புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
எழுதிய பொது அறிவு தகவல் களஞ்சியம்

பெண் எழுத்தாளர் ஸக்கியா சித்தீக் பரீத்

எழுதிய பொது அறிவு தகவல் களஞ்சியம்

முஸ்லிம் சமூகத்தில் அண்மைக்காலத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கையில் ஒரு வளர்ச்சிப் போக்கை காணமுடிகிறது. அவர்கள் நூல்களை ஆக்குகின்றனர். நூல் வெளியீடுகளை நடத்துகின்றனர்.

இலக்கிய உலகைப் பொறுத்தவரை இது ஓர் ஆரோக்கியமான ஏற்பாடே! மூத்த ஆசிரி¨யான “கலாபூஷணம்” ஸக்கியா ஸித்தீக் பரீத் அண்மையில் தமது ஐந்தாவது நூலையும் வெளியிட்டுள்ளார்.

ஆரவாரம் இன்றி அமைதியாக ஆக்கப்பணிபுரியும் இவர் ‘பொது அறிவு தகவல் களஞ்சியம்’ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு பெரும், கடும் முயற்சியாகும். தகவல்களைத் தேடிப் பெற்று நூலாக்கிப் படைத்துள்ள இவரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.

“நால்லாசிரியை விருது” வழங்கிக் கெளரவிக்கப்பட்ட இவர் மேலும் பல நூல்களை வெளியிட வேண்டுமென்பதே நமது ஆசையும், அவாவும் ஆகும்.

நூலாக்கம் என்பது இலகுவான பணி அல்ல. இதில் உள்ள எண்ணற்ற சிரமங்களை உணர்ந்து அவரை நாம் ஆதரிப்பதும் அவசியமே!

மூத்த கல்விமானும் முன்னாள் முஸ்லிம் மதகலாசார ராஜாங்க அமைச்சின் செயலாளருமான எஸ். எச். எம். ஜெமீல் நூலுக்கு ஆசியுரை, வழங்கியுள்ளார்.

இந்த நூல் மாணவர்களுக்கு பொது அறிவுப் பரீட்சைக்கு பயன்படக்கூடியது. அனைவரும் வாசித்துப் பயன் பெறக்கூடிய தகவல்களைக் கொண்டது என அவர் கூறியிருக்கிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.