புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
தேசிய ஐக்கியத்திற்கும், அபிவிருத்திக்கும் குத்துள்ள இராணுவத்தின் அர்ப்பணிப்பு

தேசிய ஐக்கியத்திற்கும், அபிவிருத்திக்கும் குத்துள்ள இராணுவத்தின் அர்ப்பணிப்பு

வடக்கில் மனிதாபிமான பணிகளில் படையினர் மும்மரம்

இலங்கையின் இருபதாவது படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளவர்தான் லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க. இராணுவ ஊடக பேச்சாளராகவும் பணிப்பா ளராகவும் பங்களிப்பை யாற்றி இருந்த இவர் இன்று அதி உயர் இராணுவ பதவியான தளபதி அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

புனர்வாழ்வுத் திட்ட சிரேஷ்ட ஆணையா ளராகவும் பணியாற்றியிருந்த இவரின் அனுபவம் பன்முகப்பட்டதாகும். நாட்டின் அபிவிருத்தியில் இராணுவத்தை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பதில் இவர் மும்முரமாக செயற்படுகின்றார்.

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அந்நாட்டு இராணுவத்தினர் எவ்வாறெல்லாம் பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக கண்டறிந்துள்ளேன்.

இவ்வகையில் நாமும் நமது நாட்டிற்காகவும் அதன் அபிவிருத்திக்காகவும் நமது இராணுவத்தையும் ஏன் பயன்படுத்தக் கூடாது. பன்முக ஆற்றல்கொண்ட இராணுவ சிப்பாய்கள் நம் அணியில் இருக்கின்றார்கள். நாட்டிற்கு தேவையானவற்றை தேவைப்படும்போது அர்ப்பணிப்போடு செய்வது நடது தலையாய கடமையாகும்.

தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. உள்நாட்டு யுத்தத்தின்போது நாட்டின் இறைமையைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த காலத்திலும் கூட அவ்வப்போது, பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தி வேலைகளில் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருந்தோம். இன்று போர் ஓய்ந்து சமாதானம் நிலவும் இக்காலகட்டத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் முழுநேரக் கவனத்தைச் செலுத்துகின்றோம்.

பொறியியல் துறையில் ஈடுபடக்கூடிய படை அணிகளையும் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றக்கூடிய அணிகளையும் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு இன்றைய அபிவி ருத்தி யுகத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அர்த்த புஷ்டியான படைய ணிகளை உருவாக்கி வருகின்றோம்.

அவசியப்படும் வேலைத்திட்டங் களுக்கு ஆக்கபூர் வமான படைய ணிகளைப் பாவித்து போதியளவு திருப்தி தரக்கூடிய வகையில் அவ்வேலைகளை முடித்துக் கொடுக்கின்றோம். வேலைத்திட் டங்களை எங்களுக்கு ஒப்படைக்கும் போது, அதற்கான அனுபவம், அறிவு, திறமை கொண்டவர்களைக் கொண்டு அவ்வேலையைச் செய்கின்றோம்.

ஆகவே பொறியியல் மற்றும் கட்டட நிர்மாண வேலைகள் அனைத்திலும் காணப்படும் நேர்த்தி அவர்களுக்கு அத்துறைகளில் உள்ள நிபுணத்துவத்தைப் பறைச்சாற்றுகின்றது. ஒவ்வொரு நகரிலும் அல்லது ஒவ்வொரு கிராமத்திலும் வாழும் மக்களுக்காக கோவில், பள்ளிவாசல், தேவாலயம் என்று நிர்மாணித்துக் கொடுத்துள்ள எமது படையினர் வீடு வாசலின்றி தத்தளித்த அகதிகளுக்கு மீள குடியமர வீடுகளையும் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். நாட்டு மக்களுக்கு இன, மத பேதமின்றி சேவையாற்ற வேண்டுமென்ற நல்ல சிந்தனையுடனேயே எப்போதும் படையினர் சேவையாற்றி வருகின்றனர்.

நான் கடந்த 33 ஆண்டுகளாக இராணு வத்தில் சேவையாற்றி வருகின்றேன். தற்போது இராணுவ வீரர்களுக்காக வழங் கப்படும் நலன்புரி சேவைகளும், மேம்பாட்டு நடவடிக் கைகளும் முன்னெப் போதும் கண்டிராத வகையில் இடம்பெற்று வருகின்றன.

அதி மேதகு ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும் இராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கி கெளரவப்படுத்தி வருகின்றார்கள். இராணுவ வீரர்க ளுக்கான ஓய்வூதியம், வீடமைப்பு வசதி யென்று வரையறுக்கப் படாமல் அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாரிசுக ளுக்கான கல்வி, இலகு கடன், பெற்றோர்களுக்கான வயோதிபகால உதவியென்று வசதி வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளார்கள்.

போரில் ஈடுபட்ட வீரர்களினது குடும்பங்களுக்கும் ஓய்வு பெற்றுச் செல்லும் வீரர்களினது நலனோம்புகைக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல் செய்யப்படுகிறது. தேசிய இராணுவ வீரர்களது நலன்புரிக்காக மேலும் மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

நாட்டு மக்களின் தேவையையும் இறைமையையும் பாதுகாப்பதே இராணுவத்தின் முதன்மையான நோக்கம். ஆகவே நாட்டு மக்களுக்கு எங்களின் சேவை தேவைப்படும் போதெல்லாம் எங்களை அர்ப்பணித்து சேவையாற்ற தயாராகவிருக்கின்றோம். இன்று நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து இரா ணுவ முகாம்களிலும் உள்ள இராணுவ வீரர்கள் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே இருக்கின்றார்கள்.

வடக்கில் போர் புரிந்த இராணுவ வீரர் களை மீளப் பெற்றுவிட்டோம். வழமை யான முகாம்களில் பணியாற்றும் இரா ணுவ வீரர்களே அங்கே கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் எமது இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

நிலக்கண்ணி களை அகற்றுவதென்றால் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாவது எடுக்கும் என்று சர்வதேச அமைப்புகள் கூறியிருந்தன. ஆனால் எமது இராணுவ வீரர்கள் அர்ப் பணிப்போடு மேற்கொண்ட பணிகளால் மிகக் குறுகிய காலத்துக்குள் நிலக் கண்ணிகள் அகற்றப்பட்டு இடம்பெயர்ந் தவர்களை அங்கே மீள் குடியமர்த்தப் பட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில் இரா ணுவ வீரர்கள் ஆற்றும் பணி தேசிய ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்கும் வழி வகுத்து வருகின்றது என்றார்.

வீர விக்கிரம விபூஷணய, ரண விக்ரம பதக்கம், ரண சூரய பதக்கம் (நான்கு தடவை), உத்தம சேவய பதக்கம் (நான்கு தடவை) தேச புத்ர பதக்கம் என்று கெளரவப் பட்டங்களை தனது அர்ப்பணிப் பான சேவையின் மூலம் பெற்றுக் கொண்ட லெப்டினன்ட ஜெனரல் தயா ரட்ணாயக்க குருநாகல் மலியதேவ கல் லூரியின் பழைய மாணவராவார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.