புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
விஜய வருடம் விடிவினை தருமா?

விஜய வருடம் விடிவினை தருமா?

மேடம்:

அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் நடுப்பகு திவரை நன்மைகளை தந்தாலும், அதன் பின் சகல விடயங்களிலும் அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டிய வருடமாகும். செய்தொழில்களில் மந்த நிலையும், பணவருவாய் சீராக அமையாமலும் மனக்குழப்பங்களை தரும், குடும்பத்தில் இடையிடை பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும், உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்புக்கள் யாவும் வருடநடுப்பகுதிக்குள் நிறைவேறும். அதன் மேல் இழுபறிகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடிய கவனம் கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் திட்டமிட்டுக் கருமமாற்றினால் கூடிய இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

இடபம்:

கார்த்திகை பின்முக்கால், ரோகிணி மிருக சீரிடத்து, முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் மிகவும் சிறப்பினை தந்திடும் வருடமாகும். செய்தொழில்கள் சீராக அமைந்து பணவருவாய் தரும். எதிர்பார்த்த பல கருங்களில் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்கொண்ட கண்டங்கள் நீங்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல உயர்வினை பெறுவர். முதலீட்டாளர்கள் கடின உழைப்பினால் அதிக இலாபத்தினை பெற்றுக் கொள்வதுடன் புதிய முயற்சிகளிலும் வெற்றி காண்பர்.

மிதுனம்:

மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிய விஜய வருடம் நன்மையும், சம பலன்களையும் கொண்டதாக அமையும். செய்தொழில்கள் முன்னேற்றமடைந்தாலும், பணவருவாய் சீராக அமையாது. மனக்குழப்பங்களை தரும், புதியமுயற்சிகளில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதே வேளை பிரச்சினைகளும் தோன்றும். உத்தியோகத்தர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொண்டால் நன்மையடைவர். இல்லையெனில் சிக்கல்களை தரும். மாணவர்கள் கல்வியில் கூடிய கவனமெடுத்தால் பரீட்சைகளில் சிறந்தபெறுபேற்றினை பெறுவர். முதலீட்டாளர்களுக்கு மனக்கஷ்டங்கள் குறைவடையும் வருடமாக அமையும்.

கர்க்கடகம்:

புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிய விஜய வருடம் கடின முயற்சிகளின் மத்தியில் வெற்றிகாணும் வருடமாக அமைந்துவிடும். செய்தொழில்களில் மந்த நிலை உருவாகி, மனக்குழப்பங்கள் ஏற்படுத்தும் எதிர்பார்க்கும் கருமங்களில் தாமதமும் தடைகளும் உண்டாகும். குடும்பத்தில் அடிக்கடி மனக்குறைகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் மறைந்து முன்னேற்றம் உண்டாகும். முதலீட்டாளர்களுக்கு சிறிது கஷ்டங்களை ஏற்படுத்தி நன்மை தரும் வருடமாக அமையும்.

சிங்கம்:

மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் விடிவினைத் தரும். செய்தொழில்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். பணக்கஷ்டங்கள் நீங்கிடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் விலகி பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயர்ச்சி பெற்று பரீட்சைகளில் சிறந்த பெறு பேற்றினை பெறுவர். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் இதுவரை இழந்த நஷ்டத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் இலாபம் அடைவர்.

கன்னி:

உத்தரத்துப் பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் மனக்கலக்கம் மிகுந்த வருடமாக அமையும். எதையும் அவதானத்துடன் செய்வது நன்மை தரும். செய்தொழில்களில் மந்தநிலை உருவாகும். பணக்கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் வருட நடுப் பகுதியின் பின்பு நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் மனக்கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் எதிர்கொண்ட கல்வி குழப்பங்கள் மறைந்து உயர்ச்சியுண்டாகும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளைத் தவிர்த்து அளவுடன் வைத்துக் கொள்ளுதல் நன்மை தரும்.

துலாம்:

சித்திரையின் பின்னர், சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் விடிவினைத் தருவதாக அமையும். செய்தொழில்கள் சீராக அமைந்து, மன மகிழ்ச்சி தருவதுடன் உரிய பண வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன் திட்டமிட்ட சுபகாரியங்கள் நடந்தேற வாய்ப்புண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்து வந்த மனத்துயர்கள் மறையும். மாணவர்கள் கல்வி நிலை மேலோங்கும். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் இருந்து வந்த கஷ்டங்களிலிருந்து விடுபட்டு ஆதாயமடைவர்.

விருச்சிகம்:

விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் மனக்குழப்பங்களை தந்திடும் வருடமாகும். செய்தொழில்களில் வீண் மனக்கஷ்டங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளால் அதிக செலவுகள் ஏற்படும். பண வருவாய் திருப்திகரமாக அமையாது. கஷ்டங்களை கொடுக்கும். குடும்பத்தில் செலவுகளும், வீண் மனஸ்தாபங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லைகள் மனக்குழப்பங்களை உருவாக்கும். மாணவர்கள் கல்வியில் கூடிய கவனம் எடுக்காவிடில் பரீட்சைகளில் தோல்வியடைய நேரிடும். முதலீட்டாளர்கள் முதலீடுகளை அளவுடன் வைத்துக்கொள்வது நன்மையைத் தரும்.

தனு:

மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் மிகவும் சிறந்த பலன்களைக் கொடுக்கக் கூடிய வருடமாகும். செய் தொழில்கள் சீராக அமையும். பண வருவாய் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கஷ்டங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்துவந்த தொல்லைகள் மறைந்து. மேலதிகாரிகளின் உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் உயர்ச்சியும் பரீட்சைகளில் வெற்றியும் கிடைக்கும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை கையாள வாய்ப்புண்டாகும்.

மகரம்:

உத்தராடத்து முதற்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் முற்பகுதி நன்மைகளையும் பிற்பகுதி மனச்சஞ்சலங்களையும் தரக்கூடியதாக அமையும். செய் தொழில்களில் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. பண வருவாய் எதிர்பார்த்தபடி அமையாது. மனக் கவலையை தரும். குடும்பத்தில் வீண் செலவுகளும், தேக சுகக் குறைகளும் ஏற்பட வாய்ப்புண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளில் அவதானத்துடன் செயற்பாடாவிடில் மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் கல்வியில் குழப்பநிலை ஏற்பட்டு மறையும் முதலீட்டாளர்கள் முதலீடுகளால் வீண் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி, முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம் கஷ்டங்களை நீக்கிடும் வருடமாக அமையும். செய்தொழில்களில் ஏற்பட்டிருந்த கஷ்ட நிலைகள் மறைந்து நன்னிலை உருவாகும். பணவருவாய் திருப்தி தரக்கூடியதாக அமைவுபெறும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கஷ்டங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள், பதவி உயர்வுகளையும், வெளிநாட்டுப் பிரயாணங்களையும் பெற்று மகிழ்ச்சியடைவர். மாணவர்கள் எதிர்நோக்கிய கல்விக் குழப்பங்கள் மறைவதுடன் பரீட்சைகளில் வெற்றியும் கிடைக்கும் முதலீட்டாளர்கள் முதலீடுகளால் இலாபமடைவர்.

மீனம்:

பூரட்டாதி நாலாங்கள், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜயவருடம் சென்ற ஆண்டைவிட ஓரளவு நன்மைதரும். செய் தொழில்களில் முன்னேற்றமும் உயர்ச்சியும், உண்டாகும். பணவருவாய் திருப்தி, தரும் வகையில் அமையாது, கடன்சுமைகளால் கவலைகள் உருவாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும், சமாளிக்கும் தன்மை ஏற்படும். உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிடில் பதவிகளை இழக்கும் நிலை தோன்றும். மாணவர்களுக்கு கல்விக் குழப்பங்களால் இருந்துவந்த தொல்லைகள் மறையும், முதலீட்டாளருக்கு குழப்பநிலைகள் வந்தாலும் சமாளித்து முன்னேற்றம் காண வாய்ப்புருவாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.