புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
எலுமிச்சையின் அற்புதமான நன்மைகள்!

எலுமிச்சையின் அற்புதமான நன்மைகள்!

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியவை.

குடலை சுத்தப்படுத்துதல்:

எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கத்; திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.

புற்றுநோய்:

லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன.

காய்ச்சல்:

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் /ப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவை நோய்த் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோ'ம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.

கல்லீரல் பிரச்சனைகள்:

ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும்.

ஒவ்வாமை

ஒவ்வாமை எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியு+ட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கண்/பார்வை கோளாறுகள்:

எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவை யான ருட்டின் (Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணப்படுத்தும்.

நீரிழிவு நீரிழிவு:

நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் (hesperetin) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.

பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்:

எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.

முதுமையைத் தடுக்கும்:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜPரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.