புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

இவ்வார பலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
 

31.03.2013 முதல் 06.04.2013 வரை

விசேடம்
01.04.2013 திங்கட்கிழமை 3ஆம் பங்குனி விரதம்
06.04.2013 சனி கிழமை ஏகாதசி விரதம்


கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம் (நட்பு)
சூரியன் மீனம் (நட்பு)
சனி துலாம் (உச்சம்)
புதன் கும்பம் (நட்பு), மீனம் (நீசம்)
சுக்கிரன் மீனம் (உச்சம்)
செவ்வாய் மீனம் (பகை)
சந்திரன் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்


மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் பெருமளவு செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். பித்த கோளாறும் ஏற்படலாம். ஆடைகள், ஆபரணங்கள், கைசெலவுக்கு பணமும் வந்து சேரும். மேலும் இவ்வாரம் எல்லா விடயங்களிலும் கச்சிதமாக இருந்து கொள்ளுங்கள்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்களுக்கு பொதுவாக பட்டு வெண்நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் சொத்துக்கள் வந்து சேரும். நோய் குணமாகும், செய்கின்ற தொழிலால் நல்ல வருமானம் ஏற்படும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். பிறருக்கு தானம் வழங்குவதற்கு விருப்பம் ஏற்படும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாக பச்சை நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் நீங்கள் பலவிதத்திலும் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் வெற்றியளிக்கும். அத்துடன் திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். தோல் சம்பந்தமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டி வரும். பெண்களால் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
 


கடகம்
 

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக்காரர்களுக்கு பொதுவாக மஞ்சள் கலந்த வெண் நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். தாழ்மையான உணர்வு மனதில் தோன்றலாம். செலவோ கட்டுக்கடங்காமல் இருக்கும். பெண்வழி ஆறுதல் கிடைக்கும். தேவைக்கு பணம் சேரும்.  
 


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் அரச பதவியில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். உடலில் களைப்பு தன்மை ஏற்படும். பயணங்களில் அவதானத்துடன் நடந்துகொள்ளுங்கள். ஆடம்பரத்தில் நாட்டம் ஏற்படும். பெண் நண்பர்கள் உதவுவார்கள்.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு பொதுவாக பச்சை நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் வீணான தாழ்மையான உணர்வு மனதில் ஏற்படும். அலைச்சலுக்கு இடம் உண்டு. வயிற்று கோளாறு ஏற்படலாம். வீட்டில் மனைவியுடன் குழப்பம் ஏற்படலாம். எதிரிகளாலும் தொந்தரவு உண்டு. உடல் களைப்படையலாம். பெண் நண்பர்களால் கரைச்சல் ஏற்படும்.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பொதுவாக பட்டுவெண்ணிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் புதிய சொத்துக்கள் வாங்க நேரிடலாம். செய்கின்ற தொழிலால் நல்ல பணவருவாய் ஏற்படலாம். எதிரிகள் தொலைந்து விடுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தங்கம் செம்பு இவற்றுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு இலாபம் உண்டு. சில இடைஞ்சல்களும் ஏற்படலாம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் உடல் நலம் பாதிக்கப்படலாம். எதிரிகளால் தொந்தரவு ஏற்படலாம். பிள்ளைகளின் யோசனை மனதை தாக்கலாம். ஆபத்துக்கு நண்பர்கள் கைகொடுப்பார்கள். பெரியோர்களின் தரிசனம் கிடைக்கலாம்.
 


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு பொதுவாக மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். பெண் நண்பர்களுடன் பகைமை ஏற்படலாம். உடல் நலமும் பாதிக்கப்படலாம். வயிற்றில் கோளாறு ஏற்படலாம்.
போக்குவரத்தில் அவதானம் தேவை. தேவையில்லாத அறிமுகம் ஏற்படலாம். இனசன உறவினர் கைகொடுப்பார்கள்.
 


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு பொதுவாக கருநீல நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் புதிய பதவி கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். பொருள் லாபம் ஏற்படும். எதிரிகள் அடிபணிவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட மழை ஏற்படலாம். குழந்தை பாக்கியம் ஏற்படலாம். புதிய சொத்துக்கள் சேரலாம்.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பொதுவாக கருநீல நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் கட்டுக்கடங்காத செலவுகள் இருக்கும். கண்சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரும். நெருப்பு தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாவற்றிலும் முன் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச உதவி கிடைக்கலாம்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு பொதுவாக மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். இவ்வாரம் அலைச்சல் ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படலாம்.
வீண்பெயர் கேட்க சந்தர்ப்பம் உண்டு. எதிரிகளின் தொந்தரவு உண்டு காரியங்களுக்கு தடை ஏற்படலாம். பெண் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.