புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

வாரபலன்

வாரபலன்

14.04.2013 முதல் 20.04.2013 வரை

கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம்; (நட்பு)
சூரியன் மேடம் (உச்சம்)
சனி துலாம் (உச்சம்)
புதன் மீனம் (நீசம்)
சுக்கிரன் மேடம்; (நட்பு)
செவ்வாய் மேடம் (ஆட்சி)
சந்திரன் இடபம், மிதுனம்,
கடகம், சிங்கம்

விசேடம்

14-4-2013 ஞாயிற்றுக்கிழமை விஜய வருடப்பிறப்பு (சனிக் கிழமை முன் இரவு 11.58)
16-4-2013 செவ்வாய்கிழமை ஷ்டி விரதம்
19-4-2013 வெள்ளிக்கிழமை ஸ்ரீராம நவமி

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா


 

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேடராசிகாரர்களுக்கு இவ்வாரம் அவர்களது ராசியிலேயே சூரியகிரகம் அமைந்திருப்பதால் அலைச்சல் கூடும். சுக்கிரனால் விருந்துகளுக்கு குறைவிருக்காது. பெண் நண்பர்களின் ஆதரவு கூடுதலாக இருக்கும். நல்ல நித்திரைக்கும் குறைவிருக்காது. செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு இருக்கும். மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரும். காரியங்கள் கைகூடிவருவது தாமத மாகும். கேது காரணமாக உடலில் சோம்பல் தன்மை கூடுதலாக இருக்கும்.


 

இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிகாரர்களுக்கு இவ்வாரம் 12ம் இடத்து சூரிய னால் இடம் மாற்றம் ஏற்படலாம் சுக்கிரனால் ஈடுபடுகின்ற தொழில் துறைகளினால் வருமானம் பாதிப்படையாது. ஆடைகள் ஆபரணங்கள் வாங்குவதில் நாட்டம் ஏற்படும். செவ்வாய் காரணமாக கண்சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரும், பித்தம் சம்பந்தமாக பாதிப்புக்கள் ஏற்படலாம். கேது காரணமாக எதிர்பாராத செலவுகளுக்கு இடம் உண்டு.


 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிகாரர்களுக்கு இவ்வாரம் 11ம் இடத்து சூரிய னால் புதிய சொத்துக்கள் வாங்க நேரிடலாம். சுக்கிரனால் மற்றவர்களுக்கு தானம் செய்வதில் மனதில் விருப்பம் ஏற்படும். ஈடுபடுகின்ற தொழில் துறைகளினால் வருமானம் பாதிப்படையாது. செவ்வாய் காரணமாக இருவரை காலமும் வராமல் இருந்த உங்களது பணம் மீண்டு கைக்கு வந்து சேரலாம். கேது குடும்பத்தில் மங்களக ரமான காரியங்கள் நிகழலாம்


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடகராசிகாரர்களுக்கு இவ்வாரம் 10ம் இடத்து சூரிய னால் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். சுக்கிரனால் பெண்நண்பர்கள் மூலம் வீணான குழப்பங்கள் ஏற்படலாம். தேவையில்லாத பெயரும் கேட்க நேரிடலாம். செவ்வாய் காரணமாக உடல் நலம் பாதிப்படையலாம். தோல்சம்பந்தப்பட்ட நோய் ஏற்படலாம். திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படலாம் கேது இவ்வார கடைசியில் நல்ல செய்தியும் வந்து சேரலாம்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்கராசிகாரர்களுக்கு இவ்வாரம் 9ம் இடத்து சூரிய னால் போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். சுக்கிரனால் ஈடுபடுகின்ற தொழில் காரி யங்களால் பொருளாதார வளம் கூடும். பெண் நண்பர் களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தியும் வந்து சேரும். செவ்வாய் காரணமாக எதிர்பாராத செலவு களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். எதிர்பார்க்கும் முடிவுகள் மனதுக்கு திருப்தி தராது கேது திடீர் செலவுக் கும் இடம் உண்டு.


 

கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னிராசிகாரர்களுக்கு இவ்வாரம் 8ம் இடத்து சூரிய னால் அரச பதவியில் உள்ளவர்கள் முன்கவனத்துடன் இருப்பது நல்லது. சுக்கிரனால் வாழ்க்கையின் வசதியை பெருக்குவதில் நாட்டம் ஏற்படும். பெண் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். செவ்வாய் காரணமாக போக்கு வரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள் ளுங்கள். மருத்துவ ஆலோசனை பெற நேரிடலாம். கேது பித்தம் சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரலாம்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிகாரர்களுக்கு இவ்வாரம் 7ம் இடத்து சூரியனால் மனதில் ஒரு தாழ்வு சிக்கல்; நிலை ஏற்படலாம். சுக்கிரனால் பெண் நண்பர்கள் பலவித வழிகளில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பார்கள். செவ்வாய் காரணமாக வீட்டில் மனைவியுடன் கலகம் ஏற்படலாம். எதிரிகளின் தொந்தரவு இருக்கும். வீணாக அலைக்கழிய நேரிடலாம் கேதுவால் வைத்திய ஆலோசனை பெறவேண்டி வரலாம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிகரார்களுக்கு இவ்வாரம் 6ம் இடத்து சூரியனால் சொத்துக்கள் வந்து சேர்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. சுக்கிரனால் நீங்கள் எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுத்து கொண்ட போதிலும் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவது தாமதமாகலாம் செவ்வாய் காரணமாக மனதில் புது துணிவு ஏற்படும். எதிரிகளின் கரைச்சல்கள் குறையும். கேது காரணமாக தங்கம், செப்பு உலோகங்களுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசுகராசிகாரர்களுக்கு இவ்வாரம் 5ம் இடத்து சூரிய னால் பகைவர்களின் தொந்தரவு இருக்கும். சுக்கிரனால் ஈடுபடுகின்ற தொழில் துறைகளினால் நல்ல லாபம் ஏற்படும். நண்பர்கள் ஆபத்துக்கு கை கொடுப்பார்கள் உங்கள் மனதுக்கு பிடித்த பெரியவரை சந்திப்பீர்கள். செவ்வாய் காரணமாக பிள்ளைகளின் யோசனை மனதை கவலைப்படுத்தும். கேது காரணமாக வைத்திய ஆலோ சனை பெறவேண்டி வரும்


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகரராசிகாரர்களுக்கு இவ்வாரம் 4ம் இடத்து சூரியனால் பெண் நண்பர்களிடையே விரோதம் ஏற்படலாம். சுக்கிரனால் நீண்டகாலம் பிரிந்திருந்த இனசன உறவினர்கள் ஒன்று சேரலாம்.

சமூதாயத்தில் உங்களது பெயர் கௌரமாக பேசப்படும். செவ்வாய் காரணமாக தேவையில்லாத அறிமுகங்கள் ஏற்படலாம்.

வயிறு சம்பந்தமான நோய் ஏற்படலாம். கேது காரண மாக வீட்டிலும் பிரச்சனைகள் தலைதூக்கலாம்


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிகாரர்களுக்கு இவ்வாரம் 3ம் இடத்து சூரிய னால் புதிய பதவி கிடைப்பதற்கான சாத்தியம் உண்டு. சுக்கிரனால் நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும் சமூகத்தில் மதிப்பு உயரும். குழந்தை பாக்கியம் ஏற்படும், புதிய சொத்துக்கள் சேரலாம். செவ்வாய் காரணமாக பரீட்சை வழக்குகளில் வெற்றி கிடைக்கலாம். கேது காரணமாக ஆன்மீக பிரயாணங்கள் ஏற்படலாம்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசி;காரர்களுக்கு இவ்வாரம் 2ம் இடத்து சூரியனால் பெருமளவு செலவுகள் ஏற்படலாம். சுக்கிரனால் ஈடுபடுகின்ற தொழில் துறைகளில் வருமானத்துக்கு குறைவி ருக்காது.

அரச பதவி கிடைக்கலாம். குடும்ப சுகம் மேம்படும். செவ்வாய் காரணமாக நெருப்பு தொழிலில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நன்று கேது காரணமாக எதிரிகளின் தொந்தரவு இருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.