புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
சாதனைகளை தனதாக்கும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி

சாதனைகளை தனதாக்கும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை) இலிருந்து 2011 ஆம் ஆண்டு க.பொ.த (உÆத) பரீட்சையில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்று இவ்வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களால் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவம் அண்மையில் (2013 - 03 - 21) கல்லூரியின் அதாஉல்லாஹ் கேட்போர் கூடத்தில் வெகு விமரிசை யாக இடம்பெற்றது.

இவ் வைபவத்தின் போது மருத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவன் சேகு முஹிதீன் அஹமட் றிஹான், யு+னாணி மருத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவி யுபு. பாத்திமா சாஜpதா, பொறியி யல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களான ஆர்ஆ. ஹம்சாத், ஆணு. சன்ஜPர் அஹமத், யுயு. றாசிப் அஹமத், ஆடு. அஹமட் சுஹைல், ணு.

டில்சாத் அலி, கணிய அளவை யில் (ஞளு) துறைக்கு யுவு. சிப்கி முஹமட், முகாமைத்துவத் துறைக்கு யுயு. இல்முனிஸா சட்ட பீடத்துக்கு ஆஐ. ஜ_மானா ஹஸ்லா, கலைத்துறைக்கு யுடு. சிறீன் பர்ஹானா, முகாமைத்துவ தகவல் தொழிநுட்பத் துறைக்கு ஆபு. சித்தி பாஹிதா, வணிகத்துறைக்கு ளு.முஹமட் றசான், யுடு. முஹமட் றிப்னாஸ் என்போரும் தங்கள் பெற்றோர் சகிதம் கலந்துகொண்டனர்.

இதன்போது இவ்வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையினை பாடசாலையில் பார்வைக்கு வைப்பதற்காக அதிபரிடம் மாணவர்களால் கையளிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய அதிபர் அண்மைக்காலமாக மருத்துவத்துறைக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் எமது பாடசாலையிலிருந்து மருத்துவத்துறைக்கு தெரிவாகி பெருமை சேர்த்த எஸ். எம். றிஹானுக்கு பாராட்டுகள் உரித் தாகும் என்றார்.

இவ்வாறே வருடாவருடம் இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள், ஆசிரியர்களைக் கௌரவிப்பது மரபு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலை 1946ம் ஆண்டு 42 மாணவர்களுடன் ஓலைக் குடிசையொன்றில் ஆரம்பிக்கப்பட்டு மத்திய மகாவித்தியாலய தரத்திலி ருந்து வடகிழக்கு மாகாணத்தின் முதலா வது தேசிய பாடசாலையாக 29.9.1992 ஆம் திகதி கல்வி உயர்கல்வி அமைச்சினால் தரம் உயர்த்தப்பட்டது

இன்று சுமார் 2000 மாணவர்களையும் 102 ஆசிரியர்களையும் 20 கல்வி சாரா ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டு, இலங்கையின் பிரபல்யமான கல்வி நிறுவனமாக தேசிய ரீதியில் தடம் பதித்து வருகின்றது. இப்பிரதேச வாசிகளின் அளவிட முடியாத முயற்சிகளாலும் ஒத்தாசைகளாலும் இக்கல்லூரி உயர்ந்துள்ளது என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டலாம்.

2002 ஆம் ஆண்டில் இக் கல்ல}ரியின் மற்றுமொரு சாதனைப் பயண ஆரம்பமாக இருமொழி கற்கை நெறி கள் தரம் 06 இலிருந்து ஆரம்பி;க்கப்பட்டு 2011 இல் முதல் மாணவர் தொகுதி ஆங்கில மொழி மூலம் க.பொ.த.(உÆத) பரீட்சைக்குத் தோற்றி விஞ்ஞான, பொறியியல், வர்த்தகபீடங்களுக்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றனர்.

கல்லூரியின் முதலாவது தொகுதி இரு மொழிமூல (ஆங்கில) மாணவர்கள் தோற்றிய க.பொ.த (சாÆத) 2008 பரீட்சையில் பத்துப் பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற மாணவி ஏ.ஜP. சாஜpதா கல்லூரி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அத்துடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் நூறு வீதமும் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடவிதான செயற்பாடுகள் மட்டுமல்லாது இக் கல்லூரி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய ரீதியில் தடம் பதித்தே வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் தேசிய தமிழ்த் தினப்போட்டியில் நாட்டார் பாடல் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தையும், முஸ்லிம் நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

2000 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் தமிழியல் கட்டுரைப் போட்டியில் முதலாமி டமும் 1998 இல் முஸ்லிம் நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தையும் 1996 இல் வில்லுப்பாட்டில் தங்கப் பதக்கத்தையும் வெற்றிகொண்டது. விவாதப் போட்டிகளிலும் தேசிய ரீதி யில் எமது கல்லூரி தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளமையும் எமது கல்லூரியின் பல மாணவர்கள் ஒலிபரப்பு, ஊடக, இலக்கியத் துறைகளிலும் பிரகாசித்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிட்டுக்காட்டக்கூடியதாகவுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.