புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

ஜெயலலிதாவுக்கு கிரிக்கட் பற்றிபேசுவதற்கு அருகதையில்லை

ஜெயலலிதாவுக்கு கிரிக்கட் பற்றிபேசுவதற்கு அருகதையில்லை

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று இந்திய அரசியலில் ஒரு கேள்விக் குறியாக மாறியிருக்கிறார். இலங்கை வீரர் களை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா விதித்திருக்கும் தடை, உலக கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அரசியல் கூத்தாடி என்று கிண்டல் செய்யும் அளவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா கிரிக்கெட்டுடன் நின்றுவிடாமல் இலங்கையின் இறைமையை அவமதிக்கக்கூடிய வகையில் சுயபுத்தியுடன் சிந்திக்காமல் தனது அதிகார வரம்பை மீறி, ‘‘இலங்கை ஒரு நட்பு நாடு என்று கூறுவதை இந்திய அரசாங்கம் உடன டியாக நிறுத்த வேண்டும், யுத்தக்குற்றம் புரிந்த வர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும், அடக்கு முறையை நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்” என்று இந்திய மத்திய அரசாங் கத்திற்கு உத்தரவிடும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அதிகார மோகம் தலைக்கேறியிருப்பதை இந்தியர் களும், நம்நாட்டவர்களும் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் போக்கு அவரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது என்று இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி அவர்கள் ஆரூடம் கூறியுள்ளார். ஜெயலலிதா இந்தியாவின் அரசியல் சாசனத்தை அவமதிக்கக் கூடிய வகையில் வார்த்தைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். ஜெயலலிதாவை தண்டிப்பதற்கு முன்னர் இந்திய அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் சில வழிகாட்டு முறைகள் அடங்கிய ஆவணத்தை, இந்திய மத்திய அரசாங்கம் ஜெயல லிதாவுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தை ஜெயலலிதா மதிக்காவிட்டால் அதன் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் அரசை, இந்திய ஜனாதிபதி கலைத்து அங்கு ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று சுப்ரமணியசுவாமி ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்த வாதத்தை ஆதரிக்கக்கூடிய வகையில் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம், இந்திய அரசியல் சாசனத்தின்படி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயமென்றும், இதற்கு மாநில அரசு தனது பங்களிப்பை விரும்பி னால் வழங்கலாம். ஆனால், மாநில அரசாங்கம் ஒன்றுக்கு யதார்த்தத்திற்கு புறம்பான தீவிர கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை வைத்து போட்டா போட்டி அரசியல் நடத்துவதன் நிகழ்வே, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று சுட்டிக்காட்டிய ராம், இலங்கை பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கோரும் தீர்மானம் வலுவற்றதாகவும் செல்லுபடியற்றதாகவும் இருக் கிறது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய ஆளும் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடுகள் பாராட்டு க்குரியவை என்று தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளுக்கு தமிழ்நாடு மாநில அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்தால், ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்துக்கு வெளியில் உள்ள மற்ற மாநிலங்களில் நடத்த வேண்டுமென்றும் திரு. ராம் மேலும் யோசனை தெரிவித்துள்ளார்.

இதே வேளையில் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவ ங்களால் இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு க்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படவில்லையென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

ஜெயலலிதா சட்ட சபையில் இலங்கைக்கு எதி ரான பிரேரணை ஒன்றை முன்மொழிந்த சந்தர்ப் பத்தில் தனது அரசியல் எதிரியான தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை யும் கிண்டல் செய்ய தயங்கவில்லை. ஜெயலலி தாவின் இந்த வீம்புப் பேச்சுக்கு பதிலடி கொடு க்கும் முகமாக கலைஞர் ஐயா, தமிழக சட்ட சபையில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? அல்லது ஓரங்க நாடகமா? என்று கிண்டல் செய்துள்ளார்.

கச்சதீவு பிரச்சினையாக இருந்தாலும், இலங் கைப் பிரச்சினையாக இருந்தாலும், காவேரிப் பிரச்சினையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பது போல் ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பத் கூறி வருகிறார் என்று ஜெயலலிதாவை கிண்டல் செய்த கலைஞர் ஐயா, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் இலங்கைத் தமிழர்க ளுக்காக போராட்டங்களை நடத்தியது. இதனால், எமது கட்சிக்கு பல்வேறு இழப்புகளும் ஏற் பட்டன என்று கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அரசியலில் கருணாநிதியின் அளவுக்கு முதிர்ச்சி இல்லையென்பதற்கு அவரது தற்போதைய அரசியல் செயற்பாடுகள் சான்று பகர்கின்றன. இனிமேலாவது ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் அனுபவமற்ற ஒரு அரசியல்வாதியைப் போன்று நடப்பதை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.