புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

பிரான்ஸ் சைக்கிள் hரி;

பிரான்ஸ் சைக்கிள் hரி;

பிரிட்டனின் கிறிஸ் பார்ம் சம்பியன்

உலகில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இதே போன்ற பிரபலம் பெற்ற மற்றொரு போட்டிதான் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரான்ஸ் சைக்கிள் சவாரிப் போட்டியாகும். ஆண்டு தோறும் நடைபெறும் இப்போட்டி அது இம்முறை நூற்றாண்டுகள் பூர்த்தி விழாவாக பிரான்ஸில் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. கடந்த வாரம் முடிவுற்ற இச் சைக்கிள் ஓட்டப் போட்டி ஜூன் மாதம் 29 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கொர்சிகா தீவில் ஆரம்பமானது. 100 வருடங்கள் பழைமைவாய்ந்த இச் சைக்கிள் சவாரிப் போட்டி இத் தீவில் நடைபெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்முறை 3556 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பிரான்ஸ் சவாரி 21 கட்டங்களாக நடைபெற்றது. பல நாடுகளையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்களுக்கும் மேல் பங்குகொள்ளும் இப்போட்டியில் மலைத் தொடர், நீர் நிலைகள், கரடு முரடான பாதை என்று வழமை போல மிகவும் கடின போட்டியாகவே வீரர்களுக்கு அமைந்தது.

இச்சவால்களையெல்லாம் முறியடித்து இம்முறை 100வது பிரான்ஸ் சவாரியில் பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ் பார்ம் 83 மணித்தியாலம் 56 நிமிடங்களில் சவாரியை முடித்து சம்பியனானார். இரண்டாமிடத்தை கொலம்பியாவைச் சேர்ந்த நைரோ குவின்டானாவும், 3 ஆம் இடத்தை ஸ்பெயினைச் சோந்த ஜோகிம் ரொடீரிகெஸ¤ம் பெற்றுக் கொண்டனர்.

பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டிக்கு நீண்ட வரலாறு உள்ளதைப் போன்றே ஹென்றி கொர்னெட் (பிரான்ஸ்), மொரிஸ் காரின் (பிரான்ஸ்), எடி மர்க்ஸ் (பெல்ஜியம்), சர் பிரட்லீ விகின்ஸ் (பிரித்தானியா), கவுஸ்டோ கொபி (இத்தாலி), பர்னாட் ஹினொல்ட் (பிரான்ஸ்), கிரேக் லெமோன்ட் (அமெரிக்கா), பெட்ரோ டெல்காடோ (ஸ்பெயின்), லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் (அமெரிக்கா) போன்ற சிறந்த சைக்கிளோட்ட வீரர்களையும் உருவாக்கிய சாதனையும் அச்சவாரிக்கே உண்டு.

இம்முறை பிரான்ஸ் சைக்கிள் சவாரிக்கு 100 வருடங்கள் பூர்த்தியாவதால் இச் சவாரிக்கு உலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வமும், குதூகலமும், எதிர்பார்ப்பும் நிறைந்ததாகக் காணப்பட்டது. இச் சைக்கிள் சவாரிப் போட்டி முதன் முதலில் நடைபெற்றது 1903 ஆம் ஆண்டுதான். எனவே இதன் நூற்றாண்டு விழா சென்ற 2003 ஆம் ஆண்டே கொண்டாடியிருக்க வேண்டும். என்றாலும் இடையில் இரு உலக மகா யுத்தங்கள் நடைபெற்றதால் இச்சைக்கிள் சவாரிப் போட்டி நடைபெறவில்லை. அதனால்தான் இதன் நூற்றாண்டு விழாவை 2013 ஆம் ஆண்டே கொண்டாடுவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தார்கள்.

உலகில் வருடா வருடம் பிரபலம் பெற்ற மூன்று சர்வதேச சைக்கிள் சவாரிப் போட்டி நடைபெறுகின்றது. அதில் மிகவும் முக்கியமானதும், பிரபல்யமானதுமானது பிரான்ஸ் சைக்கிள் சவாரிப் போட்டிதான். இதில் மற்றையது, இத்தாலி சவாரியும், ஸ்பையின்ஸ் சவாரியும்தான்.

பிரான்ஸ் சைக்கிள் சவாரி ஆரம்பமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டின் ஒரே விளையாட்டுச் சஞ்சிகையான ழி’திuto சஞ்சிகையாகும். அச்சஞ்சிகையின் விற்பனையை கருத்திற் கொண்டும் சைக்கிள் சவாரிப் போட்டியை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. கடைசியில் இவ்விரண்டு நோக்கமும் வெற்றிபெற்றது.

தற்போதைய பிரான்ஸ் நாட்டில் பிரபல்யமான விளையாட்டுத் தினசரியாக இருப்பது ழி’ரிquipலீ என்ற சஞ்சிகையாகும். இது பிரான்ஸ் சைக்கிள் சவாரியை அறிமுகப்படுத்திய ழி’திuto சஞ்சி கையின் தற்போதைய வெளியீடாகும்.

1903ம் ஆண்டு முதல் பிரான்ஸ் சவாரி 6 கட்டங்களில் நடைபெற்றது. இச்சவாரி 2428 கிலோ மீற்றர் தூரமாகும். இந்த முதல் சவாரியில் இத்தாலியில் பிறந்து பிரான்ஸ் நாட்டுக்காக சவாரியில் கலந்து கொண்ட மொரிஸ் கார்ன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் பொனியரினாலாகும். முதலிடம் பெற்ற மொரிஸ¤க்கு போட்டியை முடிக்க எடுத்த காலம் 94 மணி நேரமும் 33 நிமிடங்களுமாகும்.

கடினமான ஓடுபாதைகளைக் கொண்ட இச் சைக்கிள் சவாரியில் கண்ணுக்கு ரம்மியமான இடங்களும், கரடு முரடான மலைத் தொடர்களின் மத்தியிலும் சவாரி செய்ய வேண்டும். இம்முறை முழு ஓட்டத் தூரம் 3402 கிலோ மீட்டராகும்.

இச்சைக்கிள் சவாரியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கலர்களின் மேலங்கி வழங்கப்படும். போட்டி ஒவ்வொரு கட்டத்திலும் முதலாமிடம் வரும் போட்டியாளருக்கு மஞ்சல் நிறத்திலான மேலங்கி வழங்கப்படும்.

இப்படியாக இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என வரும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான நிறங்களில் டிசேர்ட் மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் முதலாவதாக சவாரியை முடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் கூடுதலாக புள்ளிகளைப் பெற்றவருக்கு பச்சை நிறத்தில் டிசேர்ட் வழங்கப்படும். மேலும் கரடு முரடான மலைத் தொடரில் முதலாமிடத்தில் வரும் வீரருக்கு வெள்ளை நிற அங்கியும் வழங்கப்படுவதுண்டு. எனவே ஐந்நூறு அறுநூறு பேர் கலந்து கொள்ளும் இப்போட்டியில் பல்வேறு வர்ணங்களில் சவாரி செய்யும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இம்முறை தினமும் முதல் கட்டத்தில் முதலாமிடம் பெறும் போட்டியாளருக்கு 22,500 யூரோ வழங்கப்படும். அதே போல் முழு சவாரியிலும் வெற்றி பெறும் வீரருக்கு 450,000 யூரோ வழங்கப்படும். நடந்து முடிந்த 100 வருட பிரான்ஸ் சவாரியில் பல சந்தர்ப்பங்களில் பல எதிர்மறையான சம்பவங்களுக்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. அந்தவகையில் கூடுதலான சந்தர்ப்பங்களில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தது கண்டு பிடிக்கப்பட்டு பின் அவ் வீரர்கள் போட்டித் தடைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த சம்பவங்களும் உண்டு.

சைக்கிள் சவாரி உலகில் பிரபல்யம் பெற்றுவிளங்கும் அமெரிக்காவின் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் அவர் அடுத்தடுத்து 7 முறை சைக்கிள் சவாரிகளில் வெற்றிபெற்று சம்பியனானார். ஆனால் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தப் பட்டங்கள் எல்லாம் பின்னர் பறிக்கப்பட்டன.

இம்முறை நடைபெற்றது 100வது பிரான்ஸ் சைக்கிள் சவாரியாகும். இதற்கு முன் நடைபெற்ற சைக்கிள் சவாரிகள் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த அல்பரிடோ கொண்டாடோர் போட்டித் தூரமான 3569 கிலோ மீட்டரை 91 மணித்தியாலத்தில் முடித்து முதலிடம் பெற்றார். 2008 ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் - 95 சவாரியில் 21 கட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் மற்றொரு ஸ்பெயின் வீரரான கார்லோஸ் செஸ்டோ போட்டித் தூரமான 8559 கிலோ மீட்டரை 87 மணித்தியாலம் 52 நிமிடத்தில் கடந்து முதலிடம் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 96 பிரான்ஸ் சவாரியில் 3459 கிலோ மீற்றர் தூரத்தை மீண்டும் ஸ்பெயின் வீரரான அல்பரிடோ கொண்டாடோர் முதலிடம் பெற்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 97வது சவாரியில் 3642 கிலோ மீற்றர் தூரத்தை லக்சம்பெர்க் வீரரான அன்டி ஸ்லேக் 91 மணித்தியாலயம் 59 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 98வது சவாரியில் கெடல் எவென்ஸ் என்ற அவுஸ்திரேலிய வீரர் 3430 கிலோ மீற்றர் போட்டித் தூரத்தை 96 மணித்தியாலத்தில் கடந்த முதலிடம் பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 99வது சவாரியில் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரெட்லீ விகின்ஸ் 3496 கிலோ மீற்றர் போட்டித் தூரத்தை 87 மணித்தியாலம் 34 நிமிடங்களில் ஓடி முடித்து சம்பியனானார்.

இம்முறை 100வது சவாரியில் போட்டித் தூரத்தை 83 மணித்தியாலம் 56 நிமிடங்களில் கடந்த பிரித்தானியாவைச் சேர்ந்த கிறிஸ் பார்ம் சம்பியனானார்.

எம். எஸ். எம். ஹில்மி

அரநாயக்க.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.