புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
கொழும்பில் பொதுநலவாயம்

கொழும்பில் பொதுநலவாயம்

கொழும்பு நகரில் சில இடங்களில் நின்றால் இது கொழும்பா வெளிநாடா என்று எண்ணும் அளவிற்கு அதன் வனப்பு காணப்படுகிறது. வீதிகள், வீதியோர நடைபாதைகள், கட்டடங்கள் புனர் நிர்மாணம் எனப் பல்வேறு கோணத்தில் கொழும்பு அழகு படுத்தப்பட்டு வருகிறது.

இவையனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக என்றாலும், அது நிரந்தரமாகவே அழகுடன் காணப்படப்போகிறது எனும்போது இலங்கை யர்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாகிறது.

பொதுநலவாய நாடுகள் என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுத ந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். இந்த அமைப்பின் பெயருக்கு ஏற்ற மாதிரி யாக இதில் இடம் பெறும் நாடுகள் தமக்கிடையே பொதுவான நலங்களை (சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, ஜனநாயகம், பாதுகாப்பு, உலகசமாதானம் போன்ற விடையங்களை உள்ளடக்கிய) பேணும் நோக்கமாக அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவை அனைத்தும் பிரித்தானி யாவின் ஆட்சியின் கீழ் ஒரு காலத்தில் உட்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.

அன்டிகுவா - பர்புடா, அவுஸ்திரேலியா, பகாமாசு, பங்களாதேஷ், பார்படோசு, பெலீஸ், போட்சுவானா, புரூணை, கமரூன், கனடா, சைப்ரஸ்,டொமினிக்கா,பிஜpத் தீவுகள், கம்பியா, கானா, கிரெனடா, கயானா, இந்தியா, ஜமெய்க்கா, கென்யா, கிரிபத்தி தீவு, லெசோத்தோ, மலாவி, மலேசியா, மாலைதீவு, மால்ட்டா, மொரிசியஸ், மொஸா ம்பிக், நமீபியா, நவு+ரு, நியு+ஸிலாந்து, நைஜPரியா, பாகிஸ்தான்

பப்புவா நியு+ கினி, செயிண்ட் கிட்சும் நெவி சும், செண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சமோவா, சிn'ல்ஸ், சியெரா லியொன், சிங்கப்பு+ர்

சாலமன் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, டொங்கா, திரினி டாட் டொபாகோ, துவாலு, உகண்டா, இங்கி லாந்து, ஐக்கிய தான்ஸானியாக் குடியரசு

வனுவாட்டு, சாம்பியா ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக் கின்றன.

இதன் தலைமைப் பதவியை பிரித்தானி யாவின் மகாராணி வகித்து வருவதுடன் இதன் ஓர் உறுப்பு நாடக பிரித்தானியா இரு ந்து வருகின்றது.

54 ஆவது அங்கத்துவ நாடாக ருவண்டா நாடு 2009 ஆம் வருடம் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது. இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் இரண்டு பில்லி யன் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக வுள்ளது (இது உலக மொத்த சனத்தொகை யின் மூன்றில் ஒரு பகுதியாகும். இலங்கை யில் இந்த மாநாடு நடைபெறும்போது அதன் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' ஏற்கிறார்.

இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறும் பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டு அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளும் மிகுந்த ஆர்வத்து டன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் தமது பிரதமர்களை மாநாட்டிற்கு அனுப்பிவைக்குமென எதிர ;பார்க்கப்படுகின்றது.

“பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பிறிதொரு நாட்டின் மனித உரிமைகள் மேம ;பாடுகள் போன்ற சில நிலைமைகள் சம்பந்த மாக அந்நாடுகள் கவனம் செலுத்துவதாக எந்த நாட்டிற்கும் சுட்டிக்காட்ட முடியும் என்றே நான் இதனைப் பார்க்கின்றேன்” என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படு த்துவதற்கு பொதுநலவாய அமைப்பு தொடர்ந் தும் இலங்கைக்கு உதவி புரிந்து வரும் என்று அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பொதுநலவாய விழுமியங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் நாங்கள் இன்னமும் மும் முரமாகச் செயல்பட்டு வருகிறோம். இதில் மனித உரிமைகள், ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர மதி ப்பு, புரிந்துணர்வு என்பனவும் அடங்கும் எனகி;றார் கமலேஷ் சர்மா. இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு ஆயிரக்கணக்கான ஊடக வியலாளர்களும் வருகை தர இருக்கிறார்கள். எனவே, இலங்கை தொடர்பில் வெளிநாடுகளில் பரப்பப்படும் சில தப்பபிப்பிராயங்களைக் களைவதற்கும் இந்த மாநாடு வழி வகுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.