புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

‘KAVITHAIMANJAREY’

கவிதை மஞ்சரி -விசு கருணாநிதி

சுகம் காண்பதெப்படியோ?

நெஞ்சமெனும் நெடுந் திரையில்
நிழற்படமாய் வந்தெ னையே
கொஞ்சுகின்ற “நிரோஜி” யுந்தன்
குளிர்வதனம் காணாமல்
நெஞ்சம் வருந்து கிறேன்
நினைவுகளில் தோய் கின்றேன்
பஞ்சணையில் படுத்தாலும்
‘பசி தூக்கம் இல்லை’ யடி!

***

பள்ளியில் நீ பயிலும்
பருவத்தே சாலை தனில்
‘கள்ளியுந்தன் பார்வைக் காய்’
கணப்பொழுதும் ஏங்கி யவன்
சொல்லவொணாத் துய ரோடு
சோகத்தின் விளிம்பி னிலே
அல்லும் பகலும் தான்
அல்லலுறல் அறி வாயோ?

***

காலைக் கதிர் வரவில்
கடிமலர்கள் மலர்வு களில்
வாலையுந்தன் எழில் கொஞ்சும்
வடிவழகைக் காணு கிறேன்
சோலைக் குயில் தோற்கும்
சுந்தரியுன் குரல் தனையே
வாழ்வினிலே தினம் கேட்க
வாராதோ ஒரு பொழுது?

***

முத்தேயுன் நிலை யறிய
முடங்கல்பல சேர்த்தி ருந்தும்
எத்தனையோ மாதங்கள்
ஏகியதுன் பதில் இல்லை!
அத்தானைப் பார்த்தி டவும்
ஆசையுனக் கிலை யாமோ?
சொத்தேநான் தனித்தி ருந்து
“சுகம் காண்ப தெப்ப டியோ?”


தாழ் திறவாயோ...?

என்னி தயக்கூட்டிலுன் நினைவினைத் தேனாய்
எண்ணி சேர்த்தெடுத் துவைத்தேனொருத் தேனீயாய்!
எடுத்தெ றிந்திடாதே கல்லெனுமுன் வார்த்தையால்
எரித்தே தும்விடாதே யுன்மெளனத் தீயினால்!

உன் னிரத்தவணுக்களுக் குள்செந் நிறமாய்
உன் னிருதயவறை மேவுந்நல் காற்றதுவாய்
உன் னிருவிழிக் காணுமிரு கண் மணிகளாய்
உன் னுடன்வாழ் கின்றேனேநீ யறியாயோ?

விழிப்பார் வையால்நீ காதலு ரைக்கின்றாய்
மொழிப்பேசா மலேனோ வெனைக்கடக் கின்றாய்
வலிதெரியா மல்லென்னி தயம் வதைக்கின்றாய்
வெளிவேடங் காட்டியேனோ நீ நடிக்கின்றாய்?

காதலுரைக் குமுன்கண்களுக் குள்வாழ்கின்றேன்
காதலுட னெனைக்காண நீ வருவாயென்றே
கண்ணீருட னேயேகன்னி காத்துக்கிடக் கின்றேன்
கண்ணா ளனேயுன் னிருதயத்தாழ் திறந்திடாயோ?
கனி மொழியா லென்கண்ணீரைத் துடைத்திடுவாயோ?


வீணையின் சுவாச வலி.......

தினமும் வாசிக்கப்படுகிறது
என் வரலாறு
உன் வீட்டுத் திண்ணையில்
படிக்கம் வட்டாவுடன்
பாய்விரிக்கும் பெண்களால்

கண் வைத்துப் பொசுக்கி
கால் வைத்து முறித்து
தலையறுந்த முண்டமாயும்
மூச்சுப் பேச்சற்று
நிர்வாணமாய் கிடக்கிறது
என் வலிகள்

பட்டி இழைத்துப்பொத்தி
சாயமும் பூசி
கள்ளோலை விட்டகணக்காய்
வாய்விட்ட கணக்கு
திண்ணைக்கு விருந்தாகிறது
இன்றுவரைக்கும்


 கவிதைச்சரம் -இராNஜஸ்வரி

காதல்... …

காதல் சொல்ல கடிதம் எழுதி
வலியை சொல்ல வார்த்தை தேடி
உன் விழியை கண்டு தொலைந்து போகும்
அந்த வார்த்தை தேட nஜன்மம் வேண்டும்
சொல்ல வந்த காதல் மட்டும்
சொல்லாமலே நெஞ்சில் வாழும்
சுகமான கனமானதே .


கொள்வனவு

என்
குமர்கள் கிடக்கு
குடில்களும் இல்லாமல்
வளவுகளுக்கோ
வாங்க முடியாத விலை
அதனால்
வானத்தில் வளவுகளை
வாங்கப்போறன்

சந்திரனை உடைத்து
சரளைகளை எடுத்து
அஷ்திவாரம் ஒன்றை
அழகாக அமைக்கப்போறன்.

மேகத்தைக் கூப்பிட்டு
மேலால் அசையாது
மென்மையான கூரை ஒன்றை
வேயப்போறன்

நட்சத்திரங்களை
நாலா புறங்களிலும்
மின் விளக்குகளாக்கி
மிளிர வைக்கப்போறன்

தென்றலை அழைத்து
தேவைக்கு ஏற்றாற்போல்
ஒவ்வொரு அறைகளுக்கும்
ஒரு விசிறிகளாக்கப் போறன்

வானவில்லை வரவழைத்து
வண்ண நிறங்களைப் பூசி
வரன்களை யெல்லாம்
போட்டியிட வைக்கப்போறன்

வானவர்களை தூதுவிட்டு அவன்
வடிவமைத்த மாளிகைகள் போல்
என் ஏழைக் குமர்களுக்கும்
எண்ணப்படி கட்டப்போறன்.

அதற்காக
வானத்தில் வளவுகளை
வாங்கப்போறன்.


உன் நினைவு

கடல் அலையாய்
தினமும் உன் நினைவலைகள்
என்னை உளவறையில்
கரை சேர்க்கின்றது
தினமும்....


தூறல்கள்... -ஜோதி

இலட்சியப் பாதை

வாழ்க்கை வண்டியில்
பல கனவுச் சுமைகளை
சுமந்துகொண்டும்
பல இலட்சியங்களை
தாங்கிக்கொண்டும்
என் முகத்திரையை
கிழித்துக்கொண்டும்
என் இலட்சிய
பாதையில்
முதற் காலடியை
எடுத்து வைக்கிறேன்
எனக்குள் அடையாள
முத்திரையை
பதிப்பதற்கு


நியதி

கிளை பரப்பி
இலை துளிர்த்து
இயற்கையின் பிரதிபலிப்பாய்
சாலையோரத்தில் - அம்மரம்

யார் நட்டது?
யார் நீர் பாய்ச்சியது?
யாருக்கும் தெரியாது - ஆனாலும்
அதன் நிழலில் பலபேர்

பூ பிஞ்சாகி
பிஞ்சு காயாகி
காய் கனியாகும்
கண்கட்டி வித்தை பற்றி
கூடவே இருக்கும்
குருவிச்சை நண்பனுக்குக்கூடத் தெரியாது.

ஆடி பிறந்து விட்டால்
சத்திரமாய் மாறிவிடும்
சத்தியமாய் - அம்மரம்
காய்ந்த சுள்ளி கொண்டு அமைந்த
காக்கைக் கூட்டுக்குள்
காக்கைகள்அடைகாக்க
குயில் குஞ்சுகள்!

காற்றோடு இலை உரச
காய்களும் கனிகளும் தாங்கி
வீரியமாய் இருக்கும் - அம்மரத்தில்
விதவிதமாய் எத்தனையோ!
விருந்தாளிப் பறவைகள்.

திடீரென்று ஓரிரவு
பேயாய் வீசியது
மழையோடு புயல்காற்று
இராட்சதக் காற்றுக்கு
இரையாகியது
இயற்கை ஈன்ற - அம்மரம்

மறுநாள்
புயலுக்குப்பின் அமைதி
சலனமற்ற சிறிய மழைத்தூறல்
மீண்டும் அதே இடத்தில்
பரவிக்கிடந்த விதைகள்
சவாலாயிருந்த மண்ணை

கிழித்துக் கொண்டு...


பொக்கி'ம்

கிடைத்தாய் நீ எனக்கு
தொலைத்தவன் கடவுள்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.