புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

திஸ்ஸமஹராமவில் 7வது கால்டன் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு விழா

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில்:

திஸ்ஸமஹராமவில் 7வது கால்டன் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு விழா

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு 7 வது தடவையாக நடாத்தும் கால்டன் சுப்பர் ஸ்போட்ஸ் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை திஸ்ஸமஹராமையில் இடம்பெறவு ள்ளது என சங்கத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி லலித் பீயும் பெரேரா தெரிவித்தார். இவ் விளையாட்டுப் போட்டி தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஆறு வருடமாக இடம் பெற்று வருகின்றது. ஆனால் இந்த முறை 7 வது தடவையாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் இம் முறை குத்துச் சண்டைப் போட்டியை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளோம். அது தவிர 4x4 மோட்டார் ஓட்டப் போட்டி, மெளன்டன் சைக்கிளோட்டப் போட்டி, படகோட்டப் போட்டி, மோட்டார் சைக்கிளோட்டப் போட்டி, மோட்டார் காரோட்டப் போட்டி என்பனவும் இடம் பெறவுள்ளன.

இதேவேளை இதற்கு மேலதிகமாக மாலை நேரத்தில் இளைஞர்கள், பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கால்டன் ஸ்போட்ஸ் மூலம் கிராமிய மட்டத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் ஏற்படும் வகையில் தேசிய, சர்வதேச மட்டத்திற்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும். திஸ்ஸமஹராமவில் இந்த விளையாட்டுப் போட்டிகளை நல்லமுறையில் நடத்துவதற்கு எமது சங்கத்தின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம். பி, உப தலைவர் யோசித்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். இந்தப் போட்டிகளுக்காக எமது சங்கம் 7 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அனைத்து வீரர்களுக்கும், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதேவேளை இம்முறை கண்காட்சி சைச்சிளோட்டப் போட்டி இடம் பெறும். இம்முறை 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அதன் மூலம் எமது இலக்கு வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது இளைஞர்களுக்கான அமைப்பு ரக்பி செவன்ஸ் போட்டி, கூடப்பந்தாட்டப் போட்டி, படகோட்டப் போட்டி, காரோட்டப் போட்டி, மரதன் போட்டி, மெளன்டன் சைக்கிள் போட்டி, பட்மின்டன் போட்டி, உதைபந்தாட்டம், உடற் கட்டழகுப் போட்டி என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி புதிய சகாப்தம் படைக்கவுள்ளோம். இப் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்புக் கிட்டும்.

அதே நேரம் கால்டன் விளையாட்டு தொலைக் காட்சி அலை வரிசை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தப் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக கண்டி, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் வெளிநாட்டவர்களும் அதிகமானவர்களும் பார்வையாளர்களாக வரவிருப்பதால் பொருளாதார ரீதியாக ஹம்பாந்தோட்டை பிரதேசம் பெரும் முன்னேற்றம் காணும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகளுக்கு எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு முப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அது மட்டுமல்லாமல் தெற்கிலுள்ள இளைஞர்களுக்கும் வடக்கிலுள்ள இளைஞர்களுக்குமிடையில் சிறந்த உறவுப் பாலம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் நல்ல உறவை கட்டிக்காப்பது எமது எதிர்கால இலட்சியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை முதல் நாள் போட்டிகள் 1ம் திகதி காலை 7.30 மணிக்கு தெபரவெவில் இருந்து திஸ்ஸமஹாராம கால்டன் விளையாட்டுத் திடல் வரைக்கும் மெளன்டன் சைக்கிள் போட்டியும் 8 மணிக்கு4x4அணிவகுப்பு போட்டி கொழும்பு கிரீன் பார்த்தில் இருந்து கால்டன் விளையாட்டுத் திடல்வரைக்கும் இடம்பெறும். அத்துடன் 9.30 மணிக்கு மெளன்டன் பைசிக்கள் ஓட்டப் போட்டி கால்டன் விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகும். 10 மணிக்கு தற்காப்பு கலைப் போட்டியும், இடம்பெறும். அத்துடன் மாலை 3 மணிக்கு திஸ்ஸ வாவில் படகோட்டப் போட்டியும் மாலை 7 மணிக்கு திஸ்ஸ வாவியில் குத்துச் சண்டைப் போட்டியும் இடம்பெறும். இப்போட்டிகளுடன் முதல் நாள் போட்டி நிரைவுக்கு வரும்.

2ம் நாள் போட்டிகளாக தேசிய ரைதளம், 4x4சபாரி, எஸ். வி. யூ.4x4 எஸ்ரிஎம் தற்காப்பு கலை, நீர் விளையாட்டுப் போட்டிகள், மோட்டார் ஓட்டப் போட்டிகள், பரா மோட்டார் ஓட்டப் போட்டி, மாலை இசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.

அத்துடன் இரண்டாம் நாள் போட்டி நிறைவுக்கு வரும். மூன்றாம் நாள் போட்டிகள், மோட்டார் ஓட்டப் போட்டிகள், மோட்டார் காரோட்டப் போட்டிகள், கண்காட்சி மோட்டார் ஓட்டப் போட்டிகள், இசை நிகழ்வுடன் கால்டன் போட்ஸ் போட்டிகள் நிறைவுக்கு வரும்.

இச் செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி களான ஜானக்க சிறி வருணசிங்க, ரோனி இப்ராகிம், வைத்தியர் சூலா செனராத் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.