புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

சீதையாக நடிக்க ஒழுக்க நெறியை கடைப்பிடித்தாராம் நயன்தாரா

சீதையாக நடிக்க ஒழுக்க நெறியை கடைப்பிடித்தாராம் நயன்தாரா

சீதை வேடத்தில் நடிப்பதற்காக நான் ஒழுக்க நெறியை கடைப்பிடித்து ஒழுக்கமாகத்தான் இருந்தேன் என்று நடிகை நயன்தாரா கூறினார்.

சினிமா வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நயன்தாரா, தன் கடைசி படமான ‘ராம ராஜ்யம்’ பற்றி ஏற்கனவே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான ஒரு கேரக்டர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முன்பு கூறிய நயன்தாரா, தற்போது ராம ராஜ்யத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், எனது வாழ்க்கையில் ராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படக் குழுவினருடன் நான் முழுமையாக கலந்து விட்டேன்.

அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. பின்னர் படத்தில் பணியாற்றிய அனைவரும் என்மேல் அன்பும் பாசமும் காட்டினார்கள். அவர்களை பிரிய நேரம் வந்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதனால் அழுது விட்டேன். ராம ராஜ்யம் படம் புராண கதை. ராமனுடன் சீதை சேருகிற வரலாறும், பிறகு அவர் மேலோகம் செல்வதும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. நான் ராமாயண கதையை படித்து உள்ளேன். அந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற புராண படங்களில் அம்மன் வேடத்தில் நடிக்கும் நடிகைகள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டதை அறிந்துள்ளேன்.

நான் இந்த படத்தில் சீதா தேவியாக நடிப்பதால் நானும் தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து உள்ளேன். சைவம் மட்டுமே சாப்பிட்டேன்.

இனி நான் புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளமாட்டேன். எனது வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவை மிக சந்தோஷமாக எடுத்துள்ளேன்.

என் வாழ்க்கையில் அடுத்து நடப்பது முக்கியமான விஷயம். அது உறுதியானதும் உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறினார் நயன்தாரா.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.