புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
உடல் உபாதைகளுக்கு கை வைத்தியம்

உடல் உபாதைகளுக்கு கை வைத்தியம்

மூலநோய்

அருகம்புல்லைத் தளிராகப் பிடுங்கி அரைத்து பசும்பாலில் கலக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஐந்து நாட்களில் எவ்வளவு கடுமையான மூல நோயானாலும் குணமாகிவிடும்.

நல்லெண்ணெய், புளி, மிளகாய், புகையிலை ஆகியவற்றின் பாவனையைத் தவிர்க்க வேண்டும்.

தூக்கமின்மை

இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்னாரி சர்பத்தை ஒரு டம்பளர் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வர தூக்கமின்மை நீங்கும்.

தலைமுடிப் பிரச்சினைகள்

தலையில் பொடுகு உண்டாகித் தொல்லை கொடுத்தால், வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துத் தலையில் தேய்த்து நன்றாக அலசித் தோய்ந்தால் பொடுகு மறைந்துவிடும்.

ஒரு கைப்பிடியளவு துளசி இலையை நன்றாக அரைத்து தலையில் தடவிக் கொண்டு அரைமணி நேரம் கழித்து ‘ஷாம்பு’ போட்டுக் குளித்தால் பேன் தொல்லை நீங்கி விடும்.

செம்பருத்திப் பூவை சருகுபோல் நன்றாக காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்குப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

ஆப்பிள் பழத்தினால் குணமாகும் நோய்கள்

தினமும் ஆப்பிள் பழத்தை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும் ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வடிதல் போன்றவற்றைத் தடுக்கலாம்.

பித்தம், வியர்வை, இளநரை

விளாம்பழத்தில் வைம்டமின் “ஏ” உயிர்ச்சத்தும், இரும்புச் சத்தும் இருக்கின்றன. பித்தம், பித்தத்தால் ஏற்படும் வியர்வை, இளநரை, வாயில் கசப்பு, கண்பார்வை மங்கல், வாந்தி நாவில் ருசி அற்ற நிலை ஆகிய நோய்களை விளாம்பழம் குணப்படுத்தும். 21 நாட்கள் வெல்லத்துடன் சாப்பிட வேண்டும்.

உடல் சூடு, சர்க்கரை வியாதி

உடல் சூடு, வயிற்றுப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்தும். சர்க்கரை நோய் பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் வெந்தயத்திற்கு இருக்கிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.