புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
வானொலிக் குயிலாக நேயர் நெஞ்சங்களில் கீதமிசைக்கும் ராNஜஸ்வரி சண்முகம்

வானொலிக் குயிலாக நேயர் நெஞ்சங்களில் கீதமிசைக்கும் ராNஜஸ்வரி சண்முகம்

ஒரு காலத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களைத்; சினிமாத்திரை நட்சத்திரங்களாகவே நேயர்கள் எண்ணினார்கள். இன்றும் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை. அவ்வாறு நேயர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் வகையில் தமது திறமைகளைத் திறம்பட வெளிப்படுத்தியவர் கள், வெளிப்படுத்தி வருபவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவ்வாறு நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தி ருக்கும் திருமதி ராNஜஸ்வரி சண்முகம் மறைந்து கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை யுடன் ஓராண்டு பு+ர்த்தியடைகிறது.

இதுவரை காலம் எத்தனையோ அறிவிப்பாளர்கள் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் ராNஜஸ்வரி சண்முகம் தனித்துவமாகத் திகழ்கிறார். அவர் தொடர்பான பதிவுகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு கூட்டுத்தாபனத்தில் கடந்த 31 வருட காலமாகப் பணியாற்றும் செல்வி புஷ்பராணி சிவலிங்கம் நடவடிக்கை எடுத்துச் சாதித்தமையே இதன் காரணமாகும். இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். அதில் பங்குபற்றிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவையின் கட்டுப்பாட்டாளரும் தென்றல் சேவை பணிப்பாளருமான இராஜ புத்திரன் யோகராஜன் உரையாற்றுகையில் வரலாற்றி;ல் பதியப்படவேண்டிய முக்கிய தகவல்களையெல்லாம் வழங்கியிருக்கிறார்.

“1950 களில் மேடை நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலம். அன்று மேடை நாடகங்களைப் பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்தது. பல நாடகங்கள், பல மேடை நாடக நெறியாளர்கள், பல மேடை நாடக எழுத்தாளர்கள் பல மேடை நாடகக் கலைஞர்கள் என்று மேடைகளோடு ஒட்டி உறவாடிய பல கலைத்துவம் வாய்ந்தவர்கள் இருந்த காலம் அது.

அந்தக் காலகட்டத்தில் தான் ராNஜந்திரம் மாஸ்டர் என்ற மேடை நாடக தயாரிப்பாளர் பல மேடை நாடகங்களை மேடையேற்றி பிரபலமாக இருந்தார். ராNஜந்திரம் மாஸ்டர் மட்டும் அல்ல, அவரைப் போல் பலர் இருந்தார்கள். ஆனால், ராNஜந்திரம் மாஸ்டர் மூலம் பிரபல்யமான செல்வி பிச்சாண்டியின் நாடகத்துறை பற்றி நான் பேச வந்துள்ளேன்.

கொழும்பு கொட்டாஞ்சேனை மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற செல்வி பிச்சாண்டி தான் ராNஜந்திரம் மாஸ்டரின் மேடை நாடகங்களின் ஊடாக 1950களில் இலங்கை வானொலியில் வானொலி நாடகக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டார். அன்று செல்வி பிச்சாண்டியாக இருந்தவர்தான் இன்றைய ராNஜஸ்வரி சண்முகம் அவர்கள்.

1950களில் இலங்கை வானொலி நாடகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் சானா என அழைக்கப்படும் சண்முகநாதன் அவர்கள். அவருடைய காலத்தில்தான் பிரபல வானொலி நாடகக் கலைஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் இன்று எத்தனைபேர் உயிரோடு இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை.

அன்றைய வானொலிக் கலைஞர்களாக பஞ்சவர்ணம், லச்சுமணன், சுப்புலக்ஷ்மி காசிநாதன், பிலோமினா சொலமன், தாஸன் பெர்னாண்;டோ, ரோசாரியோ பீரிஸ், மார்க்கண்டு, விசாலாட்சி குகதாஸன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, ஆர்.விக்டர், பிச்சையப்பா, என்.தர்மலிங்கம், எஸ்.எம்.ஏ. ஜப்பார், சரசாம்பியை சுப்பிர மணியம், புஷ்பம் சின்னையா, மேரி nஜhசபின் பெர்னா ண்டோ, மணிமேகலை ராமநாதன், சந்திரகலா, லடீஸ் வீரமணி, ஆர்.எஸ். சோதிநாதன், ஏ.எம்.Nஜசுரட்ணம், ராNஜஸ்வரி சண்முகம் ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் இன்று பேசப்பட வேண்டியவர்கள். ஆனால், இவர்களை யாரும் நினைப்பதும் இல்லை. இவர்கள் பற்றிப் பேசுவதும் இல்லை.

இவர்கள் மட்டுமல்ல, திருமதி ராNஜஸ்வரி சண்முகம் அவர்களின் காலத்தில் பல வானொலி நாடக எழுத்தாளர்களும் இருந்தார்கள். கலைஞர்களை நினைக்கும்போது தயாரிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஞாபகப்படுத்துவதுதான் நல்லது.

அந்த வகையில் வானொலி எழுத்தாளர்களாக பலர் இருந்தார்கள். ஒருசிலரை ஞாபகப்படுத்துவது நல்லது. அந்த வகையில் சானா அவர்கள் நல்ல தயாரிப்பாளராகவும் நல்ல எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிப் பிரபல்யமான தொடர் நாடகம் தான் லண்டன் கந்தையா. இந்த நாடகம் வானொலியில் தொடர் நாடகம் ஒலிபரப்பப்பட்டது. மேடை நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த திருச்சிசந்தர், இலங்கையைச் சேர்ந்த நசுறுதீன். நசுறுதீன் அவர்கள் எழுதிய நாடகம் தான் மேகம் மறைத்த நிலா என்ற நாடகம். அது மட்டும் அல்ல, இன்றும் நினைக்க வேண்டிய ஒருவர் இருக்கின்றார். ஏனொ தெரியவில்லை அவரை நாம் நினைப்பதில்லை. இலங்கை வானொலிக்கு பல நாடகங்களை எழுதியவர், பல மெல்லிசைப் பாடல்களையும் எழுதியவர். ஈழம் என்ற சொல்லை தன் பெயரின் முன்னால் வைத்து பிரபல்யமாக இருந்தவர். ஈழத்து ரத்தினம். அவர் எழுதிய நாடகங்களிலும் ராNஜஸ்வரி சண்முகம் நடித்திருந்தார். மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம்.ராமையா அவர்கள் எழுதிய முதல் நாடகம் தான் விடிவெள்ளி. அவரது முதலாவது வானொலி நாடகத்திலும் ராNஜஸ்வரி சண்முகம் நடித்திருந்தார்.

மேடை நாடக வரிசையில் சி.சண்முகம் அவர்கள் எழுதிய நினைவில் நிறைந்தவை என்ற நாடகம். இந்த நாடகத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ராNஜஸ்வரி சண்முகம் அவர்கள் பட்டிக்காட்டு பெண் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். நெய்ரஹிம் சாஹீட் ஆங்கில ஆசிரியையாக பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அத்துடன் கே.ஏ.ஜவாஹர் ராNஜஸ்வரி சண்முகம் அவர்களுக்கு அப்பா பாத்திரம் ஏற்று நடித்தார். இந்த நாடகத்தில் தான் அவரது மூத்த மகன் சந்திரமோகனும் நடித்திருந்தார்.

எழுத்தாளர்கள் வரிசையில் சி.சண்முகம் அவர்களையும் நாம் இந்த வேளையில் நினைக்க வேண்டும். அவர் இறுதியாக எழுதிய வானொலி நாடகம் வாழப்பிறந்தவர்கள் என்ற நாடகம்.

இந்த நாடகத்தைத் தயாரித்தவர் ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள். இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.சுந்தர்ராஜன். கதாநாயகியாக நடித்தவர் அம்பிகா சண்முகம். வாழப்பிறந்தவர்கள் என்ற நாடகத்தை எழுதிய சி.சண்முகம் அவர்கள் தனது வாழ்க்கையை அந்த நாடகத்துடன் முடித்துக்கொண்டார்.

இத்தனைய நாடகங்களையும் அன்று தயாரித்தவர் வானொலி நாடகத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் சானா அவர்கள். அவர் இத்தனை நாடகக் கலைஞர்களையும் தனது தயாரிப்பில் உருவாகும் நாடகங்களில் பயன்படுத்தி வந்தார். ஆனால், அன்று இவர் பேச்சு வழக்கின் அடிப்படையில் நாடகக் கலைஞர்களை பிரித்தார்.(வட்டார வழக்கிற்கு ஏற்றவாறு)

மலையகப் பேச்சு வழக்கிற்கு சில கலைஞர்களையும் யாழ்ப்பாண பேச்சு வழக்கிற்கு சில கலைஞர்களையும் பிரித்து வானொலி நாடகத்தை தயாரித்து வந்தார்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அது என்னவென்றால், வானொலி நாடக நடிப்பில் ராNஜஸ் வரிக்கு நிகராக இன்னுமொரு கலைஞர் இருந்தார். அவர்தான் நடிகை பஞ்சவர்ணம். இருவருக்கும் ஒரே மாதிரி யான குரல். ராNஜஸ்வரி சண்முகம் நடித்தால் பஞ்ச வர்ணம் என்றும் பஞ்சவர்ணம் நடித்தால் ராNஜஸ்வரி என்றும் கேட்பவர்கள் நினைக்கும் அளவிற்கு இருவரினதும் நடிப்பு இருந்தது.

சானா அவர்கள் கலைஞர்களை வட்டார வழக்கிற்கு ஏற்றவிதமாக பிரித்தபடியால்தான் ராNஜஸ்வரியின் தனித்துவத்தை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது என்னவென்றால், பஞ்சவர்ணம் அவர்களால் இந்தியப் பேச்சு வழக்கில் மட்டும்தான் நடிக்க முடிந்தது. ஆனால், ராNஜஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் சகல வட்டார வழக்கையும் நடிக்கும் நல்ல கலைஞராக அவரால் இனங்காணப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கை வானொ லியின் 6ஆம் கலையகத்தில் பார்வையாளர்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் வானொலி நாடகத்தினை நேரடி ஒலிபரப்பிய காலமும் அன்று இருந்தது.

ராNஜஸ்வரி சண்முகம் அவர்கள் வானொலி நாடக தயாரிப்பாளர்கள் பலரின் தயாரிப்பில் பல நாடகங்களை நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சானா முதல் கே.எம்.வாசகர், பி.விக்கினேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன், அங்கயன் கயிலைநாதன், எஸ்.எழில்வேந்தன், மயில்வாகனம் சர்வானந்தா, கே.ஞானசேகரன், இராஜபுத்திரன் யோகராஜன், பி.எச்.அப்துல் ஹமீட், அருணா செல்லத்துரை, வாசுதேவன், மதியழகன், லூக்கஸ் திருச்செல்வம் வரை தயாரிக்கப்பட்ட பல வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். தனது இறுதிக் காலத்தில் ராNஜஸ்வரி சண்முகம் அவர்களும் பல வானொலி நாடகங்களைத் தயாரித்திருந்தார். அவர் தயாரித்த பல நாடகங்களில் நானும் நடித்துள்ளேன்.

ஒருமுறை நான் அவருடன் நடிக்கும்போதுதான் அவரது நடிப்பாற்றலை கண்டேன். எனக்கொரு தொலைபேசி அழைப்பு தனியார் நிறுவனமொன்றில் இருந்து வந்தது. அண்ணை உங்களுடன் ராNஜஸ்வரி பேசவேண்டுமாம். தொடர்பில் இருங்கள் என்று. சரி பேசச்சொல்லுங்கள் என்றேன். நானும் தொடர்பில் இருந்தேன். தம்பி ஸ்ரீதர் பிச்சiயாப்பா இறந்து 31ஆவது நாள் வருகுதடா. அதற்கு ஒரு வானொலி நாடகம் தயாரிக்க வேண்டும். அந்த நாடகத்தில் நீயும் நடிக்கிறியா என்று… சரியக்கா நடிக்கிறேன் என்று நான் பதில் சொன்னேன்.

அந்த நாடகத்தில் நீ ஸ்ரீதராகவும் ஸ்ரீதருக்கு நான் அம்மாவாகவும் ஜவாஹர் பெர்னான்டோ ஸ்ரீதரின் நண்பனாகவும் நடிக்க வேண்டும். உனக்கு நடிக்க நேரம் இருக்குமொடா என்று கேட்டார். என்னக்கா பகிடிவிடுகிறீர்கள். ஸ்ரீதராக நான் நடிக்கிறதா. ரொம்பக் கஷ்டமக்கா. ஸ்ரீதரின் நகைச்சுவை பாணி வேறு. என்னுடைய நகைச்சுவைப் பாணி வேறு என்று சொன்னேன். உடனே அக்கா சொன்னா, இருவரும் வேறுவேறாக இருந்தாலும் உங்கள் இருவரினதும் உணர்வு ஒன்றுதான். உன்னாலை முடியும் என்றார். அந்த நாடகத்தில் நானும் ராNஜஸ்வரி சண்முகம் அவர்களும் ஜவாஹர் பெர்னான்டோ அவர்களும் நடித்திருந்தோம். அந்த நாடகம் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதி வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக எழுத்தாளரினால் எழுதப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் எப்படி நடித்திருப்பான் என்பதை கற்பனையில் பார்த்தேன். நாடக ஒலிப்பதிவு நாள் வந்தது.

மூவரும் கலையகத்திற்குள் சென்றோம். அந்த நாடகத்தை ஒலிப்பதிவு செய்வதற்கு ஒலிப்பதிவாளரும் அந்தநாடகத்தை எழுதிய எழுத்தாளரும் அவருடன் வந்திருந்த பார்வையாளர்களும் நாங்கள் நடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாடகம் நடித்து முடிந்து வெளியில் வந்ததும் அக்காவிடம் நான் கேட்டேன்.. இப்படியோர் உருக்கமான பாத்திரத்தை இந்த வயதிலும் நடிக்கிறீர்களே அது எப்படி என்று… ஒரே பதிலில் சொன்னார்…என் வாழ்க்கையின் உண்மைச் சம்பவத்தை நினைத்தேன்.. என்னை அறியாமலே குளறி அழுதுவிட்டேன் என்று பதில் சொன்னார்.

அற்புதமான ஒரு நாடகக் கலைஞர் திருமதி ராNஜஸ்வரி சண்முகம் அவர்கள். அவர் பற்றி இன்னுமொன்றைச் சொல்லி விடைபெறுகிறேன். தொலைக்காட்சி நாடகத் திலும் சினிமாவிலும் தனது முகத்தைக் காட்டாது குரல் மூலம் தனக்கென ரசிகர்களை சேர்த்துக்கொண்ட அற்புதக் கலைஞரும் அறிவிப்பாளரும் யார் என்று கேட்டால் அது ராNஜஸ்வரி சண்முகம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பெருமை அவரைத்தான் சாரும்.

நூல் வெளியீட்டு விழாவில், தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி என்பவற்றின் பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன் உட்பட பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

விசு...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.