புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

சென்.பீற்றர்ஸ் கல்லூரியின் ரக்பி அணிக்கு இரண்டாவது தடவையாக அனுசரணை வழங்கும் எயார்டெல்

சென்.பீற்றர்ஸ் கல்லூரியின் ரக்பி அணிக்கு இரண்டாவது தடவையாக அனுசரணை வழங்கும் எயார்டெல்

ணிசியாவிலும், ஆபிரிக்காவிலும் 20 நாடுகளில் இயங்கும் முன்னணி தொலைத் தொடர்பாடல் நிறுவனமான பார்த்தி எயார்டெல், ரக்பி பருவ காலத்தில் சென். பீற்றர்ஸ் கல்லூரியின் ரக்பி அணிக்கு முதன்மை அனுசரணையாளராக செயற்படுவது தொடர்பான பங்காளித்துவத்தை 2013 ஆம் ஆண்டிற்காக புதுப்பிப்பதை அறிவித்துள்ளது. முதலில் 2012 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இரண்டாண்டு கால மூலோபாய பங்காளித்துவம் இரண்டாவது தடவையாக புதுப்பிக்கப்பட்டது.

இலங்கையில் போட்டிகள் என்ற மட்டத்தில் ரக்பி விளையாடிய பாடசாலைகளில் சென். பீற்றர்ஸ் கல்லூரி நான்காவது இடத்தில் உள்ளது. 1934 இல் ஷேர்லி இலேசிங்க சென். பீற்றர்ஸ் கல்லூரிக்கு முதலாவது வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ரோயல் கல்லூரிக்கு எதிராக களமிறங்கிய பீற்றர்ஸ் அணி 5 – 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

2013 இல் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. சமகாலத்தில் சென். பீற்றர்ஸ் கல்லூரி ‘ஏ’ குழு, டிவிஷன் 1 இல் இடம்பிடித்துள்ளதுடன், இவ்வாண்டிற்குரிய பருவகாலத்தில் சிறப்பான பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சென். பீற்றர்ஸ் கல்லூரி கடைசியாக 2010 இல் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், 2012இல் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

அனுசரணை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது பற்றி பார்த்தி எயார்டெல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுரேன் குணவர்த்தன கருத்து வெளியிடுகையில், ‘இலங்கையின் இளைய தலைமுறை ஆர்வத்துடன் விளையாடும் ரக்பி போன்றதொரு விளையாட்டிற்கு அனுசரணை வழங்குவதன் மூலம், வர்த்தக சின்னத்தின் ஊடாக துடிப்பான சக்திக்கு வலுவூட்ட பார்த்தி எயார்டெல் பாடுபடுகிறது. இதன் மூலம் இலங்கையின் விளையாட்டுத் துறைக்கு ஆதரவளிக்கும் முன்னணி நிறுவனமாக எம்மை நிலைப்படுத்தியுள்ளோம். சென். பீற்றர்ஸ் கல்லூரி அணியில் பெருமளவு ஆற்றலும், வலுவும் உள்ளதை நாம் காண்கிறோம். இதன் காரணமாகவே, இரண்டாவது தடவையாகவும் சென். பீற்றர்ஸ் அணிக்கு அனுசரணை வழங்கி, அடுத்த பருவகாலத்திலும் சாதனை படைக்க வேண்டுமென வாழ்த்துகிறோம் என்றார்.

சென். பீற்றர்ஸ் கல்லூரியின் அதிபர் வண. பிதா ட்ரேவிஸ் கெப்ரியல் அடிகளார் கருத்து வெளியிடுகையில், ‘இத்தகைய அனுசரணை வசதிகளைப் பெறக்கூடிய ஒரு சில பாடசாலைகளில் சென். பீற்றர்ஸ் கல்லூரியும் ஒன்று என்பதால், இதற்காக எயார்டெல் நிறுவனத்திற்கு பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்’ என்றார். ‘இந்தக் கல்லூரியில் கடந்த பருவ காலத்தில் ரக்பி விளையாட்டு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாண்டிலும் ரக்பி பருவகாலத்தை வெற்றி நிறைந்ததாக மாற்ற பாடுபடுகிறோம். தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காகவும் ஊக்கத்திற்காகவும் எயார்டெல் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதுடன், அவர்கள் கல்லூரியின் ரக்பி விளையாட்டுடன் இணைந்திருந்து, சென். பீற்றர்ஸ் கல்லூரி புதிய சிகரங்களைத் தொட எமக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். எயார்டெல் லங்கா நிறுவனம் 2012 இல் மெஞ்சஸ்டர் யுனைட்டட், கால்பந்தாட்டம், ரக்பி, ரெனிஸ், கொல்ஃப், படகோட்டம், கூடைப்பந்தாட்டம் போன்றவற்றுடன் இணைந்து விளையாட்டுத் துறை அனுசரணையில் கால்பதித்தது. இந்தக் கம்பனி விளையாட்டுத் துறை அபிவிருத்தியில் இணைந்துள்ளது.

பாடசாலை, மாவட்ட, தேசிய மட்டங்களில் நிறுவனம் வழங்கும் அனுசரணையின் ஊடாக அது பிரதிபலிக்கிறது.

எயார்டெல் லங்கா நிறுவனம் விளையாட்டுத்துறை அனுசரணை பங்காளர்களுக்கான வெறும் முதலீட்டுடன் மாத்திரம் நின்றுவிடாமல், உள்ளூர் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை சர்வதேச தரத்திற்கு வளர்த்து, அதன் மூலம் விளையாட்டுத் துறை சிகரம் தொட வைப்பது மாத்திரமன்றி இலங்கையில் இளைய தலைமுறைக்கான விளையாட்டின் ஆக்கபூர்வமான அபிவிருத்திக்காக செயலூக்கத்துடன் பாடுபடுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.