புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

இவ்வார பலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
 

24.02.2013 முதல் 02.03.2013 வரை

 

24.02.2013 ஞாயிற்றுகிழமை நடேசர் அபிஷேகம்
25.02.2013 திங்கட்கிழமை பூரணை விரதம், மாசி மகம்
01.03.2013 வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்


கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம் (நட்பு)
சூரியன் கும்பம் (பகை)
சனி துலாம் (உச்சம்)
புதன் கும்பம் (நட்பு)
சுக்கிரன் கும்பம் (நட்பு)
செவ்வாய் கும்பம் (பகை)
சந்திரன் கடகம், சிங்கம், கன்னி, துலாம்

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய சொத்துக்கள் வாங்க நேரிடலாம். 11ஆம் இடத்து புதன் காரணமாக மனைவி மக்கள் சந்தோசம் அடைவர்.
11ஆம் இடத்து செவ்வாய் காரணமாக பெருமளவு பணவரவு ஏற்படும். 11ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக திடீர் பணவரவு ஏற்படும் தானம் செய்வதில் நாட்டம் ஏற்படும்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்களுக்கு 10ஆம் இடத்து சூரியன் காரணமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். 10ஆம் இடத்து புதன் காரணமாக செய்கின்ற தொழிலால் நல்ல லாபம் ஏற்படும், குடும்பசுகம் மேம்படும் பெண்வழி சுகம் ஏற்படும். 10ஆம் இடத்து செவ்வாய் காரணமாக தோல் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரும். 10ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக தேவை யில்லாத பெயர் கேட்க வேண்டி வரும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 9ஆம் இடத்து சூரியன் காரணமாக பொதுவாக பயணங்களில் கவனமாக இருப்பது நன்று.
9ஆம் இடத்து புதன் காரணமாக வைத்திய ஆலோசனை பெறவேண்டி வரும். 9ஆம் இடத்து செவ்வாய் காரணமாக வரவுக்கு மீறிய செலவுகள் அதிகமாக இருக்கும். 9ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள். நல்ல செய்தி வந்து சேரும். வராத பணம் வந்து சேரும்.
 


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக்காரர்களுக்கு 8ஆம் இடத்து சூரியன் காரணமாக அரச பதவியில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நன்று. 8ஆம் இடத்து புதன் காரணமாக பரீட்சை வழக்கு முடிவுகள் சாதகமாக அமையும். 8ஆம் இடத்து செவ்வாய் காரணமாக போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். 8ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக ஆடம்பரத்தில் நாட்டம் ஏற்படும். பெண் நண்பர்களால் தலையிடி ஏற்படும்.  


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்து சூரியன் காரணமாக திருமணம் தாமதம் ஆகலாம். மாற்றம் ஏற்படலாம். 7ஆம் இடத்து புதன் காரணமாக வீட்டில் வீணான கலகம் ஏற்படலாம். 7ஆம் இடத்து செவ்வாய் காரணமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிரிகளின் தொந்தரவு இருக்கும். 7ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்கள் தேவையில்லாத பிரச்சினையை உங்களுக்கு தரலாம்.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு 6ஆம் இடத்து சூரியன் காரணமாக புதிய சொத்துக்கள் சேரலாம். கெளரவம் உயரும். 6ஆம் இடத்து புதன் காரணமாக பரீட்சை வழக்குகள் முடிவுகள் சாதகமாக அமையும். புதிய பதவி கிடைக்கலாம்.
நல்ல செய்தியும் வந்து சேரும். 6ஆம் இடத்து செவ்வாய் காரணமாக எதிரிகளின் பயம் நீங்கும். 6ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக வீட்டில் மனைவியுடன் சிறு சச்சரவு ஏற்படலாம்.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிக்காரர்களுக்கு 5ஆம் இடத்து சூரியன் காரணமாக பகைவர்களின் தொல்லை இருக்கும். 5ஆம் இடத்து சூரியன் காரணமாக பகைவர்களின் தொல்லை இருக்கும். 5ஆம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் பிணக்குகள் தோன்றலாம். பிள்ளைகளாலும் மனதில் யோசனை தோன்றும். 5ஆம் இடத்து செவ்வாய் கார ணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம். 5ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெரியவர்களின் ஆசியினால் மனம் ஆறுதல் அடையும், நண்பர்கள் கை கொடுப்பார்கள்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிகாரர்களுக்கு 4ஆம் இடத்து சூரியன் காரணமாக பெண்வழியால் விரோதம் ஏற்படலாம். 4ஆம் இடத்து புதன் காரணமாக பணவரவு நன்றாக இருக்கும். செய்கின்ற தொழிலால் லாபம் ஏற்படும். 4ஆம் இடத்து செவ்வாய் காரணமாக வயிறு சம்பந்தமான மருத்துவ ஆலோசனை பெறவேண்டி வரும். போக்குவரத்தில் கவனம் தேவை. 4ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக இனசன உறவினர் கொண்டாட்டம் அதிகரிக்கும். நல்ல பெயரும் சமூகத்தில் கிடைக்கும்.
 


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு 03ஆம் இடத்து சூரியன் காரணமாக பணம் வந்து சேரும் சமூகத்தில் மதிப்பு உயரும். 3ஆம் இடத்து புதன் காரணமாக அரச உத்தியோகத்தர்கள் முன்கவனத்துடன் நடப்பது நன்று, எதிரிகளின் பயம் மனதில் இருக்கும். 3ஆம் இடத்து செவ்வாய் காரணமாக வராத பாக்கி வசூலாகிவிடும். இறைவழிபாடு கூடும். 3ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக குழந்தை செல்வம் கிடைக்கலாம். நண்பர்கள் உதவ முன்வருவார்கள்.
 


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு 02ஆம் இடத்து சூரியன் காரணமாக கட்டுக்கடங்காத செலவு ஏற்படும். 2ஆம் இடத்து புதன் காரணமாக தேவையில்லாத பெயர் கேட்க நேரிடலாம். கோப உணர்வு கூடும். 2ஆம் இடத்து செவ்வாய் காரணமாக நெருப்பு தொழிலுடன் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நன்று. 2ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக அரச உதவி கிடைக்கலாம். தேவைக்கு பணம் கைக்கு வந்து சேரும்.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 01ஆம் இடத்து சூரியன் காரணமாக தேவையில்லாமல் அலைச்சல் ஏற்படும். 1ஆம் இடத்து புதன் காரணமாக உறவினர்களுடன் மனக்கிலேசம் ஏற்படலாம். வெளியூர் செல்ல வேண்டி ஏற்படலாம். 1ஆம் இடத்து செவ்வாய் காரணமாக வைத்திய ஆலோசனை பெறவேண்டி ஏற்படலாம். பரீட்சை வழக்கு முடிவுகள் மனதுக்கு அதிருப்தியை தரலாம். 1ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்கள் கை கொடுப்பார்கள்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்து சூரியன் காரணமாக இடமாற்றம் ஏற்படலாம். எடுக்கும் காரியங்கள் நிறைவேற தாமதமாகும். 12ஆம் இடத்து புதன் காரணமாக எதிரிகளின் தொந்தரவு கூடும். உடல் நலம் பாதிக்கப்படலாம். பரீட்சை வழக்கு முடிவுகள் ஏமாற்றத்தை தரலாம். 12ஆம் இடத்து செவ்வாய் காரணமாக செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். 12ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக ஆடைகள் ஆபரணங்கள் வந்து சேரலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.