொருளையும்(Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது. அடுத்ததாக புதிய வகை லெப்டொப்களில் மைக், வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக் கொள்ளுங்கள் LCD அல்லது LED TV இல் HDMI வீடியோ கேபிள் மூலம் உங்கள் லெப்டொப்பை இணைக்க விரும்பினால் நீங்கள் வாங்கும் லெப்டொப்பில் HDMI PORT உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். Memory Card Slot Front Mic, Wep, Audio SRS Speaker System இவை இணைந்துள்ளதா எனப்பார்க்கவும். அத்தோடு இலவசமாக கிடைக்கும் Mouse, Bag என்பனவற்றையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.