புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 


கொழும்பு, மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தேர்த்திருவிழா நேற்று இடம்பெற்றது. பஞ்சரத பவனி காலி வீதி வழியாக உலா வருகையில் எடுத்த படம். (படம் : ஏ. கே. விஜயபாலன்)

சொந்தத் தேவைகளுக்கு அரசின் பின் கதவை தட்டும் TNA தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளையும் இவ்வாறே தீர்க்கலாமே

- டக்ளஸ்

சொந்த சலுகைகளை பெறுவதற்காக அரசின் பின் கதவு தட்டி, இணக்கமாகப் பேசி வெற்றிபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களின் பிரச்சினைகளையும் அதே வழிமுறையில் பெறுவதற்கு ஏன் முன்வருவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்றும், வெறுமனே அரசியல் கோசம் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் கோசம் எழுப்பி விட்டு, தேர்தல் முடிந்தவுடன் காற்றோடு பறந்து போகும் தேர்தல் கால வாக்குறுதியும் அல்ல.

                                                           விவரம் »

தொடர்ந்தும் மார்க்கக் கடமைகளை புரிய அனுமதி;

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு:

மத விவகார அமைச்சின் அனுமதிக் கடிதம் நிர்வாகத்திடம் கையளிப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண ஷைத்திய வீதி 158 ஆம் இலக்கத்தில் பள்ளிவாசல் அமைப்பதற்கான ஒப்புதலை புத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு கடிதம் மூலமாக அறிவித்துள்ளது.ஆனால் இதே வீதியில் 166 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள காணித்துண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டதென்றும்.....

                                                           விவரம் »

வடக்கில் அரசாங்கத்தின் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மூடி மறைத்து கபட நாடகம்:

புலம்பெயர் தமிழரிடம் பாரிய நிதி சேகரிப்பு மோசடி முயற்சியில் வுNயு

* பெறும் நிதியில் ஒரு சதமாவது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டதா? கடந்த வருடம் இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?

* கனடாவிற்கான சம்பந்தன், சுமந்திரன் விஜயம் குறித்து சக எம்.பி. மாரும், மக்களும் கடும் அதிருப்தி

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறித்து வடபகுதி மக்களும், தமிழ்க் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

                                                           விவரம் »

தமிழ் விவகாரம், தமிழ் ஊடகங்கள்;

ஜனாதிபதியின் இணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜ

தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர். சிவராஜா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக 1996 ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா,

                                                           விவரம் »

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுவே எமது கோட்பாடு;

தெரிவுக் குழுவில் பங்கேற்க பின்னிற்பவர்கள் மாகாண சபையில் தீர்வு காணப்போகிறார்களாம்!

TNAி யின் பொய்ப் பிரசாரங்களை மக்கள் நம்பிவிடக் கூடாதென்கிறார் ரிஜிளிஜி தவராசா

வட மாகாண சபைத் தேர்தல் என்பது, அரசியல் சட்டத்தில் இருப்பதற்கு அமைய குறித்த மாகாணத்திற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான ஒரு தேர்தல். இது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கோ, சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்கோ உரிய தேர்தல் அல்ல.

                                                           விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.