புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 

புதிய தோற்றப் பொலிவோடு...

புதிய தோற்றப் பொலிவோடு...

பிரதான வீதியில் Icon Fashion  

 லீவநாகரீக ஆடைத் தெரிவுகளுக்காக அலைந்து திரியாமல் ஒரே கூரையின் கீழ் பெறுவதே அனேகரின் விருப்பமாகும். வாடிக்கையாளர்களின் இவ்விருப்பினைப் பூர்த்தி செய்யும் முகமாகவே Icon Fashion தனது புதுப்பிக்கப்பட்ட காட்சியறையை இல. 160, பிரதான வீதி, கொழும்பு 11 இல் அண்மையில் திறந்து வைத்துள்ளது.

Icon Fashion என்ற பெயர் மக்களுக்கும் புதியதாக இருந்தாலும், இவர்கள் 25 வருடகால அனுபவம் கொண்டவர்கள்.

ஜிலீarlriணீh இன் நவீனமயப்படுத்தப்பட்ட காட்சியறைதான் Icon Fashion என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

 Pearlrich 1987 ஆம் ஆண்டுக்கு முன் இதே முகவரியில் இருந்து வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்து வந்தது.

அதே தரத்தில் தற்போது சேவையை வழங்கி வரும் Icon Fashion ஆனது சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமான நவீன டிசைன்களிலான ஆடைத் தெரிவுகளை ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகின்றது.

மூன்று மாடிகள் கொண்ட இக் காட்சியறையானது ஒவ்வொரு வருக்கும் தனித்தனியான காட்சியறை கொண்டு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சேவையை வழங்கி வருகின்றது. இங்குள்ள மற்றுமொரு விசேடம்சம் யாதெனில் இவர்களிடம் உள்ள ஆடைகளில் பெரும்பாலானவை மும்பாய் மற்றும் பேங்கொக் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்பவையாகும். தற்போது இந்நிறுவனத்தால் தமது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. Icon Fashion இல் ஆடைகளை தெரிவு செய்வோரில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

முஸ்லிம் அல்லாத ஒருவர் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர் விரும்பும் ஒரு இடத்திற்கு புனித யாத்திரையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யும் ஆடைகளுக்கு 20% விலைக் கழிவினையும் Icon Fashion வழங்கி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் கண்டியிலும் தமது காட்சியறையினை ஆரம்பிக்கவுள்ளனர். குறைந்த விலையில் தரமான பொருட்கள் எனும் நோக்கோடு Icon Fashion செயற்படுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.