புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
கூந்தல் உதிர்வதால் கவலையா? இருக்கவே இருக்கு வெந்தயம்!

கூந்தல் உதிர்வதால் கவலையா? இருக்கவே இருக்கு வெந்தயம்!

தற்போது அனைவரும் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அதனால் அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கடைகளில் விற்கப்படும் பலவிதமான கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன் படுத்தி, இன்னும் அந்த பிரச்சனையை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

சிலருக்கு அந்த இரசாயனப் பொருட்கள் தற்காலிகமாக கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.

ஆனால் ஒருநாள் அதனை பயன்படுத்த தவறிவிட்டால், கூந்தல் கொத்துகொத் தாக கையில் வரும். எனவே எப்போதும் இயற்கை பொருட்களைக் கொண்டு தீர்வு காண்பதே சிறந்தது. அந்த வகையில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கி'ம் தான் வெந்தயம்.

இந்த வெந்தயம் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு சமையல் பொருள்.

அந்த பொருளைக் கொண்டு கூந்தலை பராமரித் தால், கூந்தல் உதிர்தல் மட்டுமின்றி, பொடுகுத் தொல்லை, பொலிவிழந்த மற்றும் மென்மையிழந்த கூந்தல் என பல பிரச்சனைகளை போக்கலாம்.

அதற்கு வெந்தயத்தை பல பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஊற வைத்த வெந்தயம்

வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, கா லையில் அதனை அரைத்து பசையாக்க, கூந்தலை அலசிவிட்டு, ஈரமான கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசினால், பல கூந்தல் பிரச்சனைகளைப் போக்கலாம்.

வெந்தய தண்ணீர்

கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, 10 நிமிடம் ஊற வைத்தால், கூந் தல் உதிர்தல் நின்று, நன்கு வலிமையோடு வளரும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.