புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
ஆவணப்படம், குறும்படத் தயாரிப்பு குறித்த செயலமர்வு கொழும்பில் நடத்த ஏற்பாடு

ஆவணப்படம், குறும்படத் தயாரிப்பு குறித்த செயலமர்வு கொழும்பில் நடத்த ஏற்பாடு

ஆவணப்பட மற்றும் குறும்படத் தயாரிப்பு குறித்த செயலமர்வொன்றை கொழும்பில் நடத்துவதற்கு ஆசிய திரைப்பட மையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச்செயலமர்வு 2013 செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நன்கு பிரபல்யமான இந்தியத் திரைப்பட இயக்குநரான கே.ஹரிஹரன் இச்செயலமர்வை நடத்துவார். இந்தியாவின் புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்பட நெறியாள்கைப் பிரிவின் பட்டதாரியான ஹரிஹரன், சினிமா குறித்துப் போதிக்கும் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக கருதப்படுகின்றார்.

சென்னையில் பிரசாத் குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு முன்னோடி பயிற்சி நிறுவனமான எல்.வி.பிரசாத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்விக் கழகத்தின் பணிப்பாளர் என்ற முறையில், ஹரிஹரன் தனது அணியினருடன் இணைந்து அதி சிறந்த திரைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரை உருவாக்கும் பொருட்டு இரண்டு வருட பாடநெறியை நடத்தி வருகின்றார்.

இச்செயலமர்வு ஆங்கில மொழி மூலம் நடத்தப்படுவதுடன், சிங்கள மொழி மூலம் பயிலும் பயிலுனர்களின் வசதிக்கென இலங்கைத் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான எம்.டி.மகிந்தபால ஹரிஹரனுக்கு உதவுவார். தமிழ் மொழி மூலமான பயிலுநர்களை பொறுத்தவரையில் ஹரிஹரன் நேரடியாக விடயங்களை தமிழிலும் எடுத்து விளக்குவார்.

இந்த ஐந்து நாள் செயலமர்வு ஆவணப்பட / குறும்பட தயாரிப்பு குறித்த விரிவுரைகள், படப்பிடிப்புக்கள், படத் தொகுப்பு மற்றும் ஒரு தயாரிப்பை முழுமையாக மேற்கொள்ளல் என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்து வரும்.

செயலமர்வின் முடிவின் போது பங்குபற்றுனர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான தகவல்களை பின்வரும் முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும். ஆசிய திரைப்பட மையம், இல.118, தெஹிவளை வீதி, பொரலஸ்கமுவ.

மின்னஞ்சல்: [email protected]

அஷ்லி ரத்னவிபூஷண, தலைவர், ஆசிய திரைப்பட மையம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.