புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
உலகத்தொல்சீர் நாடக இலக்கிய நாடகாசிரியரான ஈஸ்கலஸ்

உலகத்தொல்சீர் நாடக இலக்கிய நாடகாசிரியரான ஈஸ்கலஸ்

மனிதனுடன் பிறந்தது நடிப்புக்கலை. அதன் துணையுடன் வளர்ந்து வருவது நாடகக்கலை. மனித நாகரிகம் கால் கொள்ளத் தொடங்கியதுமே நாடகக்கலையும் வளரத் தொடங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு மண்ணிற்கும், நாட்டிற்குமேற்றவாறு, தனித்தனி நாடக வடிவமைப்பு, இயல்புகள் ஆகியவறறுடன் நாடகக்கலை வளர்ந்து வந்துள்ளது. “மிகத் தொன்மையான நாகரிக வளர்ச்சியைக் கொண்ட கிரேக்க, உரோம, சீன, இந்திய, நாடுகளில் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே நாடகக் கலை செழித்து வளர்ந்திருந்தமையை வரலாறு காட்டுகிறது”

கிரேக்க நாட்டில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே நாடகக் கலை நன்கு தழைத்திருந்தது. கிரேக்க நாடகம் என்னும் போது மூன்று முக்கியமான நாடக வகைகளைக் காணலாம். அவையாவன “திறஜெடி அல்லது துன்பியல் நாடகம், கொமடி அல்லது மகிழ் நெறி நாடகம், சற்றர் அல்லது எள்ளல் நாடகங்கள் என்பனவாகும்” இந்நாடக வகைகளே அரங்கேறிவந்தன. “கிரேக்கத்திலேயே மிகப்பழைய நாடகப்பிரதிகளையும் நாடகம் மேடையிடப்பட்ட மிகப் பழைய அரங்கின் அழிபாடுகளையும் அரங்க அளிக்கை முறைகளையும் அறியக்கூடியதாகவுள்ளது.” கிரேக்க நாடு முப்பெரும் அவல நாடகாசிரியர்களின் (ஈஸ்கலஸ், சோபோக்கிளிஸ், பரரிப்பிடிஸ்) வரிசையையுடையதாக விளங்குகின்றது. தெஸ்பிஸ் முதலாவது நடிகனையும் “ஈஸ்கலஸ் இரண்டாவது நடிகனையும்” சோபோக்கிளிஸ் மூன்றாவது நடிகினையும் கிரேக்க நாடகத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

கிரேக்கத்தில் திறஜெடி (அவலச்சுவை), கொமடி (இன்பியல்) சற்றர் அல்லது என நிகழ்த்தப்பட்ட இந் நாடகங்கள் “உலகத்தொல்சீர் இலக்கியங்களுக்குள்ளே (ஹிhலீ globலீ ணீlassiணீ) சேர்க்கப்பட்டுள்ளன.” “கிரேக்கரங்கில் போட்டிக்கான நாடகங்கள் காலைமுதல் மாலைவரை நடிக்கப்பெற்றன”. நடிகனே பெரும்பாலும் நாடகாசிரியனாகவிருந்தான். கிரேக்க அரங்கிற்கு இரண்டாவது நடிகனை கொண்டு வந்தவராக விளங்குகின்றார். ஈஸ்கலசின் காலத்தில் (கி.மு. 525-456) “பாடலை விட நடிப்பிற்கு முக்கியத்துவம் கிடைத்தது” நாடக இறுதியில் பின்னுரை என்ற உறுப்பைத் தோற்றுவித்தவரும் இவரேயாவார்.

நடிகர்களுக்குச் சிறந்த உடையமைப்பைத் தந்தவர் ஈஸ்கலசாவார். உயர்ந்த குதி கால் செருப்பினை நாடகமாந்தர் அணியுமாறு செய்தவரும் இவரே. இவருடைய மேற்பார்வையில் மேடையில் தோன்றுவோருக்கு நீண்டகைகளுடைய அங்கிகள் வேலைப்பாடுகள் கொண்டவையாகத் தைக்கப்பட்டன. “கிரேக்க நாடகங்களில் நாடகத்தலைவனுடைய குதிகால் செருப்பு அவனை மற்றையோரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது போலவே, அவனுடைய விலையுயர்ந்த ஆடையும் குறுநில மன்னர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது”. கிரேக்க நாடக நடிகர்கள் தலைமுடியை உயர்த்தி உச்சந் தலையில் குடுமியாகக் கட்டியிருந்தனர். இது தலைவனின் உயரத்தையும் கம்பீரத்தையும் மேலும் மிகுவித்தது. இத்தன்மையெல்லாம் ஈஸ்கலசின் நாடகங்களில் காணப்பட்டன. ஈஸ்கலஸ் கால அரங்கானது இருபதினாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய இருக்கைகளைக் கொண்டதாக அமைந்தது.

ஆகவே அந்த மேடையில் தோன்றுபவன் பளிச்சென்று தெரியும் வண்ணம் சிறப்பாக ஒப்பனை செய்தார் ஈஸ்கலஸ். ஆகவே பல வண்ணங்களில் முகமூடிகள், உடைகள் ஆகிய வற்றை அமைத்துக் கொடுத்தார். ஈஸ்கலசின் நாடக மாந்த ர்கள் இயற்கையாற்றலின் உருவகமாகப் படைக்கப் பெற்றவர்கள். புராண மாந்தர்கள் பலர் இருந்தார்கள்.

ஈஸ்கலசின் நாடகங்களில் இறந்தவர்களின் ஆவிகளும் உலவுவதாக்காட்டப்பட்டது. ஆவிகளின் தோற்றம். அவற்றின் சீற்றம் அவையோரை அச்சுறுத்தக்கூயனவாக விருந்தன. குழந்தைகள் அலறினர். பெண்களுக்கும் கருச்சிதைவுகள் ஏற்பட்டன என்று கூறப்படுகிறது.

பாக்கியராஜா மோகனதாஸ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.