புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
நாட்டுக்கூத்து கலைஞர் குழந்தை செபமாலைக்கு ' நாடகக்கீர்த்தி' விருது

நாட்டுக்கூத்து கலைஞர் குழந்தை செபமாலைக்கு ' நாடகக்கீர்த்தி' விருது

'நல்ல நல்ல தொழில் செய்திடுவோம் - நாங்கள்
நாணயமாகவேவாழ்ந்திடுவோம் இந்த
நாட்டினையே சீர்திருத்தி
நற்பணிகள் ஆற்றிடுவோம்.
வாழ்வு மலருதேவாரீர் தாழ்வுஅகலுதேபாரீர்'

என்ற கவி வரிக்கு சொந்தக்காரர் எங்கள் நாட்டுக்கூத்து கலைஞர் குழந்தை செபமாலை.

மன்னார், மாதோட்ட பிரதேசத்தை வாழ்விடமாக கொண்ட நாட்டுக் கூத்து கலைஞர் ~கலைத்தவசி' குழந்தை செபமாலைக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு இம்முறை தேசிய அரச நாடக விழாவில் ~நாடகக்கீர்த்தி' விருது வழங்கி கௌரவம் செய்தது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ஞர்பகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற அரச நாடக விழாவில் வைத்து நாட்டுக்கூத்து கலைஞர் குழந்தை செபமாலை அவர்களுக்கு ~நாடகக்கீர்த்தி' எனும் சிறப்பு விருதினை வழங்கி வைத்தார்.

கலைஞர் குழந்தை செபமாலை வெறுமனே நாட்டுக்கூத்து கலைஞர் மட்டுமல்ல ஒருதலைச் சிறந்த பலதுறை விற்பனர். ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர், நெறியாளர், பாடகர், இசையமைப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்று பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்ட கலைத்தாயின் தவப்புதல்வன் மாதோட்டம் பெற்றெடுத்த முருங்கன் ~குழந்தை மாஸ்டர்' என்று அழைக்கப்படும் குழந்தை அவர்கள்.

இவருக்கு முன் மூன்று சகோதரர்கள் இறையடி சேர்ந்ததனால் மருதமடு அன்னையிடம் நேர்ந்து பெற்றெடுத்த தவப்புதல்வன் என்றபடியால் தான் அந்த மருதமடு அன்னை அத்தனை வரங்களையும் அவருக்கு கொடுத்தாரோ என்னவோ என பெற்றோர் பெருமிதப் பட்டுக்கொண்ட துண்டு. தந்;தையார் பெரியவசதிகள் இல்லாத பின்புலத்தில் இவரைப் படிக்க வைத்து ஆளாக்கிய பெருந்தகையாவார்.

ஆசிரியராக அல்லைப்பிட்டியில்; தன் ஆசிரியப் பணியை ஆரம்பித்தவர் தன் கூத்துக் கலையில் வளர்ச்சி பெற்றது போல் உப அதிபராக, அதிபராக பதவி யிலும் உயர்ந்து கல்வித் துறைக்கும் பணியாற்றி பல நல்ல மாணவர்களை உருவாக்கி ஓய்வுபெற்ற பெருந்தகையாவார்.

ஏறக்குறைய 60 ஆண்டு களுக்கு மேலாக, கலைத் துறையில் கணக்கற்றோரை மூழ்கவைத்து மன்னார் பிரதேசத்தில் கலை ஊற்று பிரவாகித்து ஓட ஆதார சுருதியாக இருந்தவர் கலைஞர் குழந்தை என்றால் அது மிகையா காது. அவரது வழிகாட்டலில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் கலை முத்திரை பதித்து அவர்கள் தாம் வாழும் மண்ணுக்கு பெருமை சேர்க்க சிற்பியாகத் திகழ்கின்றார்.

அவரின் இல்லத்தில் புத்தக அலுமாரி அவரது விலைமதிக்க முடியாத அரும் பெரும் சொத்து. காளமேகம் முதல் கல்கி, கண்ணதாசன், வான்மீகி, வ.வே.சு. ஐயர், வரதராஜன், பாரதி யாவரும் குடியிருக்கும் கோயிலாக அது இருந்தது. வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் வாழ்க்கையை நேசிப்பதற்கும் நூல்கள் வழிகோலின என்று பெருமிதமாக கூறுவார்.

சிறுத்தொண்டன் பத்திரி கையில் ~வெள்ளிச் செபமாலை' எனும் இவரது சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்றிருந்தது. ஆசிரிய கல்விக் கல்லூரிச் சஞ்சிகையான ~கலைச்சுடர்' இல் இவரது ஆக்கங்கள் பல வெளியாகியிருந்தன. கொழும்புத்துறை, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபராயிருந்த முன்னாள் ஆயர் மேதகு தீயோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் இவற்றிற்கு அடிகோலி நின்றன

குழந்தை மாஸ்டரின் ஆரம்ப எழுத்தோவியம் நல்வாழ்வு என்ற நாடகம் தான். 30-40 பாத்திரங்கள் பங்கேற்று சிறப்பித்த நாடகம் அது. புனிதயாகப்பரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு வார்க்கப்பட்ட இப்படைப்பு, பலரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது.

அவரது விசுவாசம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. எனவே படைப்புகளில் மறையானது மையம் கொண்டிருந்தது. நம்பிக்கை இழையோடியது. இங்கு சந்தித்த சவால்களையும் மேவிச் சென்று சாதனையாளராகி விடுகின்றார்.

பரதேசிமகன், ஞானசௌந்தரி, புனித லூசியா, புனித லோறன்ஸ் முனிந்திரன், வாழ்வு தந்த யோசவ்வாஸ், நல்ல சமாரியன உலகின் ஒளி, அன்று சிந்திய வித்துக்கள் வாழ்வு அளித்த வள்ளல,; உலகை மீட்ட உத்தமன், வீரனை வென்றதீரன், மானுடத்தை நேசித்தமகன் (ரொமைரோ) ஆகிய படைப்புகள்; எழுத்தில், இசையில், மேடைகளில், இறை விழுமியங்களைப் பறைசாற்றி நின்றன.

நாட்டுக்கூத்து மரபில் இருபத்தேழு நாடகங்களையும், ஏனைய நாடக வடிவங்களில் நாற்பத்தி மூன்றினையும் எழுதியதின் மூலம் எழுபதுகலைப்படைப்புக்களின் ; தாயுமானவர். கூத்துப் பாரம்பரிய மிக்க குடும்பப் பின்புலம் தான் இவரை நாட்டுக்கூத்து மரபில் அண்ணாவியாராகஅரசோச்ச செய்தது என்றால் அதுமிகையாகாது.

அவரது கலைநாட்டம் கடல் போன்றது. எல்லையே இல்லாதது. அதன் வெளிப்பாடாக உருப் பெற்றதுதான் 'முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்'. அப்பா செபஸ்தியான் ஒரு அண்ணாவியார். பக்க வாத்தியம் வாசிப்பதில் கை தேர்ந்தவர். மூத்த சகோதரன் சீமான் வெண்கலக் குரல் கொண்ட வியத்தகு பாடகர். அடுத்தசகோதரன் சந்தியோகு (ரத்தினம்) துடிப்பான நடிகர். வில்லன் பகுதிகளை விறுவிறுப்பாக நடித்தவர். அந்தோனிப்பிள்ளை மற்றுமோர் விசைமிகு நடிகர். அரசவேடங்களில் அரிய தடங்களைப் பதித்த வர். மாசில்லாமணி தலை சிறந்த பாடகனாக, குண சித்திர நடிகராக, கலைஞர் குழந்தை செபமாலையின் கரமாக இயங்கிவந்து, மற்றுமோர் கலாபு+சணமாக இன்றுமிளிர் கின்றவர். யேசுதாசன் தந்தையாரின் வழிவந்து, பக்கவாத்தியத்தினை ஒரேநேரத்தில் பல இசைக் கருவிகளை இசைத்து, ஆற்றுகைகளை அசத்தியவர். வேதநாய கம் ஓவியக்கலையில் வல்லவர். நாடக ஒப்பனை களுக்கு மெருகூட்டியவர்.

இவரின் நாட்டுக்கூத்து பணிக்காக கலாசாரஅமைச்சு கலாபு+சணம் விருது, வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது, பரிசு பெற்ற நாடகங்கள் எனும் நூலுக்கு சாகித்திய விருது, கிழக்குபல்கலைக ;கழகத்தின் 'தலைக்கோல்' விருது, என்பவை குழந்தை செபமாலை என்ற மாபெ ரும் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

அறுபது ஆண்டுகளாக நாடகத்தையும்-நாட்டுக்கூத்தையும் சுவாசமாக கொண்ட 'கலைத்தவசி' குழந்தை செபமாலை அவர்களுக்கு இலங்கை கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சும், கலாசார அலுவல்கள் திணைக்கள மும், இலங்கை கலைக ;கழகத்தின் அரச நாடகக் குழுவும் இணைந்து ஆளுமைமிக்க தேசிய கலைஞர்களின் அங்கீகாரத்துடன் ~நாடகக் கீர்த்தி' எனும் முதுகலை ஞர் தேசிய விருதினை வழங்கி கௌரவம் செய்தது.

ஒரு மனிதனின் உயர்வுக்குப் பின்னால் ஒருபெண் இருப்பார் என்ற கூற்று அவரின் துணைவி றோஸ்மேரிக்குப் பொருத்தமானது. கலைஞர் குழந்தை மாஸ்டரின் வாழ்க்கையோட்டத்தின் உந்துசக்தியாக உடன் துணையாக சீர் சேர்த்தவர். தேவையேற்பட்ட போது மேடையேறியும் நடித்தும் சாதனை செய்தவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.