புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

தமிழை நான் வாழவைக்கவில்லை தமிழ்தான் என்னை வாழவைக்கின்றது

தமிழை நான் வாழவைக்கவில்லை தமிழ்தான் என்னை வாழவைக்கின்றது

 ‘தமிழை நான் வாழவைக்கவில்லை. தமிழே என்னை வாழவைக்கிறது’ என்று டி. ராஜேந்தர் ஒரு பேட்டியில் கூறினார். அந்தப் பேட்டி விபரம் வருமாறு :

என்னாச்சு உங்களின் ‘ஒரு தலை காதல்’?

‘ஒரு தலை ராகம்’ வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போது மறு படியும் ‘ஒரு தலை காதல்’ என் படங்கள் என்போதும் யாருக்கும் மறக்க முடியாத அனுபவம். அதனால் தான் இதையும் அனுபவிச்சு எடுக் கிறேன். என் படங்கள் எல்லாமும் பேசியிருக்கு அன்பு சொல்லி நெகிழ வெச்சிருக்கு காதல் சொல்லி கிறங்க வெச்சிருக்கு பாசம் தந்து பாராட்டு வாங்கியிருக்கு. அதனால் இப்ப மறுபடியும் காதலுக்கு வர்றேன். ரசிகன் மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான் நான்தான் ஹீரோ இதே தாடிதான் வட இந்திய பொண்ணு ஹீரோயின்

உங்க பாணியில் படம் எடுத்தா இப்ப ஓடுமா?

சினிமாவை அங்குல அங்குலமாக தெரிஞ்சு வெச்சிருப்பவன் நான். நான் படிச்ச படிப்பு எனக்கு சோறு போடலை நான் நம்பி வந்த சினிமா தான் சோறு போட்டுச்சு நான் வாழ்ற இந்த வாழ்வு தமிழ் ரசிகர்கள் தந்தது. சிலர் சொல்லுவது மாதிரி தமிழை நான் வாழ வைக்கலை தமிழ்தான் என்னை வாழ வெச்சிருக்கு. மீண்டும் அந்த ரசிகனை திருப்திப்படுத்த வர்றேன். ஆனா இப்ப என் பாணியில் கதை சொன்னால் எடுபடாது. தங்கச்சி பாசம், அம்மா பாசமன்னு பார்த்து உருக ரசிகன் இல்லைன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் காதலை மீண்டும் கொண்டு வர்றேன்.

உங்க பாட்டுக்கும், இசைக்கும் ஒரு கூட்டமே இருந்துச்சே?

இப்பவும் இருக்கு நிறைய படங்களில் என் பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க பொலிவுட்டிலும் என் பாட்டுக்கு ரீ மிக்ஸ் உரிமை வாங்கியிருக்காங்க எல்லாத்தையும் நானே உருவாக்கினேன் என தனிப்பட்ட சாம்ராஜ்யம் அது. குத்துப் பாட்டை நான்தான் தூக்கிக் கொண்டு வந்தேன். இப்ப குத்து பாட்டு பச்ச தண்ணி குடிப்பது மாதிரி ஆகிவிட்டது.

சினிமா மேடைகளில் அடிக்கடி உங்களைப் பார்க்க முடியுதே?

நான் நிறைய மேடைகளைத் தவிர்த்து வந்திருக்கேன். எந்த மேடையும் எனக்காக அலங்கரிக்கப்படவில்லை. நான் போன பின்தான் அந்த மேடை அலங்காரமாகுது. ‘உங்கள் வாழ்த்து வேணும்’னு வீட்டுக்கு வந்து கேட்குறாங்க மறுக்க முடியலை போய் வாழ்த்துறேன். நான் ஏதாவது பேசி பரபரப்பை உண்டாக்குவேன்னு எல்லோரும் காத்திருக்காங்க. யாருக்கும் பயப்படாமல் மனசில் பட்டதை பேசுறேன். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. இன்னொரு கலைஞனை அங்கீகரிச்சுப் பேசுவதை என் கடமையாக நினைக்கிறேன் ஏன்னா நானும் கலைஞன்.

சிம்புவின் இந்த உயரம் நிறைய பேருக்கு பொறாமைன்னு ஒரு விழாவில் பேசுனீங்க?

ஆமாம், நிறைய பேருக்கு சிம்புவைப் பார்த்து பொறாமை இருக்கு. ஆனா அவன் இன்னும் இன்னும் உயரங்களைத் தொடக் காத்திட்டு இருக்கான். சிம்பு இந்த இடத்துக்கு வந்து விடுவான்னு நினைச்சுப் பார்த்தீங்களான்னு கேட்குறாங்க, அவனுக்கு மூணு வயது இருக்கும் போது லிட்டில் சூப்பர் ஸ்டார்ன்னு படத்துல பாட்டு வெச்சேன் மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்து சினிமா சொல்லிக் கொடுத்தேன். இந்த உலகம் புரிய வெச்சேன். எல்லாமும் அவனுக்குத் தெரியும். இப்ப அவனா வந்து மேலே நிற்குறான். எல்லாமும் நல்லதாகவே நடந்திருக்கு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.