புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 

குட்டை பாவாடையில்

குட்டை பாவாடையில்

ஹன்சிகா குசும்பு

முன்பெல்லாம் நமீதாதான் குட்டை பாவாடை அணிந்து வந்து சினிமா மேடைகளை கலகலக்க வைப்பார். ஆனால் இப்போது ஹன்சிகா அவர் இடத்தை பிடித்து விட்டார். தான் நடிக்கும் படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக நடிக்கிறாரோ, அதற்கு இணையாக சினிமா விழாக்களிலும் கவர்ச்சி உடைதரித்து கலந்து கொள்கிறார்.

குறிப்பாக தொடை தெரியும் அளவுக்கு குட்டையான உடையணிந்து வருகிறார். அதோடு நில்லாமல், காலை குறுக்க மறுக்க போட்டுக்கொண்டு பயங்கரமாக போஸ் கொடுக்கிறார். இதனால் அவரை ஈயாக மொய்த்துக்கொள்கிறார்கள் கெமராக்காரர்கள்.

முக்கியமாக மேடைகளில் எத்தனை பெரிய பெரிய தலைகள் அமர்ந்திருந்தாலும், தனது பZர் கவர்ச்சி மூலம் பார்வையாளர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கமாக இழுத்து விடுகிறார் ஹன்சிகா.

நடிகைகள் பொது விழாக்களுக்கு வரும் போது சற்று நாகரீகமாக உடையணிந்து வர வேண்டும் என்று நாசுக்காக மைக் பிடித்து பேசுபவர்கள் கூட ஹன்சிகா கலந்து கொள்ளும் விழாக்களுக்கு வந்தால் எந்தவித உபதேசமும் செய்வதில்லை.

மாறாக ஹன்சிகாவின் அழகைப்பற்றி வாய்மணக்க சில வார்த்தைகளை கவிதைகளாக படித்து விட்டுத்தான் செல்கிறார்கள். அதைக்கேட்டு ஏற்கனவே சிவந்த ஹன்சிகாவின் சிவப்பான தேகம் இன்னும் சிவப்பேறிப்போகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.