புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
படித்தது

படித்தது

தம்பலா - இது மூன்று மொழிகளில் வரும் தமிழின் முதல் சிறுகதை. இதனை பாரதி வசந்தன் எழுதியுள்ளார். மகாகவி பாரதி தனது புதுச்சேரி வாழ்க்கையில் சந்தித்த ஒருவர் தான் தம்பலா. தம்பலா புதுச்சேரியில் வாழ்ந்தவர். இவரைப்பற்றி புதுச்சேரியில் வாழ்ந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான பாரதி வசந்தன். பாரதியின் சீடரும் அவரால் பூணூல் அணிவிக்கப்பட்டவரான கனகலிங்கம் எழுதிய சுய வரலாற்று நூலில் தம்பலா பற்றிய ஒரு சிறுகுறிப்பு காணப்பட்டுள்ளது.

‘தம்பலா’ என்ற பாரதியின் நேசத்துக்குரிய மனிதரைப்பற்றிய தேடுதல் நடத்திய பாரதி வசந்தன் அவரைப் பற்றிய தரவுகளை மிகுந்த சிரமத்துடன் தேடி கள ஆய்வு நடத்தி தம்பலாலை எழுதி அவரும் எழுத்தாளர் பிரபஞ்சனும் தொகுத்த 20ம் நூற்றாண்டு புதுவைக் கதைகள் தொகுதியில் இடம் பெறச் செய்தார்.

இந்த தொகுதியின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய எழுத்தாளரும் “அமுத சுரபி” ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன். தம்பலா ஒரு சிறப்பான சிறுகதை என்று எடுத்து கூறியதுடன் அவரது அமுத சுரபி. இதழில் மறுபிரசுரம் செய்தார் இது நடந்தது. டிசம்பர் 2005ம் ஆண்டில் அந்த இதழில் “புதுச் சேரியையும், மகாகவி பாரதியையும் பின்புலமாக வைத்து வரலாற்று நோக்கில் எழுதப்பட்டிருக்கும் பாரதி வசந்தனின் தம்பலா சிறுகதை இன்றைய சமூக சூழலில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளிவந்திருக்க வேண்டும். தோட்டி தொழில் செய்யும் ஓர் அன்பரை பாரதி சகமனிதராக எந்த அளவு நேசித்தார் என்பதும் அத்தகையோருக்கு உரிய சமூக அந்தஸ்து மறுக்கப்படுவது குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருந்தார். என்பதும் அக்கதையில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டி ருக்கிறது. இந்த கதையை படித்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றிய பாரதியின் கருத்தோட்டம் தெளிவாகப் புலப்படும்.

காக்கை குருவி எங்கள் சாதி.என்று அனைத்து யிர்களையும் ஒரே ஜாதி என்று மானுடம் போற்றிய பாரதியை, அவருடைய எண்ணங்களை எழுத்துக் காட்டும் சிறுகதையாக ‘தம்பலா’ எழுதப்பட்டுள்ளது. மகாகவி பாரதியைப் பற்றி எத்தனையோ விடயங்கள் தெரிந்திருக்கிறோம்” ஆனால் ‘’தம்பலா’ கதை மூலம் பாரதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மானிட நேயம் இப்படிப் பன்முகங் கொண்டவர் பாரதி.

பாரதிக்கும், தம்பலா என்ற தலித்துக்கும் ஏற்படும் சந்திப்புதான் இந்த சிறுகதையின் மையக்கரு. படைப்பாளியான பாரதி வசந்தன் “தம்பலா” சிறுகதை மூலம் ஒரு வரலாற்று தகவலை சிறப்பாகச் சொல்லியுள்ளார். அது மட்டுமல்ல அவரது முயற்சியால் அது ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மொழிகளிலும், இது பற்றிய விமர்சனங்கள், பாராட்டுரைகள் தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கி நிவேதிதா புத்தக பூங்கா ஓவியர் மருதுவின் அட்டைப் படத்துடன் வெளியிட்டுள்ளது.

பார்த்தது

ஒரு கவிஞனின் மரணம்

ஒவ்வொரு மனிதனின் ஜனனமும், மரணமும் இயற்கையின் நியதி. ஆனால் அவன் வாழும் காலத்தில், என்ன செய்கிறான். எத்தகைய பணிகளில் ஈடுபடுகிறான் அவையே பதிவு செய்யப்படுகின்றான். ஒரு துறவியைப்போல, தனிமனிதராக, கொழும்பில் சுய நம்பிக்கையுடன் ஓவியத்துறையையும், தான் கற்ற ஆங்கில மொழியையும் நம்பி வாழ்ந்த மானுடம் பாடிய வானம்பாடியான கவிஞர் சக்தீ பால ஜயா ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு தனது இறுதி மூச்சை விட்டு விட்டார். மறு நாள் சனிக்கிழமை அவரின் பூதவுடல் இறுதி. மரியாதைக்காக கலாபவனத்தில் வைக்கப்பட்டுள்ளதாக படத்துடன் செய்தி வருகிறது. அதற்கு முதல் வாரம் வெள்ளிக்கிழமை (26.07.2013) கவிஞரின் 89 வது பிறந்த நாள் என்ற செய்தியும். படமும் தினகரனில் வருகிறது.

அதற்கு மறுநாள் சனிக்கிழமை நண்பர் திலகருடன், தெளிவத்தஜோசப், ஜெயகுமார், பிரபா, பிரதீப் நான், உட்பட அவரைச் சந்தித்து வாழ்த்துகிறோம்.

அவர் எங்களோடு உற்சாகமாக உரையாடுகிறார். கவிஞர் இன்னும் சில காலம் நம்மோடு இருப்பார்” என்ற நம்பிக்கையோடு வாழ்த்தி விடை பெறுகிறோம். சுகவீனமுற்ற அவரை அவரது அண்ணன் மகள் குடும்பத்தினர் சிறப்பாக பராமரித்துள்ளனர்.

கவிஞர் மொழிபெயர்த்த சி. வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே என்ற நூலை மறுபதிப்பு செய்தவர் இளந்தலை முறை கவிஞர் ‘மல்லியப்பு சந்தி’ திலகர் என்று அழைக்கப்பட்டவர். கவிஞர் குடும்பத்தினருடன் இணைந்து இறுதி கடமைகளை நிறைவேற்ற முன்னின்று செயல்பட்டார்.

இயற்கையாக கலிபாடும் இவரைப்பற்றி பத்திரிகையுலக ஜாம்பவனான எஸ். டி. சிவநாயகம் “கவிஞரின் வீர உணர்ச்சி மிக்க கவிதை சீறிப்பாயும் தீப்பொறி கன்றை போன்றது” என்கிறார். மேலும் அவர் கவிஞர் பற்றி குறிப்பிடும் பொழுது ‘கவிஞரின் கவிதா வேகத்தையும் அதற்கேற்ப அவர் பெயர் விளக்கம் பெறுவதையும் சிறப்பாக குறிப்பிடுகின்றார். ‘கவிஞர் பால ஐயாவுக்கு முன்னால் இருக்கும் வெறும் சொல் சக்தி அல்ல அது’ சக்தீ கடைசி எழுத்து “தீ” யன்னாஅதன் பொருள் என்ன?

ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் உண்டு ஒன்று பவர் (ஜிலிதீரிஞி) மற்றது பெயர் ஃபயர் (பியிஞிரி) பவரையும் ஃகயரையும் சேர்த்து ஒரே சொல் ஆக்கியிருக்கிறார். அது தான் சக்தீ என்ற கவிஞர். கலாபவனத்தில் வைக்கப்பட்டிருந்த கவிஞரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட கவிஞர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் வருகை தந்தனர்.

கேட்டது?

நமது மலையகம்

நமது மலையகம் என்ற இணையத்தள அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது.

“இதுவரை நண்பர்கள் மத்தியில் இயங்கி வந்த நமது மலையகம். டொட் கொம் இன்று முதல் அனைவருக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது என்றார். நிகழ்வை தொகுத்து வழங்கிய மல்லியப்பு சந்தி திலகர்

“மலையகத்தகவல் தளம் இணைய தளங்களுக்குள் உள்வாங்கப்படுகிறது. இன்று நாம் வாழ்வது தகவல் புரட்சியுகம் இன்றைய காலத்தின் தேவை உணர்ந்து நமது மலையகம் இணையம் உருவாகியுள்ளது.

கடந்த ஆறுவருடமாக என்னால் நூலகங்களுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் எனது தேடுதலுக்கு இணைய தளமே உதவியது. மலையகத்தவர்கள் இணைய தளத்தை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

“மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் இணையத்தளங்கள் பங்களிப்பு செய்யமுடியும், இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர் இணைய தளங்களில் ஊடாகவே தகவல்களை அறிந்து கொள்கின்றனர் என்றார். நமது மலையக இணைய தளத்தின் முக்கிய செயற்பாட்டாளரான என். சரவணபவன்.

சட்டத்தரணிகளான எழுத்தாளர்கள் இரா. சடகோபனும், ஜி. சேனாதிராஜாவும் மலையகம் குறித்த இணையத்தள பதிவுகள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வரவேண்டும் என்றார். இந்நிகழ்வில் லெனின் மதிவாணம் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

நமது மலையகம் செயற்பாட்டாளர்களில் ஒருவரான எம்.ஜெயக்குமார் நன்றியுரையை வழங்கினார்.

இந்த மலையகம் எப். எம். இணைவானொலி பற்றி இளைஞர் பிரதீப் விளக்கமளித்தார். இன்று மலையக இளைஞர் பல்வேறு தளங்களில் முன்னேறி வருகிறார்கள்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.