புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகை: கரீனாகபுர் முதலிடம்

ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகை: கரீனாகபுர் முதலிடம்

ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகைகளின் பட்டியலில் கரீனாகபு+ர் முதலி டம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக கவர்ச்சி நடி கையாக திகழ்ந்த நடிகை கேத்ரினா கைப் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

லண்டனிலிருந்து வெளியாகும் ஈஸ்டர்ன் ஐ என்ற வார இதழ் ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச் சியானவர் யார்? என்ற கருத்துக்கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகிறது.

பாடிகார்ட் மற்றும் ரா ஓன் போன்ற பெரிய படங்களை கொடுத்த கரீனா மற்றவர்களை விட ஒரு சதவீத ஓட்டுக்களை அதிகம் பெற்று ஆசிய பெண்களிலேயே மிகவும் கவர்ச்சியானவர் என்ற பெருமையை பெற் றுள்ளார்.

ஆனால் அவருக்கு கடும் போட்டி இருந் தது. ட்விட்டரில் பலர் அவருக்கு இணை யாக மற்றவர்களுக்கும் வாக்களித்திருந்த னர். 3 ஆண்டுகளாக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கவர்ச்சி பட்டத்தை தக்க வைத்த கேத்ரினா கைப் இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து ஈஸ்டர்ன் ஐ வார இதழ் ஆசிரியர் அஸ்ஜhத் நஸீர் கூறியதாவது: கரீனா, கேத்ரினா என இரு அழகிகளுக் குமான போட்டி அடுத்து வரும் ஆண்டு களில் இந்திப் படவுலகம் இவர்களை சார்ந்தே இருக்கும் என்பதை புலப்படுத் துகிறது.

புதுமுகங்களில் ஹிருத்திக் ரோ'னின் மனைவி சு+ஸன் அதிக ஓட்டுக்களை பெற்று 16வது இடத்தில் இருந்தார். பிரியங்கா சோப்ரா 3வது இடமும், பிபா'h பாசு 4வது இடத்தையும், பிரிடா பின்டோ 5வது இடத்தையும், தீபிகா படுகோனே 7 வது இடத்தையும் பெற்றனர்.

இவர்கள் தவிர முதன்முதலாக போட்டிக்குள் நுழைந்த ஜhக்குலின் பெர்னான்டஸ் 12வது இடத்தையும், நர்கீஸ் பக்ரி 23வது இடத்தையும், சோனக்'p சின்கா 38வது இடத்தையும் பெற்றனர்.

ஐஸ்வர்யாராய் 6வது இடத்தையும், சோனம் கபு+ர் 9வது இடத்தையும், லாரா தத்தா 15வது இடத்தையும், மாலாய்கா அரோராகான் 19வது இடத்தையும் பெற்றுள்ளனர் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.