புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
மாங்குளத்தில் இராட்சத சிலந்தி

மாங்குளத்தில் இராட்சத சிலந்தி

இலங்கையின் வடபுலத்தில் குடிகொண்டுள்ள விஷ ஜந்துகள் தொடர்பாக வெளிவரும் புதிய ஆராய்ச்சித் தகவல்கள் மக்களைத் திடுக்கிட வைப்பனவாக உள்ளன.

நாம் வாழும் சூழலில் நமக்கு தெரியாமலேயே இத்தனை கொடிய விஷம் கொண்ட ஜந்துகள் இவ்வளவுகாலம் வாழ்ந்துள்ளனவே! என்ற பிரமிப்பையும் இந்த ஆராய்ச்சித் தகவல்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

மேலும், இவ்வாறான இன்னும் எத்தனை புதிய வகை விஷ ஜந்துகள் நமது சூழலில் உள்ளனவோ, என்ற பீதியையும் மக்கள் மனங்களில் இவை விதைத்துள்ளன என்றுதான் கூறவேண்டும்.

வடபகுதியை பொறுத்தவரையில், காடுகள், பற்றைக்காடுகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், மணற்பாங்கான இடங்கள் என பல்வேறுபட்ட இயற்கை தரைத்தோற்ற அம்சங்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் வித்தியாசமான இயல்புகளைக் கொண்ட பல ஜந்துகளை காண முடிகிறது.

இவை தவிர, கடந்தகால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களால் சேதமடைந்து கைவிடப்பட்ட கட்டட இடிபாடுகள், வாகனங்கள், தளபாடங்கள் போன்றவற்றினை வாழ்விடமாகக் கொண்டுள்ள பல ஜந்துகள், பூச்சிவகைகளை வடக்கில் காண முடியும்.

அறணை, மட்டத்தேள், கொடுக்கன், பூரான், தேள், பாம்பு, மண்ணுண்ணி பாம்பு, சிலந்தி, விஷ குளவி, நீலண்டன் என எமக்கு தெரிந்த சில வகை விஷ ஜந்துகளையும், பெயர் தெரியாத சில வகை ஜந்துகளையும் காண்கிறோம்.

எனினும், இவை தொடர்பில் எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எமக்கு தொந்தரவு கொடுக்கும் என நினைக்கும் பட்சத்தில் அவற்றை கொன்றுவிட்டு நமது வேலையை பார்த்தோம்.

சில சமயங்களில், எமக்கு பெயர் தெரிந்த ஜந்துகள் வித்தியாசம் வித்தியாசமான தோற்றம், குணம், குறிகளுடன் காணப்பட்டாலும் அது தொடர்பில் நாம் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை.

அவ்வாறு அவற்றின் வித்தியாசமான தோற்றம், குணம், குறிகளில் உள்ள வித்தியாசம், விசித்திரத் தன்மையும் நம் கவனத்தை திருப்பினாலும், அது என்ன என ஆராய்ந்து அறிந்துகொள்ள வடக்கில் கடந்த காலங்களில் வசதிகள் மற்றும் நிபுணர்கள் இருந்ததில்லை.

ஆனால், வடக்கின் தற்போதைய நிலைமை அவ்வாறானதாக இல்லை. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வடக்கிற்கு ஏகப்பட்ட வசதிகள் கிடைத்துள்ளன.

யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கில் நிகழாதிருந்த பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள், கணக்கெ டுப்புகள், தற் போது புது வேகம் கண் டுள்ளன. விஞ்ஞா னிகள், ஆய் வாளர்கள் மற் றும் துறைசார் நிபுணர்கள் தமது

ஆய்வுகளை வடக் கிற்கும் விரிவுப டுத்தியுள்ள நிலையில் தான், வடக்கு மக்கள் இதுவரை காலமும் கண்டும் காணாமலும் விட்டிருந்த புதிய வகை விஷ ஜந்துகள் என்ன........? ஏது.....? என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இவற்றில் ஒன்று தான் வெள்ளைத் தேள்கள் ஆகும்....! வெள்ளை நிறத்திலான தேள்களை யாழ். குடாநாட்டு மக்கள் பல சந்தர்ப்பங்களில் கண்ணுற்றபோதும் அது குறித்து அலட்டிக் கொள்ளவோ ஆராய்ந்து பார்க்கவோ முற்படவில்லை. தேளைக் கண்டவுடன் அதனை நசுக்கிப் போட்டுவிட்டு தமது வேலையைப் பார்த்தனர் மக்கள்.

ஆனால், கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரட்ண யாழ். குடாநாட்டில் நடத்திய ஆய்வு ஒன்றில் இலங்கைக்குரிய தேள் இனத்தைச் சாராத வெள்ளைத் தேள்கள் யாழ். குடாநாட்டில் உள்ளன என்பதை உறுதிப்படுத்தினார்.

இவை இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் வாழ்பவை என்றும் இவற்றுக்கு மனிதனை கொல்லும் சக்தி உண்டு என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார். இத்தகைய வலிய விஷமுள்ள வெள்ளை தேள்கள் இந்திய அமைதிப்படை யாழ். குடாநாட்டில் இருந்த காலத்தில் எப்படியோ வந்திருக்கலாம் என்றும் ஊகம் தெரிவிக்கப்பட் டது.

அப்போது தான் எவ்வளவு பாரதூரமான கொடிய விஷம் கொண்ட ஜந்து ஒன்று தமது சூழலில் உள்ளது என்றும் அதனை தாம் கண்டும் காணாமலும் விட்டமை குறித்தும் மக்கள் உணர்ந்து கொண்டனர். இந்த தகவல்கள் மக்களை பெரிதும் அதிர்ச்சி கொள்ளவும் செய்தது. இந்நிலையில், வடபகுதியில் வாழும் வலிய விஷம் கொண்ட இராட்சத சிலந்தி இனம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளம் பிரதேசத்தில் இருக்கும் காடுகளிலும் காடுகளை அண்டிய பகுதிகளிலும் இந்த இராட்சத விஷ சிலந்திகள் கூட்டமாக வாழ்கின்றமை ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த இராட்சத சிலந்தியானது தனது எட்டு கால்களையும் விரித்து எதிரியை தாக்குவதற்கு தயாராக இருக்கும் போது அதன் சுற்றளவு சுமார் 63 சென்டி மீற்றர்களாகும் (ணீசீ) அங்குல கணக்கில் இது 25 அங்குலமாகும். சுமார் 20 சென்டி மீற்றர் (ணீசீ) அல்லது 8 அங்குல விட்டத்தை கொண்ட இந்த சிலந்தி மிக வேகமாக பாய்ந்து எதிர் இலக்குகளை துவம்சம் செய்துவிட வல்லது.

உடல் முழுக்க அடர்ந்த ரோமங்களுடனும் மஞ்சள் இளம் சிவப்பு நிற கோடுகளுடனும் காணப்படும் இச் சிலந்தி தனது நீண்ட கால்களை இறுக முடக்கிக் கொண்டு எதிரியால் இனம்காண முடியாதவாறு மறைந்து பதுங்கியிருக்கும்.

தேவை ஏற்படும் போது தனது கால்களை விரித்துக் கொண்டு தாவி எதிரியை தனது கால்களால் இறுகப் பற்றி விஷ கொடுக்குகளால் விஷத்தை பாய்ச்சி எதிரியை கொல்லும் அல்லது மயக்கமடையச் செய்யும்.

இதன்பின், தனது சுரப்புகள் மூலம் இழையத்தை (நூல் போல) சுரந்து இரையை அல்லது எதிரியை இறுக சுற்றி பின்னர் அதனை தனது நொதிய சுரப்புகள் மூலம் நீர்மம் ஆக்கி பின் அதை உணவுவாக்கிக் கொள்ளும்.

பெரும்பாலும், மரங்களின் பருத்த கிளைகள், அடி மரங்கள், மரப்பொந்துகள் என்பவற்றில் தனது கம்பளிக் கால்களின் உதவியுடன் ஒட்டிப் படர்ந்திருக்கும் இச் சிலந்தி மின்னல் வேகத்தில் தாக்கி தனது விஷயத்தை பாய்ச்சி எதிரியை, அல்லது இரையை கொன்றுவிடும். பாம்பைக் கூட கொல்லும் திறன் கொண்ட விஷமுள்ள இந்த சிலந்திகள் பூச்சிகள், எலிகள், பறவைகள் என்பவற்றை மிக இலகுவாக தாக்கி தனக்கு இரையாக்கிவிடும்.

‘ரறன்சுலஸ்’ (ஹிarantulas) எனப்படும் இராட்சத சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்தியானது ‘பொயிசிலோதேரியா’ (ஜிoலீணீilothலீria) என்ற இனத்தை சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தென் அமெரிக்காவில் உள்ள கோலியாத் பேர்ட் ஈட்டர் என்ற உலகின் மிகப் பெரிய இராட்சத சிலந்திகளை ஒத்தவை இவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சரி வன்னியில் உள்ள மாங்குளம் காட்டிலும் காடுசார்ந்த பிரதேசங்களிலும் வாழும் இத்தகைய கொடிய சிலந்தி இனம் பற்றிய தகவல்கள் எப்படி வெளியுலகிற்கு வந்தன என்ற கேள்வி எழலாம்.

கொடிய விஷம் கொண்ட இராட்சத சிலந்தி முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு மாங்குளம் கிராமவாசிகளிடம் சிக்கியது.

இராட்சத தோற்றம் உள்ள இந்த சிலந்தியை கண்ட கிராமவாசிகள் அது தம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சம் காரணமாக அடித்துக் கொன்று விட்டனர்.

கிராமவாசிகளால் அடித்துக் கொல் லப்பட்ட இந்த சிலந்தி உயிரின பல்வ கைமை தொடர்பான கல்வி மற்றும் ஆரா ய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச் சியாளர் ரணில் நாணயக் காரவின் கைகளில் கிடைத்தது.

இதனை ஆய்வுக்குட்படுத்திய பயோ டைவேர்சிட்டி எஜூகேஷன் அன்ட் ரிசேர்ச் (கிio ளிivலீrsity ரினீuணீation anனீ ஞிலீsலீarணீh) என்ற அமைப்பின் நிறுவுனரான ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார இலங்கையில் வேறு எங்கும் காணப்படாத விசித்திரமான சிலந்தி இனம் இது என்பதையும் இதன் ஆற்றல்கள் குறித்தும் கண்டறிந்தார்.

இதனையடுத்து மேற்படி சிலந்தி இனத்தின் பரம்பல் மற்றும் அவை வாழும் இடம் என்பன குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும் என ஆவல் கொண்ட அவர், தனது குழுவினர் சகிதம் அந்த சிலந்தி இனத்தின் வாழ்விடங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக களம் இறங்கினார்.

காடு மேடுகள் எங்கும் அலைந்து தேடுதல் நடத்தினார். இக்குழுவினருக்கு பொலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் மைக்கல் ராஜகுமார் பூராஜா உதவினார். நீண்ட நாட்களாக தொடர்ந்து அயராத தேடுதலின் விளைவாக குறித்த இன சிலந்திகள் வாழும் இடத்தை கண்டுபிடித்தது ரணில் நாணயக்காரவின் ஆய்வுக்குழு.

மாங்குளம் வைத்தியசாலை வைத்தியர்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட வீட்டு வளாகம் ஒன்றில் பெரிய பெண் சிலந்தியையும் அதன் குஞ்சுகளையும் கண்ட ரணில் நாணயக்கார தலைமையிலான குழுவினர் அதன் இயல்புகள் பற்றி ஆய்வுநடத்தி அதன் குணம், குறி, வல்லமைகள் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.

இதேபோன்ற மேலும் பல சிலந்திகள் மாங்குளம் காட்டுப் பிரதேசங்களில் இருக்கலாம் என்று குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார இந்த சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் ஜிoலீணீilothலீria ஞிலீgalis என்ற சிலந்திகளை ஒத்தவை என தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடபுலத்தே மாங்குளம் காடுகளில் காணப்படும் இந்த புதிய வகை சிலந்தி இனத்துக்கு பொயெசி லோதெரியா ராஜெய் என்று பெயர் வைக்கப்பட் டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களுடன் அலைந்து சிலந்தியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ் அதிகாரி யான மைக்கல் ராஜ்கு மார் புராஜா என்பவருக்கு நன்றி செலுத்தும் முகமாக புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட சிலந்திக்கு பொயெசி லோதெரியா ராஜெய் (ஜிoலீணீilothலீria raஹீaலீi) என பெயரின் விகுதியில் சாதிப் பெயராக அப் பொலிஸ் அதிகாரியானது பெயரின் ஒருபகுதியும் சிலந்தி இனத்தின் பெயருடன் இணைக்கப் பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரியவகை சிலந்தி இனமான இது தற்போது அருகிவருவதாகவும் காடுகள் தற்போது அழிக்கப்படுவதால் இவை பாழடைந்த கட்டடங்கள் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றுள் அதிகளவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த சிலந்தியின் புகைப் படங்களும் ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கை என பார்க்கும் போது விஷ ஜந்துகள் ஆபத்தானவையாக காணப்பட்டாலும் உயிரியல் பல்வகைமையில் அவையும் தேசத்தின் சொத்துக்களே.... வளங்களே..... எது எவ்வாறாயினும், முதலில் வெள்ளைத் தேள் இப்போது இராட்சத சிலந்தி இன்னும் எத்தனை விஷ ஜந்துகள் எமது சூழலில் உள்ளனவோ யார் கண்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.