புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
அனைத்துக்கும் சிறந்தது

வக்பு சபை அனுமதி பெற்று செயலாற்றுவது

அனைத்துக்கும் சிறந்தது

இலங்கை வக்பு சபை தலைவருடனான நேர்காணல்

கே: நீங்கள் சொல்வதின் படி தக்கியாக்கள், ஸாவியாக்கள், ஜpஸ்தி யாக்கள் மற்றும் தொழுகைக்கு பயன்ப டுத்தப்படும் வணக்கஸ்தலங்கள் அத்தனை யுமே கட்டாயம் பதியப்படவேண்டும்.

ப: ஆம், நிச்சயமாக கூடிய விரை வில் பதிந்து கொள்ளவேண்டும்

கே: அப்படி புதிதாக பதிவதாக இருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ப: முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் புதிதாக பதிவதற்காக ~யு படிவம்' என்று ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அதனைப் பெற்று அதில் சில விபரங்கள் தஸ்தாவேஜ{கள் கோரப்பட் டுள்ளன அவற்றை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், அது வக்பு சபைக்கு அனுப்பப்படும். பரிசீலனையின் பின் பதிவு செய்து கொள்ளலாம்

கே: இப்படி பதிவு செய்வதன் மூலம் அவ்வணக்கஸ்தலங்கள் பெறும் நன்மைகளைப் பற்றி சொல்ல முடியுமா?

ப: அப்படி பதிவு செய்யப்பட்டால் அது அதிகாரம் பெற்ற வணக்கஸ்தலம் என்ற அந்தஸ்தை பெறுகின்றது. உதாரணமாக ஒரு வீடு கட்டப்பட்டிருந்தால் அந்த வீட்டிற்கு வசிப்பதற்கான சான்றிதழ் ஒன்றை பிரஸ்தாப உள்ளுராட்சி மன்றம் வழங்கும். அப்படி அச்சான்றிதழை பெறத் தவறியிருப்பின் அந்த உள்ளுராட்சி மன்றத்திற்கு முடியும் சட்டரீதியான நடவ டிக்கை எடுத்து அந்த வீட்டை உடை ப்பதற்கு. அது போலதான் பதியப்பட்ட வணக்கஸ்தலத்திற்கு வக்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் சகல நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

கே: பள்ளிவாசல்கள் பதியப்பட்டதன் பின்னால் அந்த பள்ளிவாசலை பரிபாலிப்பது அந்தந்த பள்ளிவாசலின் நிர்வாக சபையை பொருத்தது. அந்த பரிபாலன சபை எப்படி அமைய வேண்டுமென்பதை பற்றி உங்கள் வக்பு சபை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?

ப: நம்பிக்கையாளர்கள் தெரிவு செய்வதைப் பற்றி வக்பு சட்டத்தின் 14வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மூன்று உப விதிகள் இருக்கின்றன.

முதலாவதாக சாதாரண நடைமுறைகளை பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது பள்ளி ஜமாஅத்தினர்களில் நம்பிக்கையா ளர்களை தெரிவு செய்வது. இது விசேடமாக நடைமுறையிலுள்ள வழிமுறையை அடிப்படையாக வைத்து ஜமாஅத்தார்களுள் எமக்கு தேவையானவர்களை நம்பிக்கையா ளர்களாக தெரிவு செய்து கொள்வதாகும்.

அதில் இரண்டாவது உபவிதியில் அந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களை தெரி வுசெய்வதில் சர்ச்சைகள் இருந்தால் அதாவது நம்பிக்கையாளர்களை தெரிவு செய்யமுடியாமலிருந்தால், அந்த நேரத்தில் வக்பு சபைக்கு அதிகாரம் இருக்கிறது ஜமாஅத்தார்களுள் வக்பு சபைக்கு விருப்பமானவர்களை நம்பிக்கையாளர்களாக தெரிவு செய்வதற்கு. ஏனென்றால் ஏற்படும் சர்ச்சையின் காரணமாக பள்ளி பரிபாலனத்தை சீர்குலைக்காமலிருப்பதே இந்த நடவடிக்கையாகும்.

மூன்றாவது உபவிதியில் விசேட நம்பி;க்கையாளர் நியமிப்பதற்கு வக்பு சபைக்கு அங்கீகாரம் இருக்கிறது. அதாவது ஒரு பள்ளிவாசலை பரிபாலிக்க நம்பிக்கையாளர் ஒருவரை நாட்டின் எந்த பகுதியிலிருந்தாவது நியமிக்க முடியும்.

கே: நீங்கள் குறிப்பிட்டது போல் வக்பு சட்டத்தின் 14வது விதியின் 1வது உபவிதி யின் படி ஜமாஅத்தார்களுள் ஒருவரை நம்பிக்கையாளர்களாக நியமித்தால் அவர் அந்த பள்ளியில் உள்ள நிர்வாக சட்டத் தின் படி குறிப்பிட்ட நபரை நியமிக்க முடியாது என கண்டால் என்ன செய்யலாம்? உதாரணமாக அந்த ஊருக்கு அண்மையில் வந்து குடியேறிய ஒருவர் அல்லது அந்த ஊருக்கு திருமணத்தின் பின் குடியேறிய ஒருவர் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அவ்வாறான ஒருவர் தெரிவானால், ஏற்க மறுத்தால் யாழ்ப்பானத்திலிருந்தோ அல்லது மன்னாரிலிருந்தோ வந்து குடியேறிய ஒருவரை நம்பிக்கையாளராக நியமிக்க முடியாத நிலை ஏற்படும். இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: பள்ளிவாசல் நிர்வாக சட்டம், நாட்டின் சட்டத்திற்கு மாற்றமாக இருக்க முடியாது. வக்பு சட்டத்தின் 15வது விதிமுறைக்கமைய பள்ளி பரிபாலன சபையில் அங்கம் வகிக்க முடியாதவர்கள் சிலரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்நபர்கள் தவிர ஏனையோர்கள் யாருக்கும் பரிபாலன சபையில் அங்கம் வகிக்கலாம்.

கே: நீங்கள் குறிப்பிட்டது போல் வக்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட படி பரிபாலன சபையில் அங்கம் வகிக்க முடியாதவர்கள் யாரென்று கூற முடியுமா?

ப: நீதிமன்றத்தால் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு இலக்கானோர், மனநோயாளியாக கருதப்படுவோர், மற்றுமொரு பள்ளிவாசல் நிர்வாக சபையில் அங்கம் வகிப்பவர்கள், ஏற்கனவே நிர்வாக சபையில் அங்கம் வகித்து குற்றம் சுமத் தப்பட்டு நம்பிக்கையா ளர் பதவியிலிருந்து இடைநிறுத் தப்பட்ட வர்கள் மாத்திரம் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்ய முடி யாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(தொடரும்...)

கே: ஒரு நபர் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்படாவிடினும் அவர் அந்த ஊரில் பாரதூரமான குற்றச்செயல்களில் அதாவது சூதாட்டம், வட்டி, ஸினா போன்றவற்றில் ஈடுபடுபவராக இருந்தால் அவரை நம்பிக்கையாளராக நியமிக்க முடியுமா?

ப: நான் முன்பு குறிப்பிட்டது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத்தின் விதிகளையே. 'ரீஆ சட்டத்தில் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டால் அவர் எந்த விதத்திலும் பொருத்தமானவராக கருதப்பட முடியாது. ஜமாஅத்தார்கள் இவ்வாறான குற்றச்செ யல்களில் ஈடுபடுபவர்களை நம்பிக்கையாளராக தெரிவு செய்யாதிருக்க தெரிந்திருக்க வேண்டும்.

கே: நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு (டிரஸ்டிமார்களுக்கு) அவர்களின் கடமைகளை பற்றி தெளிவு படுத்திக் கூறியிருக்கிறீர்களா?

ப: எனது அனுபவத்தால் கூறுகிறேன். வக்பு சபையில் விசாரணைக்காகவும் வழக்குகளுக்காகவும் வருவதில் 99மூ மான நிர்வாக சபையினருக்கு வக்பு சட்டம் ஒன்று இருப்பது பற்றி தெரியாது. சட்டத்தில் என்னென்ன கூறப்பட்டுள்ளன என்பது பற்றியும் அவர்களது கடமை என்வென்பது பற்றியும் கூட தெரியாது. இது தான் தற்போதைய நிலமையாகும். இந்நிலமையிலிருந்து வெளிவருவதற்காக நாம் இவ்வளவு நாளும் இருந்த நிலையை மாற்றினோம். அதாவது முன்பு பள்ளிவாசலில் நிர்வாக உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டால் அவர்களது நியமனம் உறுதிசெய்யப்பட்டு அவர்களது நியமனக் கடிதம் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும். ஆனால் நாம் பதவியேற்று பொறுப்புக்களை ஆரம்பித்தவுடன் அந்நிலையை மாற்றி, ஒரு பள்ளிவாசலில் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவுடன் ஒரு நாளை உறுதி செய்து அவர்களுக்கு நியமனம் நடைபெறுவதாக அறிவித்து அவர்கள் வக்பு சபைக்கு வரவழைக்கப்படுவர். கிட்டத்தட்ட 15 - 20 பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்களை ஒன்றினைத்து சுமார் 2 - 3 மணித்தியலாங்கள் வக்பு சட்டம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். மற்றும் அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்த பின்புதான் நியமனக் கடிதங்களை வழங்குவோம்.

இவ்வாறு நாம் சுமார் இரண்டரை வருடங்களாக செய்து வருகிறோம். இந்த முறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டுவருகிறோம். இதன் மூலம் (டிரஸ்டிமார்கள்) நம்பிக்கையாளர்கள் அவர்களது பணிகளை (கடமைகளை) நன்கு புரிந்து கொண்டு சரியாக செயற்படுவார்கள்

கே: பள்ளிப் பரிபாலன சபையினருக்கு அவர்கள் மேல் உள்ள கடமைகள், ஊரில் ஜமாஅத்தினருடன் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை தெளிவுபடுத்த இடத்துக்கு இடம் சென்று கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடாத்துவது போன்ற திட்டங்கள் இல்லையா?

ப: இவ்வாறே எமது செயற்பாடுகளின் தொடர்ச்சியாக நாம் வெளிப்பிரதேசங்களில் வேலைத்திட்டங்களை செயற்படுத்துகிறோம். இவ்வேலைத்திட்டங்களின் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது பொறுப்புக்கள், வக்பு சட்டம் என்பன பற்றி தெளிவு படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம். அதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றோம். யாழ்ப்பாணத்தை முதற்கட்டமாக தெரிவு செய்ததற்கு எமக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. முதலாவது நாம் மேலே கூறிய நோக்கமும் இரண்டாவது யுத்தம் நடைபெற்றதனால் பள்ளிவாசல்களை பார்த்து அவற்றின் மீள்கட்டமைப்புக்கான தேவைகளை நிறைவேற்றுவதாகும். அடுத்தது மன்னாரிலும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தினோம். இவ்விரண்டு பிரதேசங்களிலும் எமது செயற்பாடுகளில் 100மூ வெற்றி கண்டுள்ளோம்.

இவ்வாறே ஏனைய பிரதேசங்களிலும் இது போன்று செயற்படுத்துவதற்கான திட்டங்களை (Pடயn) மேற்கொண்டு வருகிறோம்

கே: சரி. அவ்வாறே நீங்கள் இந்த மாதிரியான வேலைத்திட்டங்களின் மூலம் நம்பிக்கையாளர்களுக்கான பொறுப்புக்கள் பற்றி அவர்களுக்கு தெளிவு படுத்துகிறீர்கள். அதே நேரம் இவ்வாறான தெளிவுகளை மக்களுக்கு வழங்குவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் நம்பிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் சரியாகத்தான் செய்கிறார்களா? அல்லது சட்டரீதியற்ற முறையில் செயற்படுகிறார்களா? என்பது பற்றி மக்களுக்கு தெரியாதல்லவா?

ப: அதற்கு பெரிதாக ஒரு செயற்பாடுகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஒரு நாட்டிலுள்ள எல்லா பிரiஜகளும் அந்நாட்டு சட்டங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இது வக்பு சட்டம் மட்டமல்ல எல்லா சட்டங்களுக்கும் பொதுவானது. ஆனால் இது நடைமுறையில் செயல்படுவதில்லை. அதனால் நாம் எவ்வளவு முடியுமோ அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் உங்கள் சேவை பாராட்டக்கூடியது. அந்த வகையில் உங்களுக்கும் உங்கள் பத்திரிகை தினகரன் வாரமஞ்சரிக்கும் நன்;றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த நேர்காணல் மூலம் பொது மக்களுக்கு அறிவ+ட்டப்படுவதற்கு வசதி ஏற்படுவது சம்பந்தமாக. ஜஸாகல்லாஹ{ கைர்

கே: ஆமாம் இதன் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் போய்ச்சேருமென்று நம்புகிறேன். இது சம்பந்தமான எனது கருத்தை கூறுகிறேன், ஜம்இய்யதுல் உலமா அண்மையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய ஒரு அறிவித்தலை எல்லா பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி அதனை அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்குமாறு கூறினார்கள். இவ்வாறு உங்களுக்கு ஏதேனும் முயற்சிகளை செய்ய முடியுமல்லவா? அப்படி செய்தால் இது நல்ல பலனை தரும் என நினைக்கிறேன்.

ப: ஆமாம். அதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டுள்ளோம், கூடியளவில் நிறைவடைந்துள்ளது. அதாவது நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் வக்பு சபைத்திட்டம் மற்றும் நம்பிக்கையாளர்களின் பொறுப்பக்கள் என்பன பற்றி சுருக்கமான அறிவித்தலொன்றை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயார்செய்து பதிவு செய்யப்பட்ட எல்லா பள்ளிவாசல்களுக்கும் அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொணடுள்ளோம். இன்'h அல்லாஹ் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் அது நிறைவடைந்து விடும் என நாம் எதிர்ப்பார்க்கிறேன்.

கே: அடுத்ததாக பள்ளிவாசல்களில் நம்பி;க்கையாளர்கள் நியமனம் பெற்ற பின் பள்ளிவாசலை பரிபாலிக்கும் போது அவர்களுக்கு கட்டுமானங்கள் மற்றும் ஏனைய வகையிலான நிறைய செலவினங்கள் ஏற்படும். அதனை அவர்கள் எந்த முறையில் நிறைவேற்றலாம். அதற்கான வருமானங்கள் மற்றும் செலவுகளை பற்றி சற்று கூறமுடியுமா?

ப: நீங்கள் கேட்டது மிகவும் முக்கியமான ஒரு கேள்வியாகும். ஏனெனில் எனது அனுபவத்தில் உணர்வது எதுவெனில் நம்பிக்கையாளர்கள் நியமனம் பெற்ற பின்பு அவர்கள் பள்ளிவாசலை தமது சொந்த சொத்தாக எண்ணுவார்கள். அவர்களுக்கு தேவையான வகையில் செலவினங்களை மேற்கொண்டு தேவையான வகையில் பள்ளிவாசலை நடத்திச் செல்வார்கள். முதல் விடயம் அவ்வாறு செய்ய முடியாது. அது சட்டவிரோதமானது. ஏனெனில் வக்பு சட்டத்தில் இது விடயமான நியை சட்டங்கள் உள்ளன. இதில் முக்கியமானது தான் வக்பு சட்டத்தில் 17வது பிரிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது வக்பு சபையின் மூலம் அனுமதி பெற்று வக்வு சபையினால் அங்கீகரிக்கபட்ட ஒரு வங்கிக் கணக்கு ஏதாவது வங்கியில் இருக்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கின் மூலமாகத்தான் பள்ளிவாசலுக்கான அனைத்து பணப்பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும்.

மற்றும் அதே 17வது பிரிவின் 3வது உபபிரிவில் கூறப்பட்டுள்ளதாவது பள்ளிவாசல் பொறுப்புதாரிகள் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.100 ற்கு மேல் கைவசம் வைத்துக்கொள்ளக்கூடாது. ரூ. 100 இற்கு மேல் இருப்பின் இது வங்கிக்கணக்கில் வைப்பிலிட வேண்டும் என்பதாகும்.

கே: இச்சட்டம் வக்பு சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் செயற்படுத்தப்பட்டதா? நான் ஏன் இதை கேட்கிறேன் என்றால் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தமட்டில் 100 ரூபாய் என்பது ஒரு சிறிய தொகை. இன்று இத்தொகையால் எந்த வேலையையும் செய்ய முடியாத படி பணத்தின் பெறுமதி குறைந்துள்ளது. இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: ஆம். 1956 ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் அக்காலத்தில் அது பெரிய தொகையாகும். ஆனால் இது வரை இச்சட்டம் திருத்தியமைக்கப்படவில்லை. எனினும் சட்டம் திருத்தியமைக்கப்படும் வரை ரூ. 100 என்பது மாறாத தொகையாகும். ஆனாலும் அச்சட்டம் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.

கே: பள்ளிவாசல்களுக்கு கட்டாயமாக வங்கிக்கணக்கொன்று இருக்க வேண்டும் என்றும் கொடுக்கல் வாங்கல்கள் அதாவது வரவு செலவுகள் கண்டிப்பாக அதன் மூலம் செய்யப்பட வேண்டும் என்றும் சொன்னீர்கள். அதைப்பற்றி சொல்ல முடியுமா?

ப: ஆம். வங்கிக் கணக்கை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் இருக்கின்றது. ஏனெனில் நம்பிக்கையாளர்கள் என்பது பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட நம்பி;க்கைக்கு உரியவர்களாகும். இவர்களுள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உட்பட்டவர்களாக பள்ளிவாசலை பராமரிக்க வேண்டும். நம்பிக்கை இழக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு வங்கிக் கணக்கொன்று இருக்கும் சமயத்தில் பணவைப்பு, மீளப் பெறல் சம்பந்தமான பற்றுச் சீட்டுக்கள் (ஏழரஉhநச) காணப்படும் அந்த தகவல்களை அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்யும் போது பொது மக்களுக்கு வருமானம் மற்றும் செலவுகள் பற்றி அறியக்கூடியதாக இருக்கும். மற்றும் சந்தேகங்கள் ஏற்படக்கூடிய பட்சத்தில் அதனை தீர்த்துக்கொள்வதற்கும் வசதியாக இருக்கும். இல்லாவிடின் செலவினங்களை மறைத்து வைப்பதன் மூலம் ஜமாஅத்தினருக்கு அது பற்றி அறியக்கூடியதாக இருக்காது.

அதற்கு அடுத்த விடயம் தான் பள்ளிவாசலுக்கு வரக்கூடிய வருமானங்கள் அது பல முறைகளில் வரலாம். அதாவது நன்கொடைகள், உண்டியல் சேமிப்புகள், வாடகைகள், மாதாந்த சந்தா. எனினும் மாதாந்த சந்தா சட்டத்தில் கூறப்பட்ட ஒன்றல்ல விருப்பமானவர்கள் செலுத்த முடியும். அது பலவந்தமாக எடுக்கப்படக்கூடியது அல்ல.

கே: ஆனால் எல்லா பள்ளிவாசல்களிலும் சந்தா பணம் கட்டாயம் கட்டப்படவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. சில பள்ளிகளில் சந்தாப்பணம் தொடர்ந்து கட்டாவிட்டால் அங்கத்துவம் இழக்கப்படும் என கூறப்பட்டிருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்.

ப: ஆம் சந்தாப்பணம் தற்போது அனைவரி;மிருந்தும் பெறப்படுகின்றது. ஆனால் சந்தாப்பணம் செலுத்தினால் மட்டுமே பள்ளி ஜமாஅத்தில் அங்கத்துவம் பெற முடியும் என்று ஒன்று கிடையாது. எவ்வாறு வருமானம் பெறப்படினும் அதற்கான செலவினங்களை மேற்கொள்வதற்கு சட்டத்தில் முறைகளுண்டு. அதாவது வக்பு சட்டத்தின் 18வது பிரிவின் படி எட்டு விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

அதில் முதலாவது பள்ளி திருத்த வேலைகள், பராமரிப்பு போன்றவற்றிக்கும், அடுத்தது பள்ளிவாசல் முஅத்தின், இமாம் அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளையும் செலவழிக்க முடியும். மற்றது மார்க்க விடயங்கள் அதாவது கந்தூரி சம்பந்தமான செலவுகளையும் மேற்கொள்ள முடியும். மேலும் ஜமாஅத்தினரின் மார்க்க அறிவை மேம்படுத்துவதற்கான செலவினங்களையும் மேற்கொள்ள முடியும். இவைதான் அவற்றில் முக்கியமானவையாகும். இவ்வாறான செலவினங்களை மட்டுமே பள்ளிவாசல் நிர்வாகசபையினால் மேற்கொள்ள முடியும்.

கே: சில வேளைகளில் பள்ளிவாசலுக்கு ஒரு அனாதரவான மையத்து அது ஊர் ஜமாஅத்தினராக இருக்கலாம் அல்லது வேறு ஒருவராக இருக்கலாம், இவ்வாறான ஒரு மையத்து கொண்டுவரப்பட்டால் அந்த மையத்தை குளிப்பாட்டி அடக்கம் செய்வதற்கான செலவை பள்ளிவாசல் நிர்வாகத்தில் மேற்கொள்ள முடியுமா?

ப: ஆம். முடியும். அதுவும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வக்பு சட்டத்தின் 18வது பிரிவில் 5ம் உப பிரிவில் அவ்வாறான ஜனாஸாவுக்கான செலவுகளை மேற்கொள்ள முடியுமென்று கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக குருநாகல் பிரதேசத்தில் ஒரு தாயின் மகள் வேறு சமய ஆணை திருமணம் செய்ததன் காரணமாக அப்பெண்ணை ஊரை விட்டும் விலக்கிவைத்து அப்பெண்ணுக்கு கசையடி அடித்து தண்டப்பணமும் அறவிட்டனர். பின்னர் அவர்கள் மனித உரிமை அமைப்புக்கு முறையி;ட்டு அவ்வமைப்பினால் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வக்பு சபைக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து நாம் நிர்வாகத்தினரை பதவி நீக்கம் செய்ததோடு, அந்த நிர்வாக நம்பிக்கையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறு நாம் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனருக்கு கூறினோம்

இவ்வாறான விடயங்களுக்கு நாம் கடுமையான நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் வருகிறோம். ஏனெனில் இது ஒவ்வொருவரினதும் மனித உரிமையாகும். யாரும் மனித உரிமை மீறலான விடயங்களை மேற்கொள்ள முடியாது. முனித உரிமை சம்பந்தமாக விசாரிக்கக்கூடிய ஒரே இடம் உயர் (ளுரிசநஅந) நீதிமன்றமாகும். நம்பிக்கையாளராக இருந்தாலும் கூட ஒரு தனிநபரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது.

கே: ஜமாஅத்தினர்களுள் யாராவது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பின் அதாவது மிக வறுமையான நிலமையில், வாழ கஷ்டப்படுபவர்கள் அவர்களுக்கும் உதவி செய்ய முடியுமா?

ப: முடியும். ஆனால் கல்விக்கான உதவிகளை மட்டும் தான் வக்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

கே: கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவிகள் செய்வது கூறப்படவில்லையா?

ப: இல்லை. வக்பு சபையினால் உதவி செய்ய முடியாது. தர்ம நிதியத்தால் அவ்வாறான உதவிகள் செய்யலாம். பள்ளி நிர்வாகத்தினரிடம் விண்ணப்பப்படிவம் ஒன்றை சமர்ப்பித்தல். அதனடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினரால் தர்ம நிதியங்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடியும். மேலும் முதலில் கூறியது போல் ரூ. 100 க்கு மேல் பணம் செலவழிப்பதாயின் கட்டாயம் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளரின் அனுமதி பெற வேண்டும். இதுவும் வக்பு சட்டத்தின் 18வது பிரிவிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் யாரும் அனுமதி பெறுவதில்லை. இது சம்பந்தமாக நாம் தற்போது விசாரணைகளை மேற்கோணடு வருகிறோம். ஏனெனில் சில பள்ளிவாசல்களில் பெரிய தொகைகiளை வைத்து செலவு செய்வார்கள். எந்த வகையான அங்கீகாரமும் பெறுவதில்லை. அப்படி அவர்கள் (நம்பிக்கையாளர்கள்) நினைத்தபடி அங்கீகாரம் இல்லாமல் செலவு செய்யமுடியாது.

கே: அப்படியாயின் பள்ளிவாசல் திருத்தவேலைகளுக்கும் புது நிர்மாணம் போன்றவற்றிக்கும் செலவு செய்வதாகவிருந்தாலும், பள்ளியில் இடமில்லை என்றிருந்தாலும் இவ்வாறு அனுமதி பெற வேண்டுமா?

ப: ஆம். கட்டாயம் எந்த வகையான செலவாக இருப்பினும். உதாரணமாக கதீப், முஅத்தின் சம்பளம் வழங்குவதாக இருந்தாலும் அனுமதி பெறவேண்டும். சம்பளப்பணம் வழங்குவதற்கு மாதாந்தம் அனுமதி பெற வேண்டும் என்னும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட சுமார் ஒரு வருடம் அல்லது இரண்டு வருட காலத்துக்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும். இல்லையெனின் இதற்காக வக்பு சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

கே: அடுத்ததாக எனது கேள்வி என்னவெனில் பள்ளிவாசலுக்கு கிடைக்கும் பல்வேறு வகையான வருமானங்களின் மூலம், ஊர் ஜமாஅத்தினருக்கு அறிவிக்காமல் பள்ளி நிர்வாக உறுப்பினர்களின் சொந்த முடிவோடு பள்ளிவாசலில் திருத்த வேலைகளோ அல்லது கட்டுமானங்களோ அல்லது உடைத்து அகற்றுவது போன்றவை மேற்கொள்ள முடியுமா?

ப: முடியாது, அத்தோடு ஊர் ஜமாஅத்தினரும் கூட சேர்ந்து முடிவு எடுத்தாலும் அவ்வாறான வேலைககை மேற்கொள்ள முடியாது. அவர்கள் கட்டாயம் வக்பு சபையின் அனுமதி பெற்றே அவற்றை செய்யவேண்டும். அதிலும் இரண்டு விடயங்கள் உண்டு. நான் முதலில் கூறியது போல் எல்லா செலவினங்களுக்காகவும் திணைக்கள பணிப்பாளரின் அனுமதி பெற வேண்டும். அதேபோல் பள்ளிவாசலில் அவ்வாறான வேலைகளை மேற்கொள்ளவும் அனுமதி பெறவேண்டும். ஏனெனில் நம்பிக்கையாளர்கள் என்பது நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே. அவர்களின் விருப்பத்திற்குரியவாறு செலவினங்களை மேற்கொள்ளமுடியாது.

பள்ளிவாசலுக்கு நம்பிக்கையாளர்கள் தெரிவு செய்தால் அவர்களின் நிர்வாக காலம் மூன்று வருடங்களே. ஆகவே அவர்கள் அவ்வாறான வேலைகளை மேற்கொள்ளும் போது உதாரணமாக ஒரு கட்டடம் அமைப்பதாயின் வக்பு சபைக்கு அதற்குரிய திட்டம், அமைப்பதன் நோக்கம், ஏற்படும் செலவு, செலவுகளை எவ்வாறு ஈடுசெய்வது, உதவிகள் எங்கிருந்து பெறப்படுகிறது என்பன.

பின் நாம் அதனை ஆராய்ந்து அதில் ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் அனுமதி வழங்குவோம். ஏனெனில் பள்ளிவாசலின் நலன்கருதி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒரு போதும் தடையாக இருக்கமாட்டோம். இதுவரை நாம் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை கூட செய்யவிடாது தடுத்தது கிடையாது. எனினும் நாம் எந்தவொரு வேலையை மேற்கொள்ளும் போதும் ஒரு சட்டப்படியான ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். அவை சமூகத்துக்க தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையக்கூடாது.

கே: சில இடங்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகள் அல்லது வீடுகள் போன்றவற்றை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருமானத்தை கூட செலவழிப்பதற்கான கட்டுப்பாடுகள் ஏதும் உள்ளதா?

ப: ஆம். வருமானம் என்ற விடயத்திற்கு வரமுன்பு வாடகைக்கு விடுவது பற்றி கூட சட்டங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் செலவு செய்வதோ வாடகைக்கு விடுவதோ முடியாது. ஏனெனில் நம்பிக்கையாளர்களில் பலர் இவ்வாறான விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை. தமது சொந்த விடயங்களில் மேற்கொள்ளும் பேணுதலை பள்ளிவாசலின் விடயங்களில் மேற்கொள்வதில்லை. அதனால் தான் வக்பு சட்டத்தின் 22வது பிரிவில் கூறப்பட்டுள்ளது பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களை வாடகைக்கு விடலாம் எனினும் அதற்காக வக்பு சபையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

சுருக்கமாக கூறுவதாயின் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பள்ளிவாசலுக்கு எந்த விடயம் மேற்கொள்வதாயினும் வக்பு சபை அனுமதி பெற வேண்டும். ஏனெனில் நம்பிக்கையாளர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு பலர் நம்பிக்கையாளராக தெரிவு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை மேற்கொண்டால் பள்ளிவாசலின் நிலமை கவலைக்கிடமாகி விடும்.

இவ்வாறு பள்ளிவாசல் சொத்துக்களை வாடகைக்கு விடுவதாயின் முதலில் ஒரு அறிவித்தலை ஊர் ஜமாஅத்தினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது இவ்வாறு வாடகைக்கு விடுவது பற்றி மக்களுக்கு அறிவித்து, அவர்களது வாடகைத்தொகையை வைத்துக்கொண்டு ஒரு சந்தை பெறுமதியை அறிய வேண்டும். பின் அதனடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்து அதனை வக்பு சபைக்கு சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். பின்பு பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகள், அல்லது வீடுகள் வாடகைக்கு கொடுக்க முன் (டென்டர்) விலை மனு கோரி அதிகமாக வரும் மனுவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும். இல்லையெனில் வக்பு சபையால் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

இதே போன்று தான் பள்ளிக்குரிய சொத்துக்களை விற்பனை செய்யவும் முடியாது. அவ்வாறு விற்பனைகளை மேற்கொண்டிருப்பின் வக்பு சபையால் விற்பனையை ரத்து செய்து அச்சொத்துக்களை மீளப்பெற முடியும். அதனால் கொள்வனவாளர்கள் தான் நஷ்டமடைவர். இவ்வாறு எல்லா விடயங்களுக்கும் அங்கீகாரம் பெற வேண்டும்.

கே: இது எல்லா வகையான வருமானங்களுக்கும் ஒரு வங்கிக் கணக்கை தான் நடைமுறைப்படுத்த வேண்டுமா அல்லது ஏதாவது உபகணக்குகளை பின்பற்ற முடியுமா?

ப: இல்லை. இது எல்லா வகையானதற்கும் 17வது பிரிவில் கூறியது போல் பள்ளியின் வங்கிக்கணக்கில் தான் பதியப்படவேண்டும். எல்லா வகையான வருமானங்களும் பள்ளிவாசலுக்காக பெறப்பட்டவை எல்லாம் பள்ளிக்கணக்கில் தான் பதியப்படவேண்டும்.

கே: அவ்வாறு பள்ளிவாசலுக்கென்று வங்கிக்கணக்கை நடைமுறைப்படுத்தும் போது அதனை ஊர் ஜமாஅத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டுமா? மற்றும் நீங்கள் குறிப்பிட்டது போல் வக்பு சபைக்கு மாத்திரம் அதனை தெரியப்படுத்தினால் போதுமா?

ப: இது நான் அடுத்ததாக கூறவிருந்த முக்கியமான விடயமாகும். வக்பு சட்டத்தில் 27ம் பிரிவு, 46ம் பிரிவுகளில் இதனைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு இரண்டு தடவைகள் கணக்கு விபரத்தை வக்பு சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். வருடத்தின் ஜனவரி முதல் ஜ{ன் 30ம் திகதி வரை கணக்கறிக்கை ஒன்றை பெற்று ஜ{ன் 30ம் திகதியிலிருந்து ஒரு மாதகாலத்திற்குள் அதாவது ஜ{லை 31ம் திகதிக்குள் வக்பு சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த கணக்கறிக்கை கணக்குப் பரிசோதகரால் ஊர்ஜpதம் செய்யப்பட்டதாகவும் வேண்டும். அதே போல் ஜ{லை 1ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையுள்ள காலப்பகுதிக்கான கணக்கு வரவு செலவு உள்ளடங்கியதான கணக்கறிக்கை அடுத்த வருடம் ஜனவரி 30ம் திகதிக்கு முன்பு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் வக்பு சட்டத்தின் 53வது பிரிவின் படி வக்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்களுக்கு மாறாக நடக்குமிடத்து அல்லது அதற்கு உட்படாதவிடத்து அந்த நிர்வாக உறுப்பினர்களுக்கெதிராக மாஜpஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்குவதற்கு வக்பு சபைக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு கணக்கறிக்கை அனுப்பாதவிடத்து நிர்வாகத்தின் மேல் குற்றத்தை உறுதி செய்வதற்கு வக்பு சபைக்கு ஆதாரங்கள் அவசியம் இல்லை. ஏனெனில் கணக்கறிக்கை அனுப்பாததே மிகப்பெரிய குற்றமாகும்.

இவ்வாறான கணக்கறிக்கை வக்பு சபைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாது அவ்வாறான ஒரு பிரதி பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர் ஜமாஅத்தினருக்கு பார்வைக்காக வைப்பதும் அவசியமாகும். இதனைப் பற்றி வக்பு சட்டத்தின் 27ம் பிரிவின் 1ம் உபபிரிவின் நு பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதுவும் நடைமுறையில் நடைபெறுவது இல்லை. இதற்கு கூட நாம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

அடுத்தது நான் முதலில் கூறியது போல் நோய்கள் மற்றும் கஷ்டத்திற்கு உதவி செய்வதற்காக தர்ம நிதியம் என்று ஒரு நிதியம் உள்ளது. இது வக்பு சட்டத்தின் 43ம் பிரிவுக்கமைய முற்று முழுதாக வக்பு சபையினால் உருவாக்கப்பட்டது. இதில் கூட என்ன செய்ய வேண்டுமென்றும் எவ்வாறான செலவுகள் மேற்கொள்ள வேண்டுமென்பது பற்றியும் வக்பு சட்டத்தின் 45ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதில் எத்தனையோ விடயங்களை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் உள்ள வருமானத்தின் மூலம் தமது நிர்வாகத்தை நடத்தமுடியாத பள்ளிவாசல்களுக்கு உதவி செய்வதாகும். அடுத்தது கொ^ர நோய்களுக்கான பாரிய சத்திர சிகிச்சைகளுக்காக அதாவது வைத்தியரினால் வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளை ஆராய்ந்து பள்ளிவாசல் வேண்டுதலையும் பார்த்து உதவி தேவைப்படுமெனின் உதவிகளை மேற்கொள்ளவது.

மேலும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள வறிய குடும்பங்களுக்கு ஏதாவது திருமணம் போன்ற முக்கிய தேவைகளுக்கு எமது குழுவினருடன் கலந்தாலோசித்து உதவி செய்யமுடியும்.

அடுத்த முக்கியமாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளுக்கும் இந்த நிதியத்தின் மூலம் உதவிகளை வழங்க முடியும். மேலும் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கு கூட உதவி செய்ய முடியும். இது மிக அதிகமானோருக்கு தெரியாது என்றாலும் இவ்வாறான உதவிகளை நாம் செய்து கொண்டு தான் உள்ளோம். இது தனிமனித தேவையல்ல. சமுதாயத்தின் தேவையாகவே கருதுகிறோம்.

அண்மையில் கூட இவ்வாறான பத்து பேருக்கு சத்திரசிகிச்சை செலவுகளுக்கு உதவிகளை செய்தோம்.

கே: தர்;ம நிதியம் பற்றிக்கூறினீர்கள். இது வக்பு சட்டத்திற்கு அமைய ஸ்தாபிக்கபட்டுள்ளதாகவும் கூறினீர்கள். இந்த தர்ம நிதியத்துக்கு பணம் எவ்வாறு கிடைக்கிறது என சொல்ல முடியுமா?

ப: ஆம். தர்ம நிதியத்திற்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிவாசல்கள் மூலம் தான் பணம் சேகரிக்கப்படுகிறது. ஒரு பள்ளியின் வரவிலிருந்து செலவுகள் எல்லாம் போக மீதியாகவுள்ள கையிருப்பில் (ஒரு வருடத்திற்கு ஒரு முறை) உள்ள தொகையில் நூற்றுக்கு 6 வீதமும், அதே போல் வியாபாரம் ஒன்று இருந்தால் அதன் (செலவுகள் போக) வருமானத்தில் 10 வீதமும் தர்ம நிதியத்திற்கு கொடுக்க வேண்டும். இது போக தனிப்பட்ட அன்பளிப்பாகவும், பள்ளிவாசல் மற்றும் வியாபாரம் என்பவற்றில் மேலதிகமாக அன்பளிப்புக்களையும் செய்யலாம். அந்த நிதியத்திலிருந்து என்ன செய்ய வேண்டும் என 45வது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. இது போக தர்மநிதியத்திற்கு அரச நிதி ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை.

கே: அப்படியாயின் இந்த சட்டப்படி எல்லா பள்ளிவாசல்களும் இந்த நிதியத்திற்கு பணம் அனுப்புவார்களா?

வாசகர்களே!

வக்பு சபையின் அனுமதிபெற்று செயலாற்றுவது அனைத்துக்கும் சிறந்தது எனும் தலைப்பில் இலங்கை வக்பு சபை தலைவருடனான நேர்காணலை இப் பகுதியிலே வழங்கினோம். இதில், பள்ளிவாசல் ஒன்று புதிதாக அமைப்பது அதனை கட்டாயம் பதிந்து கொள்வது பள்ளிவாசல் நிர்வாகிகளை (டிரஸ்டிமார்கள்) எவ்வாறு நியமிப்பது பள்ளியைப் பரிபாலிப்பது ஜமாஅத்தினர்களுக்கு ஏற்படும் அசாதாரணங்கள் பற்றி அவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பனபற்றி வக்பு சபைத் தலைவருடன் பேசி விளக்கங்களைப் பெற்றுத் தந்தோம். எனினும் உங்கள் பிரச்சினைகள் அக்கேள்விகளுள் அடங்காவிட்டால் அவ்வாறான பிரச்சினைகளுக்கு நீங்கள் விளக்கம், பெற விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தை வாரமஞ்சரி உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. அவ்வாறான பிரச்சினைகளை கேள்விகளை மிகவும் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் அதற்கான பதிலை வக்பு சபை தலைவரிடம் இருந்து பெற்றுத் தருவோம்.

அனுப்ப வேண்டிய முகவரி :-

ஆசிரியர், தினகரன் வாரஞ்சரி,

லேக் ஹவுஸ், கொழும்பு.

கடித உறையில் இடது பக்க மேல் ‘வக்பு சபை விவகாரம்’ என எழுதி அனுப்புங்கள்.

ப: அனுப்புகிறார்கள். ஆனால் வழமையிலில்லை. நாம் கட்டாயப்படுத்தி கேட்பதனாலேயே செலுத்துகிறார்கள். இவ்வாறில்லாது சந்தோ'மாக பணம் செலுத்தும் நிலமை உருவாகவேண்டும்.

கே: நீங்கள் இவ்வளவு நேரமாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவு செய்தல், அவர்கள் கடமைகள் மற்றும் அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை பற்றியும் கூறினீர்கள். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளாதவிடத்து ஊர் ஜமாஅத்தினரோ அல்லது ஊர் மக்களோ அதனை திருத்துவதற்காக எவ்வாறு நடந்து கொள்ள முடியும்?

ப: இது தொடர்பாக வக்பு சபைக்கு அறிவித்தால் நாம் அது சம்பந்தமாக நம்பிக்கையாளர்களை வரவழைத்து அதற்கான விசாரணைகளை மேற்கொள்வோம். சில விடயங்கள் சட்டரீதியற்ற முறையில் விசாரித்து தீர்த்து வைக்க முடியும். சில விடயங்களை வக்பு சட்டத்தின் சட்டப்படியான முறையில் வக்பு சபையினால் வழக்கு தாக்கல் செய்து விசாரிக்க வேண்டும். ஏனெனில் வக்பு சபையால் வழக்கு தாக்கல் செய்தால் மட்டுமே சில விடயங்களுக்கு வக்பு சபைக்கு விசாரணை செய்ய முடியும். இவ்வாறு வழக்கு தாக்கல் செய்து வழக்காளி குறிப்பிட்டதற்கு நம்பிக்கையாளர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் வக்பு சட்டத்தின் 29ம் பிரிவுக்கமைய அந்த நம்பிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கும் அல்லது குறித்த காலத்திற்கு பதவியை தடுக்கவும் சபைக்கு அதிகாரம் உண்டு.

அடுத்தது நான் ஏற்கனவே கூறியது போல் வக்பு சட்டத்தின் 53வது பிரிவுக்கு அமைய நம்பிக்கையாளர்கள் தமது பொறுப்புக்களை ஒழுங்காக நிறைவேற்றாதவிடத்து அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து மாஜpஸ்திரேட் நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும்.

கே: அடுத்தாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமானவாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை நடத்தி ஒரு தனிப்பட்ட நபர் அவர்களது நடவடிக்கைகளில் தவறுகளை சுட்டிக்காட்டுமிடத்து அல்லது ஒரு தனிப்பட்ட நபர் குற்றம் செய்யுமிடத்து அவரை விசாரித்து தண்டனை வழங்க நிர்வாகத்தினருக்கு அதிகாரம் இருக்கிறதா? அல்லது சட்டரீதியாக தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

ப: நாம் அவதானிக்கக்கூடிய அதிகமான நம்பிக்கையாளர்கள் செய்யும் தவறு இதுதான். நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வது வக்பு சட்டத்தின் கீழாகும். அவர்களது பொறுப்பு, கடமைகள் அனைத்துமே வக்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் என்ன விடயங்களை மேற்கொள்வதாயிருப்பினும் வக்பு சட்டத்திற்கு அடிபணிந்தே நடக்க வேண்டும். வக்பு சட்டத்தை மீறி நடக்கமுடியாது.

நம்பிக்கையாளர்கள் சில தனிநபர்களை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி தண்டனை வழங்குதல், தண்டப்பணம் அறவிடல், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், அந்நபர்களின் வீட்டு விN'சங்களில் பங்கு கொள்ளக்கூடாது என நிபந்தனை விதித்தல் போன்ற பலவாறான விடயங்களை நாம் தற்போது நிறைய காண்கின்றோம். இது 100மூ சட்டத்திற்கு மாறான செயற்பாடாகும்.

ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக: கிராம செயலாளர், மாஜpஸ்திரேட், பொலிஸ் நீதிமன்றம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களை செய்வதே ஒழிய நம்பிக்கையாளர்களோ அல்லது வேறு பொறுப்பாளிகளோ இன்னொருவருடைய பொறுப்புக்களை நிறைவேற்றமுடியாது.

அவ்வாறு ஏதும் பிரச்சினைகள் ஏற்படும் போது அந்த குறிப்பிட்ட நபர் வக்பு சபைக்கு அறிவித்தால் நாம் வக்பு சட்டத்தில் 27ம் பிரிவுக்கமைய நம்பிக்கையாளரை பதவி விலக்குவதோ அல்லது 53ம் பிரிவுக்கமைய வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கவும் முடியும். உதாரணமாக ஒரு நபர் வேறு ஒரு சமயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்தாராயின் அவரை விசாரணை செய்யவோ தண்டனை வழங்கவோ நம்பிக்கையாளர்களுக்கு முடியாது. அந்த மாதிரியான பிரச்சினைகளை காதி நீதவானாலோ அல்லது வேறு ஏதாவது அரச நிறுவனங்களினாலோ மட்டுமே தீர்த்துவைக்க முடியும். நம்பிக்கையாளர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

கே: அந்த ஊரின் ஒற்றுமையை கருதியும் கூட அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ள முடியாதா?

ப: ஒற்றுமை கருதி செய்யலாம். ஆனால் நம்பிக்கையாளர்கள் என்ற வகையில் செய்ய முடியாது. முழு ஊரும் சேர்ந்து நிறைவேற்றலாம் அல்லது தனிநபர் என்ற ரீதியில் கூட நிறைவேற்ற முடியும். நம்பிக்கையாளர் என்ற வகையில் செய்ய முடியாது. ஏனெனில் நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வது வக்பு சட்டத்தின் கீழ்தான். வக்பு சட்டத்தில் அவ்வாறான சட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. அப்படி அவர்கள் அவ்வாறு தண்டனைகளை நிறைவேற்றுமிடத்து வக்பு சபையால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் இவ்வாறான விடயங்கள் அதிகமான இடங்களில் நடைபெறுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.