புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 



 

கண்டி பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்டு வந்த கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் மீண்டும் கல்லூரி அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: சுதத் சில்வா)
 

 



 

லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தனவின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நிறுவனத்தில் சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன. இதன்போது நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார பெளத்த குருமாரை பணிந்து வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: கமல் ஜயமான்ன)
 

 



 

கொழும்பு கம்பன் கழகத்தின் ‘கம்பன் விழா 2013’ சனிக்கிழமை ஆரம்பமானது. இதன்போது வெளியிடப்பட்ட ‘இரை குகன்’ இறுவட்டினை தேவி ஜூவலர்ஸ் அதிபர் என்.எஸ்.வாசு, கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஜே.விஸ்வநாதனிடம் பெற்றுக்கொள்வதையும், அருகில் புரவலர் ஹாஷிம் உமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.
(படம்: வடகொழும்பு குறூப் நிருபர்)
 

 

nஜனீவா மனித உரிமை பேரவை

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள்

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் செல்லவிருக்கும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் அடுத்தவாரம் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அங்கு சந்தித்து நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

                                                           விவரம் »

Dextromethorphan கலந்த மருந்துகளுக்கு இலங்கையில் தடை

இருமலுக்காகப் பயன்படுத்தப்படும் பாணி மருந்து வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள டெக்ஸ்ரோ மெதோபன் (Dextro Methorphan) எனும் இரசாயனப் பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ள சகல மருந்து வகைகளையும் தடைசெய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மேற்படி டெக்ஸ்ரோ மெதோபன் என்ற இரசாயனப் பதார்த்தம் அடங்கிய மருந்து வகைகள் பாதுகாப்புக் காரணங்கள் கருதி தடைசெய்ய முடிவுசெய்துள்ளதாக...

                                                           விவரம் »

மாகாண சபைத் தேர்தல்;

ஐ.தே.க. வுக்கு எதிராக மாற்றுக்குழு களத்தில்

நடைபெறவுள்ள மாகா ணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாற்றுக்குழுவொன்றை தேர்தலில் போட் டியிட வைப்பதற்கான ஆயத்தங்களை செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவையும், கட்சியை...

                                                           விவரம் »

2013 மின்சாரம் வழங்கும் செலவு 268 பில்லியன் : ரூ. 33 பில். அவசியமற்ற செலவு குறைப்பு

மின்கட்டணத்தில் உயர்வில்லை

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட செலவீனங்களை ஆராய்ந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அவசியமற்ற செலவுகளைக் கண்டறிந்து அவற்றில் குறைப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு 268 பில்லியன் ரூபா தேவையென இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பகுப்பாய்வொன்றினைச் சமர்ப்பித்திருந்தது.இதனை ஆராய்ந்த ஆணைக்குழு, அத்தியாவசியமற்ற செலவுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

                                                           விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.