புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

அறிவுக்கு விருந்தாகும் விடுகதைகள்

அறிவுக்கு விருந்தாகும் விடுகதைகள்

நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
முடி

ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை அது என்ன?
மிளகாய்

நடக்கத் தெரியாதவனுக்கு வழிகாட்டுபவன் அவன் யார்?
திசைகாட்டி

அறைகள் அறுநூறு : அத்தனையும் ஓரளவு அது என்ன?
தேன்கூடு

நீரில் உயிர்பெற்று நிலத்தில் நீர் இறைப்பான். அவன் யார்?
வாளி

எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்
இஸட்.எம். சிதாத் றிமாஹ்

தரம் 05ஊஇ கமு/அல்மனார் மத்திய கல்லூரி, மருதமுனை.
 




இவ்வார சிரிப்பு


ஹரிகேஸ் சர்மா

பார்த்தீபன் - கிருபாகரி

சரஸ்வதி வித்தியாலய வீதி,தம்பிலுவில் 01


 


 

செல்வங்களில் சிறந்தது கல்விச் செல்வம்

“கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை” என்பது வள்ளுவர் வாக்கு. இதற்கொப்ப கெடுதல் அழிதல் இல்லாத செல்வமாக கல்விச் செல்வம் போற்றப்படுகிறது. ஏனைய எவையும் அதற்கொப்பாகா என்பதே இதன் கருத்தாகும். எனவே செல்வங்களில் மேன்மையானதாக சிறப்பிக்கப்படும் கல்வியை நாம் கற்று பயன்பெறவேண்டும்.

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகிணும் கற்கை நன்றே” என வெற்றி வேட்கையில் அதி வீரராம பாண்டியனார் கூறியதை இங்கு நோக்கின் நாம் யாசகம் செய்தாவது கல்வியை கற்கவேண்டும் என்பதன் மூலம் எப்பிரயத்தனப்பட்டாவது கல்வியை பெறவேண்டும் என்பது விளக்கப்படுகின்றது.

ஒருவருக்கு கல்வி வாசம் கிடைத்துவிட்டால் ஏனைய எல்லாம் அவனை வந்தடைந்துவிடும். மன்னன் ஒருவருரையும் கற்றவரையும் ஒப்புநோக்கிய ஔவையார், “மன்னனும் மாசறக்க கற்றோனும் சீர்தூக்கின் மன்னருக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என அழகாக கற்றார் பெருமையை எடுத்துக்கூறியுள்ளார்.

மன்னனோ தம் நாட்டில் மாத்திரம் சிறப்புபெற கற்றவர் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவார் என்பதே இதன் உட்பொருளாகும்.

ஏனைய செல்வங்கள் கள்வர்களால் திருடப்பட்டும் நெருப்பில் வெந்தும் வெள்ளத்தால் அள்ளுன்டும் அழிந்து விடும். ஆனால் கல்வியோ எதனாலும் அழிக்கப்படாது நிலைத்து நிற்கும். “கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பார்கள். கற்றவர்களுக்கே கல்வியின் அருமை பெருமைகளும் மதிப்பும் விளங்கும்.

“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்னும் முதுமொழிக்கிணங்க நாம் இளமை பராயத்திலே கற்கும் கல்வியானது சிலையில் எழுதிய எழுத்துப்போல் நிலைத்து நிற்கும். எனவே மாணவராகிய நாம் இளமையிலேயே சிறந்த கல்வியைப் பெறவேண்டும்.

“ஈன்றபொழுதில் பெருதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்பது பொய்யா மொழி. அதாவது தாயானவள் தன் குழந்தையை பெறும் போது அடையும் மகிழ்ச்சியை விட அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றான் என்பதை அறிந்தவுடன் தன் குழந்தையை பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட கூடியளவு உவகை கொள்வான் என்பதே இதன் கருத்தாகும்.

“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக”

எனபதற்கிணங்க நாம் மாசறக்கற்று கற்றபடி நடந்து காட்டவேண்டும். அப்போது தான் அது நாம் கற்ற கல்விக்கு சிறப்பைத் தரும்.

“சீனா சென்றாயினும் சீர் கல்வி தேடு” என்பது முகம்மது நபி அவர்களின் பொன்மொழியாகும் எத்தேசம் சென்றாவது நாம் சிறப்பைத் தரும் கல்வியை தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பிறப்பில் நாம் கற்கும் கல்வி ஏழுபிறப்பிலும் பயன் தருமாம் இத்துணை சிறப்பான கல்வியை நாம் பசி நோக்காது, கண்துஞ்சாது எத்தனை துயரங்களையெல்லாம் அனுபவித்தாவது பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

“கண்ணுடையோர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர்” கல்வி கற்காதவனது இரு கண்களையும் புண் எனக் கூறுகின்றார். எனவே நாம் கல்வி கற்று அறிவைத் தேடி கண்ணுடையோராக மதிக்கப்பட வேண்டும்.

நாம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினால் அது எமக்கு மாத்திரமல்ல எம்மை ஈன்ற பெற்றோருக்கும் மற்றோருக்கும் பயன் தரக்கூடியது. எனவே நாம் ஒவ்வொருவரும் கல்வியை நன்கு கற்று அதன்படி நல்லொழுக்க சீலர்களாக வாழ்ந்து நன்மைகள் பல செய்து பாமரர்க்கும் கல்வியின் பெருமையை உணர்த்தி வாழவேண்டும்.

ஜதுஸ்ரிஹா - சங்கரலிங்கம்

தரம் - 11

மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு.

 


 

பொன்மொழிகளில் பெண்மணிகள்

* மகிழ்ச்சியும் ஆனந்தமும் மண்டிக்கிடக்கும் இவ்வுலகினில் பக்தியும் ஒழுக்கமும் உடைய பெண்ணே பெரின்பத்தின் உறைவிடமாய் விளங்குகின்றாள். (நபிகள் நாயகம்)

* பெண் என்ற படைப்பு இல்லாவிட்டால் உலக அசைவுகளும் இல்லை. உற்பத்தியுமில்லை. பெண்கள் உலகின் கண்கள் (ஒளவையார்)

* பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை. அவள் அதை அணிவதுதான் அபு+ர்வம் (டென்மார்க்)

ஆர். லு'h
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை.
 


ஜப்பான் புகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற 25ஆவது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மாணவர்களான காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவி முகம்மட் லாபிர் பாத்திமா நிபாஸத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்துக்கல்லூரி மாணவன் பாலேந்திரன் அபிராம் உட்பட சிங்களமொழி மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட படத்தில் மீராபாலிகா தேசிய பாடசாலை அதிபர் இஸ்மா லெப்பை கற்பித்த ஆசிரியர் ஏ. மஹ்றூப் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

(படம் : புதிய காத்தான்குடி விசேட நிருபர்)


 


 

தாய்சொல்லை தட்டாதே

நற்றாய் சொல்லைத் தட்டாதே
நஞ்ச ரோடு முட்டாதே
உற்றார் உறவை வெட்டாதே
உலுத்த ரோடு ஒட்டாதே

கல்லார் வாழ்வை எள்ளாதே
கர்வங்கொண்டு துள்ளாதே
பொல்லார் நட்புக்
கொள்ளாதே
பொழுதை வீணிற் தள்ளாதே.

கற்றார் தம்மைத் தூற்றாதே
கயமைச் செயலைப்
போற்றாதே
அற்றார் தலையில் ஏற்றாதே
அனலில் எண்ணெய் ஊற்றாதே

திண்டிப் பொருளைப்
பழிக்காதே
திருடி விட்டு முழிக்காதே
துண்டு துணியைக் கிழிக்காதே
துளிர்க்கும் பயிரை
அழிக்காதே!


 

மாணவர் கழக உறுப்பினர்கள்

 

அங்கத்துவ இல: 01

அங்கத்துவ இல: 02

அங்கத்துவ இல: 03

அங்கத்துவ இல: 04

அங்கத்துவ இல: 05

சந்திரசேகரன் பிருந்தா
தரம் 02A, ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹட்டன்.

 

எஸ். N'hபனா
தரம் 03, சி.சி.டி.எம். தமிழ் ம.வி, புவக்பிட்டி.

இ'hபா ஹஸ்னா
தரம் 05
பம்பலப்பிட்டி மு.ம.வி. கொழும்பு 04.

எஸ். அட்சரன்
தரம் 05
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி.

ஆர். சஸ்மிதா
தரம் 06, க/ இந்து தேசியக்கல்லூரி,
புசல்லாவை.


 


 

சிறுவர் உலகம் 'மாணவர் கழகம்"

அன்பான மாணவச் செல்வங்களே!

சிறுவர் உலகத்தின் அபிமானிகளாகிய உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக் ;கங்களும் உரித்தாகட்டும்!

தினகரன் வாரமஞ்சரியின் சிறுவர் உலகம் பகுதிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவு உண்மையில் எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

எமது மகிழ்ச்சியில் உங்களையும் பங்கேற்க வேண்டுமென்ற நோக்கில் 'மாணவர் கழகம்" எனும் புதிய பகுதியொன்றை சிறுவர் உலகத்தில் சேர்க்க எண்ணியுள்ளோம்.

சிறுவர் உலக மாணவர் கழகத்தில் கற்கும் மாணவ மாணவிகள் எவரும் அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம். இதற்கென அங்கத ;தவர் அனுமதி கூப்பன் ஒன்று இங்கு தரப்படுகி றது.

அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி அதனுடன் புகைப்படத்தை இணைத்து உங்கள் வகுப்பாசிரியரின் கையெழுத்தைப் பெற்று, தபாலட்டையில் ஒட்டி எமக்கு அனுப்பி வையுங்கள்.

ஏற்கெனவே அனுப்பிய மாணவ, மாணவிகளும் தமது புகைப்படத்துடனான மாணவர் கழக அனுமதிக்கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும். ஊடகத்துறையா னது மாணவ சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

எனவே உங்கள் அபிமான பத்திரிகையான வாரமஞ்சரியின் சிறுவர் உலக மாணவர் மன்றத்தில் உங்களையும் அங்கத்தவராக இணைத்துக்கொண்டு ஊடகப் பயணத்தைத் தொடர விரும்புகிறோம்.

மாணவர் மன்றத்தில் அங்கத்தவராக இணைவதென்பது எதிர்காலத்தில் பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவவும் உங்களது ஆக்கங்களுக்கு களம் அமைப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது புதிய சிந்தனைகளிலும் காலடி பதிப்போம்!


 

எஸ். nஜஸ்சிக்கா
தரம் 04, கிங்ஸ்டன் சர்வதேச
பாடசாலைவெள்ளவத்தை.

இமாஸா இம்தியாஸ்
தரம் 03, அல்குதுஸ் சர்வதேச அரபுப்
பாடசாலை, தெஹிவளை.

அ. அமல மதுசங்க
தரம் 07A, கலைமகள் தமிழ் வித்தியாலயம்,
மத்துகம.

ஏ.Nஜ.எம். ரிக்காஸ்
தரம் 08C, கமு/அல். ஜலால் வித்தியாலயம்,
சாய்ந்தமருது 02.

எம்.ஏ. ஹாஜரா
தரம் 02, கு/ஆமினா மு.வி,
நாகலகமுவ, கொஹிலே கெதர, குருநாகல்.

ஆதிலா ரம்ஸான்
அல்.அஸ்தர் பாலர் பாடசாலை,
உடுகொடை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.