புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
அலையோசையில் மிதந்த பாவோசை

அலையோசையில் மிதந்த பாவோசை

ஸ்பெய்னை பல மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுள் முஃதமித் என்ப வரும் ஒருவர். இவரது அரண்மனை வெளிநாட்டார் தங்கும் மடமாக இருந்தது. கவிஞர்கள் ஒன்று சேரும் மடமாகவும் இருந்தது. இந்த அரண்மனை ‘அறிவாளி களின் அவை’ என்றும் சொல்லப்பட்டது. இல்லாதோர் எல்லோரும் உதவிகள் தேடிவரும் ஓர் இடமாகவும் இது பிரகா சித்தது. இத்தனைக்கும் இந்த முஃதமித் என்னும் அரசன், வாரி வழங்கும் வள்ளல் மட்டுமல்ல, ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவருடைய அமைச்சர் களுள் பிரதான அமைச்சரான இப்னு அம்மார் என்பவரும் ஒரு கவிஞர்.

அரசரும் அமைச்சரும் ஒரு நாள் ஓர் ஆற்றங்கரை ஓரமாக உலவிக் கொண்டிருந்தனர். அரசன் முன்னே செல்ல, அமைச்சர் சிறிது தூரத்தில் பின்னால் சென்றார்.

இதனால், இருவரின் உரையாட லும் சிறிது பலமாகவே இருந்தது. அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. ஆற்றிலே அலை ஏற் பட்டது. அந்த அலை கரையிலே மோதியது. இதைப் பார்த்த அரசர் முஃதமித்,

“பாராய் புலவோய் காற்றதுவே
அலையால் கவசம் நெய்வதனை!”

என்று பாடி, அடுத்த அடியைப் பாடி முடிக்குமாறு அமைச்சரைப் பணித்தார். இப்னு அம்மார் திகைத்தார். திணறினார். திடீரென அப்பாடலை முடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

அத்தருணம் அங்கு எழுந்த அலையோசையோடு, ஆற்றங் கரையின் அருகேயிருந்து பாவோசையும் கலந்து மிதந்து வந்தது. மன்னரின் பாடலை நிறைவு செய்யும் ஈற்றடியாக அது இருந்தது. அரசரும் அமைச்சரும் குரல் வந்த திசையை நோக்கினர். அங்கே அந்நேரத்தில் ஓர் ஆரணங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவள், அரசனின் ஆரம்ப இருவரிப் பாடலைப் பாடி, தன் இருவரி ஈற்றடிப் பாடலையும் பாடிக் கொண்டிருந்தாள். மகிழ்ச்சி அடைந்தார் மன்னர். அம்மங்கையைப் பற்றி விசாரித்தார்.

அந்த ஆரணங்கு, ருமைக் என்பவனின் அடிமையாக இருப்பவள். இதனால், இவள் ருமைக்கா என்று அழைக்கப்படுகின்றாள். துணி நெய்து விற்று அவள் உயிர் வாழ்கிறாள். நினைத்த மாத் திரத்தில் கவி பாடும் ஆற்றல் உள்ளவள் என்று அரசர் அறிந்து கொண்டார்.

ருமைக்காவின் புலமையும், சொற்களை அழகாக உச்சரிக் கும் தொனியும் முஃதமித் மன்னரின் மனதைக் கவர்ந்தது. ருமைக்காவைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அவரின் பெயரை இஃதிமாத்துல் ருமைக்கிய்யா என்று மாற்றம் செய்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.