புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
புத்தாண்டு பாரம்பரியங்கள் இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றன

புத்தாண்டு பாரம்பரியங்கள் இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றன

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு பாரம்பரியங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படுகின்ற நெருக்கமானது இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத் துகின்றது. அதனால் புத்தாண்டிலே பாரம்பரியங்களை கைக்கொண்டு ஆதி காலந்தொட்டு நாம் பேணிப் பாதுகாத்து வருகின்ற மரபுரிமைகளை எதிர்கால சந்ததி யினருக்கு கையளித்தல் வேண்டும்.

அப்போதுதான் நாட்டின் அபிமானம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, பிறந்துள்ள புத்தாண்டை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

சிங்கள, தமிழ் புத்தாண்டானது நாம் ஆதி காலம் தொட்டு கொண்டாடி வரும் பாரம்பரிய கலாசார விழாவாகும். விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட இலங்கை மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன் மூலம் குதூகலம் அடைந்தனர்.

புத்தாண்டின் மூலம் உண்மையான மகிழ்ச்சியினை அடைவதற்கு செழிப் பானதொரு தேசம் இருத்தல் வேண்டும். அதன் நிமித்தம் நாம் நாட்டின் அரிசித் தேவையில் தன்னிறைவினை ஏற்படுத்தி நல்லொழுக்கமுள்ள மக்களைக்கொண்ட செழிப்பான தேசமொன்றை ஏற்படுத்தி மகிழ்ச்சிகரமான புத்தாண்டினை உருவாக்குவதற்கு செய்த அர்ப்பணிப்புக்கள் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.

தற்போது முன்னைய வருடங்களை விடவும் எமது மக்கள் புத்தாண்டு மரபுகளை நிறைவேற்றுவதை காணும் போது எமக்கு பெரும்மகிழ்ச்சி ஏற்படுகின்றது. மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துகின்றேன். இவ்வாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.